தமிழ் திரையுலகின் வரலாற்றில் எந்திரன் பல விஷயங்களில் ஒரு முன்னோடி. மெகா பட்ஜெட், ஜாம்பவான்களின் கூட்டணி, WIDE RELEASE, அயல்நாட்டு கலைஞர்களின் பங்களிப்பு, ஊதியம், படத்தின் விலை, வெளியிட்ட தியேட்டர்களின் எண்ணிக்கை, விநியோகஸ்தர்களின் லாபம், மொத்த வசூல் இப்படி பல விஷயங்களில் புதிய சாதனைகளை படைத்து முன்னோடியாக அமைந்துள்ளது.
இன்றைக்கு எல்லோரும் துணிவுடன் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் ரஜினியின் படங்கள் காட்டிய வழி முறைகளே. உலக நாடுகளில் மூளை முடுக்குகளிலெல்லாம் தமிழ் படங்களுக்கு மார்கெட் இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தியவை நம் படங்களே. இன்றைக்கு அதே வழியில் பயணம் செய்து பல படங்கள் ஜீவிக்கின்றன.
அதே போல, இசை வெளியீட்டை அயல்நாடு ஒன்றில் - மக்கள் முன்னிலையில் - பிரம்மாண்டமாக - நடத்தி அதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து, இசை வெளியீட்டில் புதிய சரித்திரத்தை துவக்கி வைத்ததும் நாம் தான்.
ஒரே ஒரு திரையரங்கில் ரிலீஸ் ஆகும் பல ஊர்களில் இம்முறை மூன்று திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்பட்டது. ரிலீஸ் சென்றே அல்லாத பல ஊர்களில் கிராமப்புறங்களில் கூட ரிலீஸ் ஆன எந்திரன் அங்கும் வசூலை வாரி குவித்தது. சேலம் விநியோக வட்டத்தில் உள்ள வளசையூர் என்னும் ஊரில் உள்ள ஆனந்த் திரையரங்கில் எந்திரன் செய்த மொத்த வசூல் என்ன தெரியுமா? ரூ.4 லட்சம். (இங்கு இதுவரை அதிகப்படியான கலக்ஷன் ரூ.1 லட்சம் தான்).
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் 70 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது எந்திரன். இத்துனை திரையரங்கில் ரிலீஸ் ஆன போதும் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மந்திரச் சொல், எந்திரன் என்னும் ராக்கெட்டை தங்கு தடையின்றி மேலே பாய செய்யும் எரி பொருளாக அமைந்தது.
எந்திரனின் ஓட்டத்தை பற்றி பொறாமையின் காரணமாக குதர்க்கமான கேள்வி எழுப்புவோர், வேறு படங்கள் டிசம்பரில் வெளியாகத்தன் போகிறது. அந்த படங்கள் எத்துனை திரையரங்கில் வெளியாகின்றது, எத்துனை திரையரங்கில் இரு வெள்ளிக்கிழமை கழித்து தாக்குபிடிக்கிறது, பொங்கலுக்கு முன்பு எத்துனை திரையரங்கில் நிற்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம்…!
எப்படி பார்க்கிலும், எந்திரனின் வெற்றி ஈடு இணையற்றது. மகத்தானது. சூப்பர் ஸ்டார் ஒருவரை தவிர யாரும் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது.
பொள்ளாச்சி பகுதியில் எந்திரனை வாங்கி வெளியிட்ட வெளியீட்டாளர் திரு.எஸ்.ரகுபதி கூறுகையில் :
“இது வரை நான் வெளியிட்ட படங்களில் அதிக வசூல் தந்தது எந்திரன் தான். சூப்பர் ஸ்டார் தவிர வேறு யார் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இந்த வெற்றியை உறுதி செய்ய இயலாது. ரஜினியில்லாத எந்திரனை நினைத்து கூட பார்க்கமுடியாது. அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த படத்தை நாங்கள் வாங்கியிருக்கமாட்டோம் என்பது தான் உண்மை. இத்துனை திரையரங்கில் ரிலீஸ் செய்தும், நாங்கள் தைரியமாக வாங்கினோம் என்றால் ரஜினி சார் மீதும் அவரது செல்வாக்கு மீதும் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான்.
