எந்திரனின் இந்த இமாலய வெற்றிக்கு பல காரணங்கள் இருப்பினும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எந்திரன் பெரிதும் கவர்ந்தது தான் முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தனியே திரைப்படத்திற்கு செல்ல முடியாது. அவர்களுடன் பெற்றோர்களும் செல்லவேண்டும். So, ஒரு குழந்தை படத்திற்கு செல்கிறது என்றால் குறைந்தது மூன்று பேராவது அதனுடன் செல்ல வேண்டும்.
பள்ளி செல்லும் வாண்டுகள் பலரிடம் நாம் விசாரித்ததில் அவர்கள் பள்ளிகளில் ஹாட் டாபிக் இன்று எந்திரன் தான்.
எட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் முதல் பாதியில் வரும் சிட்டி தான் அவர்களுக்கு பிடித்த ஹீரோ. எட்டு வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வில்லனாக கலக்கும் சிட்டி தான் பேவரைட்.
நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டில் நேற்றைக்கு முன்தினம் நடந்த சம்பாஷனை இது.
“கிரீஷ், டி.வி. கொஞ்சம் போடு…”
“டி.வி. போடுன்னு சொல்லாதேம்மா….. டி.வி.யை ஆண் பண்ணுன்னு சொல்லு.”
“சரிப்பா… டி.வி.யை. கொஞ்சம் ஆன் பண்ணு…”
இதெப்படி இருக்கு?
எந்திரன் படம் முழுக்க முழுக்க குழந்தைகளால் ரசிக்கப்பட்டாலும், அவர்கள் படத்திலிருந்து அடிக்கடி இமிடேட் செய்யும் காட்சிகள் எவை?
நம் தள வாசகர் வெங்கடபதி கூறுகிறார்: “என் பையனை பொறுத்தவரை (வயது 6) நான் ஏதாவது கேட்டு அவனுக்கு பதில் சொல்ல தெரியலேன்னா, “ம்மே…” ன்னு கத்திட்டு ஓடிடுறான். ஹோம் வொர்க் ஏண்டா செய்யலேன்னான்னு கேட்டா கூட இதே பதில் தான்.” என்று அலுத்துக்கொள்கிறார்.
நண்பர் ராஜேஷ் கூறுவது வேறொரு வகையான அனுபவம். தான் வசிக்கும் பிளாட்டில் உள்ள குழந்தைகள் யாரிடமாவது “ஹூ ஆர் யூ?” என்று தப்பி தவறி கேட்டுவிட்டால் குழந்தைகள் கூறும் ஒரே பதில், I am Chitti the Robot, Speed 1 Terra Hertz Memory 1 Zetta Byte என்பது தான். அந்தளவு, I am Chitti the Robot, Speed 1 Terra Hertz Memory 1 Zetta Byte - என்ற வாக்கியம் குழந்தைகள் மத்தியில் இன்று ரொம்ப பாப்புலர்.
கொசுவுடன் சிட்டி பேசும் காட்சி, ட்ரெயின் ஃபைட் சீக்வென்ஸ், கிளைமேக்சில் காரை ரோபோ பாம்பு விழுங்கும்
TRIMBLE INDIA PVT. LTD. நிறுவனத்தில் பணிபுரியும் நாம தள வாசகர் கண்ணன் வைரமணி, கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில், குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாம் முறை மூன்றாம் முறை, அவர்களை எந்திரனுக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள் ஏராளம். நான் ஆல்ரெடி என் மகனுடன் மூன்று முறை பார்த்துவிட்டேன். திரும்பவும் இந்த வாரம் அவன் விருப்பத்தின் பேரில் சத்யம் திரையரங்கில் புக் செய்துள்ளேன். சத்யம் திரையரங்கம் அவன் பேவரைட்டான ஸ்க்ரீன்களில் ஒன்று. என் மகன் இதற்க்கு முன்பு, இந்தளவு விரும்பி பார்த்த திரைப்படம் ‘அவதார்’ என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.
