உன் பார்வை ஒன்றே போதுமே… திருச்சி ரசிகர்களின் அசத்தல் போஸ்டர்!
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று ரசிகர்கள் வித விதமான போஸ்டர்களை எழுப்பி அதை போயஸ் கார்டன் மற்றும் சுற்றுப்புறங்களில் ஓட்டுவது வாடிக்கை.
சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மன்றப் பிரமுகர்களின் போஸ்டர்களை இதில் நாம் பார்க்கலாம். வழக்கம் போல, இந்த ஆண்டும் திருச்சி ரசிகர்களின் போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“கனவு மெய்ப்பட உன் பார்வை ஒன்றே போதுமே!” என்ற கலக்கல் வாசகத்துடன் நம் ரசிகர்கள் ஒவ்வொருவரின் கனவுக்கும் உருவம் கொடுத்து அதை போஸ்டராக எழுப்பி போயஸ் கார்டனில் எழுப்பியுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் பார்வையில் தமிழகம் முழுதும் தொழிட் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி ஏற்பட்டு தமிழக பூத்து குலுங்குவதை போல வடிவமைத்திருக்கும் இந்த போஸ்டரை நாளெல்லாம் பார்க்கலாம். பார்க்கலாம். பார்த்தக்க்கொண்டேயிருக்கலாம்.
அடுத்த கலக்கல் மதுரை ரசிகர்கள். வித்தியாசமாக காலண்டர் வடிவில் ஒரு போஸ்டரை எழுப்பியிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த போஸ்டர்களை பார்க்க எப்படியாவது நான் போயஸ் கார்டன் சென்றுவிடுவேன். கடந்த பல வருடங்களாக நான் இவற்றை பார்த்துவருகிறேன். சில ஆண்டுகளாக தான் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். கட்சி போஸ்டர்கள் ஆக்ரமிக்கும் போயஸ் கார்டன் சுவர்களில் நம் போஸ்டர்களை பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் & எந்திரன் வெற்றி விழா - தங்கள் அலுவலகத்தில் கொண்டாடிய சாப்ட்வேர் ஊழியர்கள் !
OnlySuperstar.com team’s B’day celebrations @ Guild of Service - நெகிழ வைத்த ஒரு கொண்டாட்டம்! Pics!
|