“தவிர அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதால், இந்த படத்தை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சன் பிக்சர்ஸ் வர்த்தகம் செய்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். வர்த்தக ரீதியாக இந்த படம் வெற்றிகரமாக அமைய காரணமான சூப்பர் ஸ்டாருக்கும், இந்த வாய்ப்பை எங்களுக்கு நல்கிய சன் பிக்சர்சுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”
“எந்திரனை நான் இரு திரையரங்கில் (முருகாலையா, A T S C) ரிலீஸ் செய்தேன். முன்னரே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, - புதிய படங்களுக்கு வழி விடுவதற்காக - அதில் ஒரு திரையரங்கில் சில வாரங்கள் கழித்து படத்தை திரும்ப பெற்றேன். தற்போது A T S C திரையரங்கில் 50 வது நாளை கடந்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்திரனைப் பொருத்தவரை எங்கள் திரையரங்கில் இன்னும் ஓரிரு வாரங்கள் தொடர்ந்து ஓடும். பல புதியபடங்களை தாக்குபிடித்து இன்று 50 வது நாளை எந்திரன் தாண்டுவது சாதாரண விஷயம் அல்ல….!” நெத்தியடியாக முடித்துக்கொண்டார் திரு.ரகுபதி.
மலைடா… அண்ணா..மலை!!!!!
ஆந்திராவில் “C” சென்டர்களில் கூட ரோபோவின் ராஜ்ஜியம் தான்!! - Exclusive AP Box-office Report
ஆந்திர பாக்ஸ் ஆபீசில் எந்திரனின் மந்திர சாதனை பற்றிய புள்ளி விபரங்களை முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது எந்திரனின் வெற்றி குறித்த தொலைகாட்சி செய்தி ஒன்றையும் திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுவதையும் பார்ப்போம்.
தெலுங்கிலும் கலக்கும் ரோபோ - TV 9 சிறப்பு செய்தி
செய்தியின் தமிழாக்கம் :
//”தென்னிந்தியாவில் ரஜினியை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை. (கவனிக்க.. தென்னிந்தியாவில்!). அது ரோபோவால் மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்த தேசத்திலேயே மிகப் பெரிய ஹீரோவாக ரஜினி உருவெடுத்துவிட்டார். அவரது லேட்டஸ்ட் படமான ரோபோ, தெலுங்கு திரையுலகை கலக்கு கலக்கென்று கலக்கி வருகிறது.
பல முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் இதனால் கலங்கிப் போயிருக்கின்றனர். ஒரு டபிங் படம், பல ஏரியாக்களில் முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை ஓரங்கட்டியிருக்கிரதேன்றால் அது சாதாரண விஷயம் இல்லை.
Robo 50 days centres in Vizhag alone - (other districs separate)
ஆரம்ப காலம் முதலே ரஜினியின் படங்கள் தெலுங்கில் சக்கை போடு போட்டுவருகின்றன. பாட்ஷா காலத்தில் இது வலுப்பெற்று, சந்திரமுகி காலத்தில் இது உச்சத்தை அடைந்தது. சிவாஜியில் அது நீடித்தது. ரோபோவில் அது எங்கோ சென்றுவிட்டது.
ஆந்திராவில் ரோபோவை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, ஒரே குழப்பம். குறிப்பாக நிஜாம் ஏரியாவில், படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிச்சயமற்ற நிலை தான். யார் ரிலீஸ் செய்யப்போவது, எந்த தியேட்டர்களில் என்று பல கேள்விகள்… என்ற குழப்பம் தான். ஆனால் டிக்கட் புக்கிங் துவங்கிய சில மணி நேரங்களில் ரோபோ அனைத்து கணிப்புக்களையும் தவிடு பொடியாக்கி முதலிடத்தை பிடித்துவிட்டது.
ஆந்திராவின் ‘C’ சென்டர்கள் என்றழைக்கப்படும் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகளில் கூட படம் பட்டையை கிளப்பிவிட்டது.
எப்படியோ ஆந்திராவின் முன்னணி ஹீரோக்களுக்கு ரோபோ ஒரு சவால் தான்.”//
நேரடி தமிழ் படமாகவே கேரளாவில் இன்னும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் எந்திரன்!
ஆந்திராவில் மட்டுமல்ல, கேரளாவிலும் எந்திரன் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆந்திராவில் எந்திரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி சாதனை படைத்தது என்றால், கேரளாவில் எந்திரன் நேரடி தமிழ் படமாகவே இந்த போடு போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் 50 நாட்களை கடந்து கேரளாவில் இன்னும் பல ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பரசுராமர் பூமியிலும் சூப்பர் ஸ்டார் சக்கரவர்த்தி தான். கேரளாவில் மட்டுமே சுமார் 125 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது எந்திரன் என்பது கவனிக்கவேண்டியது.
கேரளாவில் எந்திரனை வாங்கிய தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே சுமார் எட்டு கோடி ரூபாய்கள் கிடைககும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்திரனுக்கு முன்பும் பின்பும் பல நேரடி மலையாளப் படங்கள் ரிலீசானபோதும் எந்திரனின் உடும்பு பிடி இன்னும் பாக்ஸ் ஆபீசிலிருந்து விலகவில்லை. பல படங்கள் எந்திரனுக்கு பின்னால் தான் இருக்கின்றன - வசூலில்.
|