KAARTHIKAA PLASTICS நிறுவனத்தில் துணை.மேலாளராக பணிபுரியும் நம் தள வாசகர் சங்கர் கூறுகையில், “நான் மற்றும் எனது நண்பர்கள் க்ரூப் (5 பேர்) அனைவரும் சேர்ந்து மொத்தம் 31 பேர் அவரவர் முழு குடும்பத்துடன் எந்திரனை கண்டு ரசித்தோம். அனைவருக்கும் எந்திரன் மிகவும் பிடித்துவிட்டது என்பதை சொல்ல தேவையில்லை. என்றாலும், எங்களைவிட எங்கள் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்துவிட்டது என்பது தான் உண்மை. திரும்பவும் அழைத்து செல்லும்படி எங்களை நச்சரித்து வருகிறார்கள். இதே போல, அனைவரும் குடுமபத்துடன் செல்வது என முடிவெடுத்துள்ளோம். அநேகமாக தேவி காம்ப்ளெக்ஸ் அல்லது மாயாஜாலில் எங்கள் அடுத்த எந்திர தரிசனம் இருக்கும்.” என்று கூறுகிறார் சங்கர்.
மார்க்கெடிங் துறையில் பணியாற்றும் நம் தள வாசகர் ராஜா கூறுவது என்னவென்றால், “என் அக்கா மகன், பேரு பிரதீப் (6). வாணி வித்யாலயாவில் படிக்கிறான். இதுவரை மூன்று முறை பார்த்துவிட்டான். முதல் முறை ஆரவாரத்துக்கு நடுவுல பார்த்ததுனால ஒன்னும் தெரியலே. ஆனா இரண்டாவது முறை பார்த்தபோது க்ளைமேக்ஸ் காட்சியில் அவன் அழுதேவிட்டான். சமாதானப்படுத்தி கூட்டிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரோபோ மாதிரி இமிடேட் செய்வது அவனுக்கு பிடித்த ஒன்று. சிட்டி மாதிரி நடப்பது, ஏதாவது கேட்டால் பதில் சொல்லிவிட்டு ‘டாட்’ என்று கூறுவது இப்படி அவனிடம் ரோபோ பாதிப்புக்கள் அதிகம். (நம்ம கிட்டேயே இருக்கும்போது, குட்டிப் பையான் அவன்கிட்டே இருக்காதா?)
ஒரு ஐ.டி. நிறுவனத்தில் துணை H R அதிகாரியாக பணிபுரியும் நம் ரசிகர் பார்த்தசாரதி கூறியதாவது, “என் அக்காவின் குட்டி மகன், பெயர் ருஷில் (வயது 5) ரோபோ படம் பார்த்ததில் இருந்து, அவனுடைய ஃபேவரைட் வசனம், எதை கேட்டாலும் ‘ரோபோ’ என்பது தான். ரோபோ ரஜினி கண்ணாடி முன்பு நின்று வித விதமான ஹேர் ஸ்டைல்களை காண்பிப்பது போலவே, தனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து, நேச்சுரல்ஸ் சலூன் சென்று அதே போல ஸ்டைலை மாற்றிக்கொண்டான். அந்தளவு ரோபோ குழந்தைகளை வசீகரித்துள்ளது.” என்றார்.
“இதுவரை அப்பா அம்மாவுடன் இரண்டு முறையும், என்னுடன் ஒரு முறையுமாக மூன்று முறை ரோபோ பார்த்துவிட்டான் ருஷில். நான் கூட ரெண்டு தடவை தாங்க பார்த்திருக்கேன்.” பெருமூச்சு விடுகிறார் பார்த்தசாரதி.

@ Thiagaraja... Jostling family crowd after 3rd week
தியேட்டர் விசிட் சுவாரஸ்யங்கள்…
நாம் திரையரங்குகளுக்கு சென்று எந்திரன் பார்த்தபோது, படம் பார்க்க வந்திருக்கும் குழந்தைகளின் பல்ஸை அறிய முயற்சி செய்வோம். அப்போது நடந்த சில சுவாரஸ்யமான சமபவங்கள்:
சென்ற வாரம் ஆல்பட் திரையரங்கிற்கு, நண்பர்களுடன் (ஹரி சிவாஜி, பாலமுருகன், ராஜன், கண்ணன், பிரசாத்) சென்றிருந்தேன். உள்ளே செல்லும்போதே அலம்பல் தான். இருக்கையில் உட்கார்ந்த பின்பும் தொடர்ந்த எங்கள் ஆரவாரம் ‘S U P E R S T A R’ என்ற டைட்டில் போடும்போது உச்சகட்டதை அடைந்தது.
