Related Articles
சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் 61வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
திருமணம், நினைவு அஞ்சலி, பாராட்டுவிழா, நாடகம் : ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்
எந்திரன் இன்று மகத்தான ஐம்பதாவது நாள்! வெளியீட்டாளர்கள் கூறுவது என்ன?
ரஜினியாக இருப்பது அத்துணை எளிதல்ல! - ருசிகர பத்திரிகை கட்டுரைகள்
சன் டி.வி.யில் சூப்பர் ஸ்டாரின் பேட்டி! 15 ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றினார்
கே.பி. கேட்ட சரமாரி கேள்விகள்… சலிக்காது பதிலளித்த சூப்பர் ஸ்டார் - இயக்குனர்கள் சங்க விழாவில்
குழந்தைகளின் HOT சென்சேஷன் எந்திரன்!
Endhiran The Robot surpasses all records of box-office collections
அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை எந்திரன் சூப்பர் ஹிட்
குமுதம் விகடன் எந்திரனுக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்தது

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரஜினியின் பன்ச் தந்திரம் என்ற பெயரில் நூலாக வெளியிடு
(Wednesday, 15th December 2010)

சூப்பர் ஸ்டார் சினிமாவில் கூறும் பன்ச்கள் கைத்தட்டி ரசிக்க மட்டுமல்ல… வாழ்க்கையிலும், வணிகத்திலும் பின்பற்றவேண்டிய தாரக மந்திரம் என்பது தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் கூறும் பன்ச் டயலாக்குகளில் பொதிந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்கள் தற்போது புத்தகமாக வெளியாகியுள்ளது. மேட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீசஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் டாலண்ட் மாக்சிமஸ் எனும் மனித வள மேலாண்மை நிறுவனத்தை நடத்திவரும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து இந்த புதிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து அதை வெற்றிகரமாக வெளியிட்டும் உள்ளனர். ரஜினியின் பன்ச் தந்திரம் - (மேனேஜ்மென்ட் மந்திரங்கள், பிசினஸ் யுக்திகள்!) என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது.

இவர்களில் கிருஷ்ணமூர்த்தி வேறு யாரும் அல்ல. ‘கிட்டி’ என்றழைக்கப்படும் பிரபல நடிகர் தான். சூப்பர் ஸ்டாருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். பாட்ஷாவில் டி.ஐ.ஜி.யாகவும் நடித்திருக்கிறார்.

தினசரிக் கூலி தொழிலாளி முதல் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் இயக்குனர் வரை ரஜினியின் பன்ச் டயலாக்குகளுக்கு வரவேற்பு உள்ளது. அவற்றை சாதாரண பன்ச் டயலாக்குகளாக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. அவற்றை உற்சாகமூட்டும் தூண்டு கோளாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”  - மேலோட்டமாக பார்த்தால் இது பன்ச். ஆனால் ஆழமாக பார்த்தல் இது உணர்த்தும் அர்த்தம் புரியும். “எதையும் அழுத்தம் திருத்தமாக நறுக்கென்று சொல்லவேண்டும்’; என்பது தான் இது உணர்த்தும் பொருள்.

கதம் கதம் - முடிஞ்சுது முடிஞ்சு போச்சு…. - இது உணர்த்தும் அர்த்தம் தெரியுமா? “சும்மா, விட்டு தள்ளுப்பா… நடந்தது நடந்து போச்சு. இனி ஆகவேண்டியதை பாரு” - எத்துனை யாதார்த்தம் இந்த வார்த்தைகள்!!!!

கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது - இதன் அர்த்தம்? Simple…. “No pains… no gains”!

இது போன்ற சூப்பர் ஸ்டாரின் பல பன்ச் டயலாக்குகளை ஆராய்ந்து நூலாசிரியர்கள் அவற்றில் புதைந்துள்ள பேருண்மைகளை, நிர்வாகம் மற்றும் மேலாண்மை பாடங்களாக நமக்கு தந்துள்ளனர். மேலே படிச்ச மூணு பன்ச்சே இத்துனை சுவாரஸ்யமா இருக்கே… இந்த முழு புக் எவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும்?