படம் ஆரம்பித்த சில கணங்கள் கழித்து தான் கவனித்தேன். எங்களுக்கு பின்னால் கணவன், மனைவி, மற்றும் குழந்தைகள் அடங்கிய குடும்பம் ஒன்று படத்தை ரசித்து கொண்டிருந்ததை. “நம்ம பின்னாடி பேமிலி ஆடியன்ஸ் இருக்காங்கப்பா… கொஞ்சம் அடக்கி வாசிப்போம். அவங்களுக்குக் டிஸ்டர்பன்சா இருக்ககூடாது” என்று நான் நண்பர்களிடம் கூற, அதை கவனித்துவிட்டார் அந்த நபர்.
“சார்… நோ ப்ராப்ளம். நோ ப்ராப்ளம். நீங்க என்ஜாய் பண்ணுங்க… எங்களுக்கு நோ டிஸ்டர்பன்ஸ் அட் ஆல். தலைவர் படம். ரெண்டு வருஷத்துக்கு பிறகு வருது. நல்லா என்ஜாய் பண்ணுங்க” என்று பெருந்தன்மையுடன் கூற, அவருக்கு நன்றி கூறினேன்.
படம் பார்க்க ஆரம்பித்த பிறகு, நாங்கள் என்ஜாய் செய்ததற்கு ஈக்வலாக அவரின் குட்டி பெண்ணும் என்ஜாய் கைதட்டி எம்பி குதித்து குதித்து என்ஜாய் செய்தாள். இடைவேளையில் அந்த குட்டிப் பெண்ணுடன் பேசினேன். பெயர் அர்ச்சானாவம். மிகப் பெரிய ரஜினி ரசிகையாம். தன் வகுப்பில் பெருமபாலானோர் படத்தை பார்த்துவிட்டதாகவும், அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருப்பதாகவும், கூறினாள். வில்லன் ரஜினி மீது மட்டும் குழந்தைகளுக்கு சற்று பயமிருப்பது அவளிடம் பேசியதிலிருந்து தெரிந்தது. அவளின் ஒரு வயது தம்பி பாப்பா, சமர்த்தாக எந்த வித அழுகையும் இல்லாது படம் பார்த்தது, மிகப் பெரிய ஆச்சரியம் என்று அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்தது.
தேவியில் கண்ட காட்சி…
அதே போல, ஞாயிறு தேவி பாரடைசில் நான், நண்பர் ஸ்ரீராம், ராஜன், பிரசாத், ராஜா உள்ளிட்டோர் எந்திரன் பார்த்தோம். எங்கு பார்த்தாலும் குழந்தைகள் தான். முழுக்க முழுக்க FAMILY ஆடியன்ஸ் தான். நல்ல ரெஸ்பான்ஸ். திரையரங்கமும் அட்டகாசம். நல்ல சவுண்ட் EFFECT. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, மழலைப் பட்டாளம் அடங்கிய ஒரு குடும்பத்தை பார்க்க, அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

@ தேவி தியேட்டர். - சிட்டியாக மாறிய சிறுவன்....
“படம் எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா………?”
அடுத்த நொடி அவர்களிடம் வந்த ஒரே வார்த்தை “சூப்பர்” என்பது தான். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் தியேட்டருக்கு வருவதாகவும், மொத்த குடும்பமும் எந்திரனை மிகவும் ரசித்ததாக அந்த குடுமப் தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.
அவர்கள் அனுமதியுடன் அவர்களை புகைப்படமேடுத்தேன்.
அந்த சிறுவன் என்ன செய்கிறான் என்று பாருங்கள். காலை தூக்கி ஒரு அசத்தலான போஸ் தருகிறான் பாருங்கள். சிட்டியாக மாரிவிட்டானாம் அந்த சிறுவன். இது எப்படி இருக்கு?
AVATAR க்கு பிறகு குழந்தைகள் அதிகம் வருவது எந்திரனுக்கு தான்

THE NAME IS RAJINIKANTH புத்தகத்தை எழுதிய டாக்டர்.காயத்ரி ஸ்ரீகாந்த் கூறுகையில், “குழந்தைகளை எந்திரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அதற்க்கு என் குழந்தைகள் ஒரு உதாரணம். என் குழந்தைகள் ரோஷன் (10), மற்றும் சம்யுக்தா (10) இருவரும் இதுவரை ஆறு முறைக்கு மேல் பார்த்துவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களை எந்திரனுக்கு அழைத்து செல்லவேண்டியிருக்கிறது.
நல்லா படிக்கணும். நல்லா படிச்சா தான் எந்திரன் கூட்டிட்டு போவேன், என்று நான் சொல்ல, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டனர் என் குழந்தைகள். நான் சொல்லாமேலே, இப்போதெல்லாம் ஒழுங்காக படிக்கின்றனர். கரெக்டாக ஹோம் வொர்க் செய்கின்றனர். நான் வருஷக்கணக்கா சொல்லியும் கேக்காதவர்கள் எந்திரன் மேல் உள்ள பிரியத்தால் தற்போது ஒழுங்காக படிக்கின்றனர். கொடுத்த வாக்கை காப்பாற்ற நானும் ஒவ்வொரு வாரமும் அவர்களை படத்திற்கு அழைத்து செல்கிறேன். வேற வழி?
“எந்தெந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க?” என்று நாம் கேட்க, “எதுல பாக்கலேன்னு கேளுங்க… அந்தளவு எல்லா தியேட்டர்ச்ளையும் படத்தை பார்த்தாச்சு.”
எந்திரன் CRAZE குழந்தைகளிடம் எந்தளவு உள்ளது?
“வரிக்கு வரி படத்தை சொல்றாங்கன்னா பார்த்துக்கோங்களேன்”
நாம் பேசும்போது இன்னொரு தகவலை சொன்னார் டாக்டர் காயத்ரி. இப்போதே அவர் மகன் ரோஷன், “நான் ரோபோடிக்ஸ் தான் படிப்பேன். நோ டாக்டர் நோ என்ஜினீயர்” என்று சொல்லிவிட்டானாம். இருவரும் அடம்பிடித்து, அவர்கள் படிக்கும் ஹரி ஸ்ரீ வித்யாலயாவில், தற்போது ரோபோடிக்ஸ் ஸ்பெஷல் வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களாம். TOY ரோபோ மாடலிங், அசெம்ப்ளிங் அப்புறம் DISMANTLING அனைத்தும் உண்டாம் அந்த வகுப்பில். எப்படி, கேட்கவே சுவாரஸ்யமா இருக்குல்ல…?
மற்றொரு தகவலையும் கூறினார் டாக்டர் காயத்ரி, “என் தங்கை மகன், பெயர் சஞ்சய் (வயது 5). அவனோட பர்த்டே கிப்டா சிட்டி மாதிரி ஒரு ரோபோ பொம்மை தான் வேணும்னு அடம்பிடிக்கிறானாம்.” என்றார் சிரித்துக்கொண்டே.
“படம் முழுக்கவே குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் என்றாலும், அந்த ட்ரெயினில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் கிளைமேக்சில் சிட்டி தன்னை ஒவ்வொரு பாகமாக DISMANTLE செய்யும் காட்சி, பூம் பூம் ரோபோடா பாடல் இதெல்லாம் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன.” என்கிறார் டாக்டர் காயத்ரி.
“சரி.. குழந்தைகளை எந்திரன் கவர்ந்துள்ளது ஓகே. சூப்பர் ஸ்டார் பற்றி பயோகிராபியே எழுதியிருக்கிறீர்களே, உங்களுக்கு எந்தளவு பிடித்திருக்கிறது?” நாம் கேட்க…
என்னங்க இப்படி கேட்டுடீங்க. It’s a fabulous movie worth watching multiple times. தலைவர் கலக்கியிருக்கிறார்ல. என்கிறார் டாக்டர் காயத்ரி.

நம் தள வாசகர் திருமதி சுஜாதாவிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது, “நாங்க சில வருடங்களுக்கு முன்பு தான் யூ.எஸ். லே இருந்து வந்தோம். என் டாட்டர் பேரு ஸ்ரீ நிதி.(10). அவளுக்கு தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தெரிந்ததே ரஜினி, ஷாருக், ஐஸ்வர்யா ராய், கஜோல் இவங்க தான். வேற யாரையும் தெரியாது. இந்தியா வந்ததுலேயிருந்து சந்திரமுகி, சிவாஜி, 2012, அவதார், உள்ளிட்ட சில படங்களுக்கு தான் என் டாட்டரை தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கேன். இப்போ ரோபோ. இதுவரை 2 முறை பார்த்துட்டா. பொதுவா, அவ எந்த மூவிக்கு போகணும்னு சொன்னாலும் ஒரு முறை தான் கூட்டிட்டு போவேன். இந்த முறை, எந்திரனை மட்டும் இன்னொரு டயம் பார்க்கனும்னு சொன்னா. இதோ இப்போ, மூணாவது முறை போகபோறோம்.