மிகவும் பாராட்டவேண்டிய முயற்சி இது.

இந்நூலின் வெளியீட்டுவிழா சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று எக்ஸ்ப்ரஸ்  அவென்யூவில் உள்ள ஒடிசி வளாகத்தில் நடைபெற்றது. முதல் பிரதியை இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் குரு நாதருமான திரு.கே.பாலச்சந்தர் வெளியிட, சின்னத்திரை அரசி திருமதி.ராதிகா சரத்குமார் பெற்றுக்கொண்டார். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மேற்படி நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பக்கங்கள் : 133 (திருக்குறள் அதிகாரம் போலல்லவா இருக்கு…!) தமிழ் பதிப்பின் விலை : ரூ.80/- ஆங்கிலப் பதிப்பின் விலை ரூ.125/-

கீழ்கண்ட இணைய முகவரியில் இந்த நூல் கிடைககும் :
https://www.nhm.in/shop/P.C.Balasubramanian-Raja-Krishnamoorthy.html

சூப்பர் ஸ்டாரை பார்த்து எத்துனையோ நடிகர்கள் தாங்களும் பன்ச்க்கள் பேசினர். அவையெல்லாம் பஞ்சராகி கடைசீயில் எஸ்.எம்.எஸ். காமெடிகளானது  தான் மிச்சம். ஆனால் தலைவரின் பன்ச்க்கள் பாடமாகவே மாறிவிட்டது பார்த்தீர்களா? அது தாண்டா சாதா ஸ்டாருக்கும் எங்க சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.

சூப்பர் ஸ்டாரின் பன்ச் டயலாக்குகளை பற்றி எகத்தாளமாக கருத்துக்கள் கூறி வந்த சில அறிவு ஜீவிகளின் மனநிலை இனி எப்படி இருக்கும்? நினைக்கவே காமெடியா இருக்குல்ல?!

 

The Much Awaited Book “Rajini’s PUNCHtantra” Officially Launched

The much awaited book, Rajini’s PUNCHtantra – Value Statements for Life and Business Situations – a book comprising ‘punch’ dialogues from Superstar Rajinikant’s movies just got launched today at Odysssey, Express Avenue, Chennai.

The book, authored by PC Balasubramanian, Director, Matrix Business Services and Raja Krishnamoorthy, Director, Talent Maximus was released by legendary film director, K Balachandar, who discovered the phenomenon – Rajinikanth way back in 1975. The first copies of the book were received by Ms. Radikaa Sarathkumar, Chairperson and Managing Director, Radaan Mediaworks and Mr. R U Srinivas, CEO, Caliber Point. And as a surprise to the occasion, we also had Ms. Aishwarya Dhanush also present in the august audience.

Speaking on the book “I have been a keen observer of Rajinikanth for the last 35 years and this book is a dream come true for me. And we are happy to launch it on his Birthday today,” said PC Balasubramainan. Adding his thoughts Raja said “to me, I was more than just a co-author of the book. It was a responsibility on me to ensure the name Rajinikant had to be used with utmost care, and we are happy with the outcome of the book.”

The book is now available at all leading bookstores including Landmark and Odyssey across the city.

From a coolie to a CEO, from a small time entrepreneur to a big business man—Rajini’s punch lines have evoked a nod of acceptance and a smile of acknowledgement! They are simple and yet insightful, and has been quoted by many to communicate their views in a simple but powerful manner!

The authors Bala and Raja, have used these punch lines to bring out the management mantras in corporate as well as daily life settings, highlighting their relevance across the spectrum of Governance, Motivation, Leadership, Commitment, Foresight, Social Responsibility, Value, Timelines, Quality, Reputation, Sharing, Selflessness and more.Indeed a tribute to the man who is like a blazing star in our times.