முதல் முறை காசி தியேட்டர்ல, அடுத்தது சத்யம்ல, மூணாவது ஏன்கமா இனாக்ஸ் இல்லை பீ.வி.ஆர். ல இருக்கும்.
படத்துல ஸ்ரீ நிதிக்கு ரொம்ப பிடிச்ச சீன் கொசு வர்ற சீன் தான். (இப்போ புரியுதா ஷங்கர் ஏன் அந்த சீனை வெச்சாருன்னு?). தவிர, சிட்டி ஷோ கேஸ் டான்ஸ், காதல அணுக்கள் அப்புறம் பூம் பூம் ரோபோடா இதெல்லாம் அவளோட பேவரைட்.
கடைசீயில், சிட்டி தன்னை DISMANTLE செய்துகொள்ளும் அந்த காட்சி நம்மையே ஏதோ செய்கிறதென்றால், குழந்தைகளை அது எந்தளவு பாதித்திருக்கும்?
“க்ளைமேக்ஸ்ல சிட்டி தன்னை DISMANTLE பண்ணிக்கிற சீன அவளை ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஏன்மா DISMANTLE பண்ணனும்? யாருக்கும் தெரியாம சிட்டியை அவங்க வீட்டுலயே ஒரு TOY FRIEND ஆ வெச்சிக்கிலாமில்லே… அந்த வீட்டுல தான் குழந்தைங்க இருக்காங்கல்ல… அவங்க கூட அது பாட்டுக்கு விளையாடிகிட்டு இருக்குமே… வெளியில ஏன் சொல்லணும்? பாவம்மா சிட்டி…” என்பாளாம். இது தான் அவளோட லாஜிக். (ஷங்கர் சார் கவனத்துக்கு!)
“ஷங்கர் இதை சூப்பர் ஸ்டாரை வைத்தே இரண்டாம் பாகம் எடுக்கலாம். நிச்சயம் வெற்றி பெரும். அதற்க்கு ஏற்ற படம் இது!” என்று கூறுகிறார் திருமதி.சுஜாதா.
திரையரங்குகளை பொறுத்தவரை இப்படி குழந்தைகள் படையெடுப்பது, அவர்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். ஒன்று திருட்டு டி.வி.டி.மோகத்தை மிஞ்சியது. மற்றொன்று டிக்கட் வருவாயை தவிர இரண்டாம் கட்ட வருவாய்களான, கேண்டீனில் பாப்கார்ன், ஐஸ் க்ரீம், உள்ளிட்ட உணவு பொருட்கள் பன்மடங்கு விற்பனையாகின்றன.
சரி…. குழந்தைகளின் இந்த எந்திரன் மோகத்தை பற்றி தியேட்டர்கள் என்ன கூறுகின்றன?
தேவி திரையரங்க மேலாளர் திரு. வி.ஆர். ஷங்கர் கூறுகையில், “பொதுவாகவே ரஜினி படம் என்றால் குழந்தைகள் அதிகளவு வருவார்கள். ஆனால் எந்திரனுக்கு CHILDREN ஆடியன்ஸ் மிக அதிகம். எங்கள் வளாகத்திற்கு எந்திரனை பார்க்க அதிகளவில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகிறார்கள். இதன் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். இதற்க்கு முன்பு, எங்கள் காம்ப்ளெக்சில் அவதார் படத்திற்கு தான் குழந்தைகள் அதிகளவில் வந்தார்கள்.” என்று கூறுகிறார்.
“கோவில் திருவிழாவில் ரோபோ செய்யும் காமெடி, அப்புறம் ட்ரெயின் ஃபைட் sequence, கொசுவுடன் பேசும் காட்சி, பூம் பூம் ரோபோடா பாடல், இறுதியில் சிட்டி தன் பாகங்களை கழற்றி வைக்கும் காட்சி இதெல்லாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளன. குழந்தைகளின் அடம் காரணமாக இரண்டாம் முறை மூன்றாம் முறை அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். It’s purely RAJINI MAGIC!” என்றார் திரு.வி.ஆர்.ஷங்கர்.
இந்த பதிவு வெளியாக ஒத்துழைத்த அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி. குறிப்பாக தனது பிசியான அலுவல்களுக்கிடையேயும் நம்மிடம் பேசிய தேவி திரையரங்க மேலாளர் திரு.ஷங்கர் மற்றும் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் நம் ரசிகர்கள் சார்பாக நன்றி. நன்றி.
|