P C Balasubramanian, a Chartered Accountant by qualification, is one of the founder directors of Matrix Business Services India Pvt Ltd, a leading Verification Company in the country. With a passion in Enterprise/ Institution building he believes that it is people who matter in any company and loves to influence people in the right manner and motivate them to bring the best out of them. He also clearly believes in giving equal importance to the “two lives” - work and personal.

Raja Krishnamoorthy has over 33 years of experience in the field of Human Resources. He is one of the directors of TalentMaximus India, a Chennai based HR services organization. As a trainer and consultant in the area of Organization Development, he does extensive work in Team synergy, Transformation and leadership skills and personal growth through self awareness. He is also an actor, explorer and student of the journey of life…

 

 

தலைவரின் ‘பன்ச்’ பாடமாக மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அநேக சாதனைகளை சூப்பர் ஸ்டார் படைத்திருக்கிறார். அவரது பெயரை உத்வேகமாக எடுத்துக்கொண்டே அநேகம் வாழக்கையில் முன்னேறியிருக்கிறார்கள். முன்னேறி வருகிரார்கள்.

திரையில் அவர் கூறிய பன்ச் டயலாக்குகளில் பொதிந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்களை, தொகுத்து அண்மையில் ‘பன்ச்’தந்திரம் என்ற நூலாக வெளியிடப்பட்டது. நமது தளத்தில் கூட அது பற்றிய செய்தி வெளியானது.

அந்த நூல் உருவானது எப்படி? சூப்பர் ஸ்டார் அந்த நூல் பற்றி அறியவந்தபோது கூறியது என்ன? நூலாசிரியர்கள் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் குங்குமம் வார இதழ் சுவையாக தந்திருக்கிறது.

தான் பேசிய பஞ்ச்களில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்த பன்ச் எது தெரியுமா?

“கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது; அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது!”

தலைவர் வீட்டு வரவேற்பறையில்..!

இதை தான் தனது வீட்டிலேயே அவர் சுவரில் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கிறார்.

ஒவ்வொரு ரசிகனும் மனதில் இருத்தவேண்டிய பொன்மொழி இது.

இதை தான் தலைவர் ஒரு பேட்டியில், “இந்த உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. அதை நாம கொடுத்தே தீரனும். எதுவுமே ஃப்ரீ கிடையாது கண்ணா” என்று கூறியிருப்பார்.

அதாவது நமது புகழுக்கும் பெயருக்கும் நாம் விலை கொடுத்தே தீரவேண்டும். (தலைவர் விலையாக கொடுத்தது தனது ப்ரைவசியை.) இதை தான் குருநாதர் கே.பி.யுடனான நேர்காணலிலேயே கூறியிருப்பார்.

 

 

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சூப்பர் ஸ்டார் ரஜினியும்! ‘லேண்ட்மார்க்’ உணர்த்திய உண்மையும் சுவாரஸ்யமும்!!

சூப்பர் ஸ்டாரின் படங்கள் மட்டுமல்ல அவர் சம்பந்தப்பட்ட அனைத்துமே சாதனைக்கு உதாரணமாக திகழ்பவை தான். அதை மீண்டும் அழுத்தந் திருத்தமாக நிரூபித்திருக்கிறது அண்மையில் வெளியான ‘ரஜினியின் ‘பன்ச்’தந்திரம்’ நூல்.

திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘பன்ச்’டயலாக்குகளில் புதைந்துள்ள, நிர்வாக மற்றும் மேலாண்மை & உளவியல் கருத்துக்களை, அழகாக தொகுத்து, அதை ஒரு புத்தக வடிவில் கொண்டுவந்துள்ளனர் மேட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீசஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் டாலண்ட் மாக்சிமஸ் எனும் மனித வள மேலாண்மை நிறுவனத்தை நடத்திவரும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருபதிப்புக்களிலும் கிடைக்கிறது. கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் மொத்த பக்கங்கள் : 133. சுருக்கமாக சொன்னால் ரஜினி ரசிகர்களின் திருக்குறள் இது. தமிழ் பதிப்பின் விலை : ரூ.80/- ஆங்கிலப் பதிப்பின் விலை ரூ.125/-.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்ட இந்நூல் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. எக்ஸ்ப்ரெஸ் அவென்யூவில் உள்ள ஒடிசியில் (Odyssey) தமிழ் பதிப்பு 200 நூல்களும் ஆங்கிலப் பதிப்பு 200 நூல்களும் மொத்தம் 400 புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன. அடுத்த சில நாட்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்து தற்போது இரண்டாம் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.
———————————————————

அண்ணா நகர்  கனெக்சன்ஸ் (Connexions) இல் விற்பனை பிரிவில் அதிகாரியாக இருக்கும் திரு.அருணிடம் பேசியபோது :

கேள்வி : ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் உங்கள் கிளையில் விற்பனை எப்படி ?

கனெக்சன்ஸ் : எங்கள் ஷாப்புக்கு தமிழ் பதிப்பு 150 & ஆங்கிலப் பதிப்பு 150 வந்தன. தமிழ் பதிப்பு முழுதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஆங்கிலப் பதிப்பு பரபரப்பாக விற்பனையாகிகொண்டிருக்கிறது. நாங்களே இந்தளவு விற்பனையை எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் கட்ட ஆர்டர் பிளேஸ் செய்திருக்கிறோம்.

கேள்வி : யார் யார் நூலை வாங்குகிறார்கள்? எந்த பிரிவினர் மத்தியில் வரவேற்ப்பு உள்ளது?

கனெக்சன்ஸ் : ரஜினி சார் என்றாலே ஆள் கிளாஸ் கிங் தானே. கல்லூரி மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர். முக்கியமாக மேனேஜ்மென்ட் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் & அரசு உயரதிகாரிகள் மத்தியில் இந்நூலுக்கு பலத்த வரவேற்ப்பு காணப்படுகிறது.

கேள்வி : இந்நூல் இப்படி ஒரு வரவேற்ப்பை பெற காரணம் என்ன?

கனெக்சன்ஸ் : முதல் காரணம் ரஜினி. இரண்டாவது ஒரு வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ள முறை. பொதுவாகவே நிர்வாகவியல் சம்பந்தப்பட்ட நூல்களில் இந்த அணுகுமுறை புதியது. ரஜினியின் பன்ச் டயலாக்கில் பிசினஸ் மந்திரமா என்று ஆச்சரியப்பட்டு அனைவரும் வாங்குகின்றனர்.

———————————————————

நமது அடுத்த அனுபவம் லேண்ட்மார்க், நுங்கம்பாக்கத்தில். ஆனால் நாம் இங்கு சென்றது இதற்காக அல்ல. நண்பர் ஒருவர் எனக்கு REFER செய்திருந்த நூல் ஒன்றை வாங்குவதற்கு. இடையில் சில காரணங்களினால் மனச் சோர்வுற்றிருந்த எனக்கு “The Secret” என்னும் நூலை (ஆசிரியர்: Rhonda Bryne) படிக்குமாறு நண்பர் ஒருவர் கூறியிருந்தார். அந்நூலை வாங்க நான் லேண்ட்மார்க் சென்ற போது, அங்கு கவுண்டருக்கு மேலே காணப்பட்ட ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூல் நமது கண்ணை பறித்தது. அடடா தலைவருக்கு ஒரு சல்யூட் என்று அங்கிருப்பவர்கள் முன்பாகவே ஒரு சல்யூட் அடித்தேன் நூலைப் பார்த்து.

விற்பனைப் பிரியவில் இருக்கும் திரு. சாலமன் என்பவரிடம் இது பற்றி கேட்டபோது, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 400 நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதாகவும், ஆங்கிலப் பதிப்பு வெளியான அன்றே மொத்தமும் விற்றுத் தீர்ந்தது எனவும், தமிழ் பதிப்பு இன்னும் 30 நூல்களே பாக்கியிருபப்தாகவும் (டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி), அடுத்த ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

“என்ன சார் புக் எப்படி … ஹிட்டா?” என்று நாம் கேட்டபோது, “வெளியான அன்னைக்கே மொத்த புக்சும் வித்துடிச்சினா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றார் சிரித்துக்கொண்டே.

வந்தது வந்துட்டோம், உள்ளே ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நினைத்து, ரவுண்ட்ஸ் அடித்தபோது எதிரே கண்ணில் பட்ட காட்சி அமர்க்களமானது, அசத்தலானது.

கௌண்ட்டருக்கு  நேர் எதிரே சற்று தொலைவில் மேலே உள்ள ஷெல்பில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூலான “என் கதை” நூல் வைக்கப்பட்டிருக்க அதன் அருகே தலைவரின் ‘பன்ச்’தந்திரம் நூல், அதற்க்கு அருகே சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘பேரைக் கேட்டாலே’. இது எப்படி இருக்கு…!

தலைவரின் ரேஞ்ச என்ன என்று புரிந்து, அவரை உயரத்தில் வைத்து, வைக்க வேண்டியவர்களை பக்கத்தில் வைத்துள்ளார்கள் சென்னையின் மிகப் பெரிய பிரபலமான புத்தகக் கடையில் அவர்களாகவே.

உரிய அனுமதி பெற்று அந்த கண்கொள்ளா காட்சியை கேமிராவால் க்ளிக்கினோம்.

தலைவருக்கு மட்டுமல்ல அவர் புத்தகத்திற்கும் உள்ள மதிப்பு என்ன, புரிய வைத்தது அந்த காட்சி.

———————————————————

புத்தகத்தை வெளியிட்டுள்ள கிழக்கு பதிப்பகத்திடம் பேசினோம்.

விற்பனைப் பிரிவில் மேலாளராக இருக்கும் திரு.பிரசன்னா கூறியதாவது : “ரஜினியின் ‘பஞ்ச்’தந்திரம் நூல் இது வரை நாங்கள் வெளியிட்டுள்ள சினிமா தொடர்பான நூல்களில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தளவு இந்நூல் வரவேற்ப்பை பெறும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது ரீப்ரின்ட் முடிந்து தற்போது மூன்றாது ரீப்ரின்ட் போய்கொண்டிருக்கிறது. ஆர்டர்கள் குவிந்த வண்ணமுள்ளன. சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஆங்கிலப் பதிப்பும், தமிழகத்தின் பிற பகுதிகளில் தமிழ் பதிப்பும் நன்கு விற்பனையாகி வருகிறது. இது தவிர ஆன்லைன் ஆர்டர்களும் நிறைய வருகின்றன. இந்த சிறப்புக்களுக்கு சூப்பர் ஸ்டார் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும்?” என்றார் நெகிழ்ச்சியுடன்.

குறிப்பு : இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருப்பவர் யார் தெரியுமா? அசோக் லேலாந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.சேஷசாயி.

“ஒப்பாரும் மிக்காரும்  இல்லாதவர் ரஜினிகாந்த். தனது செல்வாக்கையும் சமூக அக்கறையையும் இணைந்து வெகு சரளமாக சாதனை புரிந்திருக்கிறார். திரைக்கு வெளியிலான ரஜினியின் செயல்பாடுகளும் வாழ்க்கை முறையும் திரையில் அவர் உருவாக்கும் பிம்பத்துக்கு கூடுதல் நம்பகத் தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன…!”  என அவர் கூறுவதை கவனியுங்கள் கூறுவது மிகப் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர். சூப்பர் ஸ்டாரோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்.

அவரது முன்னுரை பக்கத்தை மட்டும் உரிய அனுமதி பெற்று ஸ்கேன் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். படியுங்கள். மனதில் இருத்துங்கள். ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.






 
0 Comment(s)Views: 813

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information