உலகப் புகழ் பெற்றது ஃபோர்ப்ஸ் என்னும் பிசினஸ் இதழ். அதன் இந்தியப் பதிப்பு - ஃபோர்ப்ஸ் இந்தியா. அசத்தலான பிசினஸ் மற்றும் கார்பரேட் செய்திகளுடன் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இந்த இதழ், தற்போது YEAR END SPECIAL இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.100/- மதிப்புள்ள இந்த இதழில், 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் துறை ஜாம்பவான்கள், தலை சிறந்த நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். மற்றவர்களை பொறுத்தவரை அவர்களை பற்றிய ஒரு அலசல்களுடன் அவர்களது பேட்டி மற்றும் கருத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தலைவர் விஷயத்தில் அவரிடம் கருத்து கேட்பதோ பேட்டி எடுப்பதோ சாதாரணமானதா என்ன?
எனவே, ஒரு வித்தியாசமான கோணத்தில் சூப்பர் ஸ்டாரை பற்றி அலசியிருக்கிறார்கள். நாடே போற்றும் - இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்திருக்கும் ரஜினி என்னும் ஒரு சூப்பர் ஸ்டார் - உண்மையில் எப்படி? அவரது மறுபக்கம் எத்தகையது…? என்று சுவாரஸ்யமாக அலசி, அவரது ஆத்ம நண்பர் ராஜ் பகதூரிடம் பேசி பல விஷயங்களை தந்திருக்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.
சூப்பர் ஸ்டாரை எப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா?
பாலிவுட்டில் நடிப்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திக்கொண்ட ரஜினி, இதோ தற்போது 2010 ஆம் ஆண்டில், அதன் மீது படையெடுத்து கைப்பற்றியிருக்கிறார். அவரின் சமீபத்திய படமான ‘ரோபோ’ பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்து சரித்திரம் படைத்திருக்கிறது. தான் மட்டுமே ‘சூப்பர் ஸ்டார்’ என்பதை மீண்டும் அழுத்தந்திருத்தமாக நிரூபித்திருக்கிறார் ரஜினி. ஆனால், நிஜத்திலோ வெற்றி போதையை தலையில் ஏற்றிக்கொள்ளாது பணிவுடனும் அடக்கத்துடனும் செயல்படுகிறார். புகழ் வெளிச்சத்திலிருந்து விலகியிருக்க கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் அவர் விடுவதில்லை.
அதற்க்கு அடுத்த சில பக்கங்களில் த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. (சூப்பர் ஸ்டார் தவிர சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே திரைத்துறை பிரபலம் இவர் தான். வேறு யாரும் பட்டியலில் இல்லை.). அவரது புகைப்படத்திற்கு கீழே இடம் பெற்றுள்ள வாக்கியத்தை கவனியுங்கள். //”Rajkumar Hirani directed the immensely popular ‘Munnabhai MBBS’, ‘Lage Raho Munnabhai’, and 3 Idiots., which became the highest grossing film ever in India. when it was released. (‘Enthiran/Robot’ recently took its place!).// இது எப்படி இருக்கு!
மலை டா… அண்ணாமலை!
குறிப்பு 1 : ஃபோர்ப்ஸ் இதழின் முக்கிய பக்கங்களை ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன். கட்டுரையின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டாரின் இடப் புறம் கொடுக்கப்பட்டுள்ள க்ளோசப் புகைப்படம் எனது சேர்க்கை ஆகும். கட்டுரையை SINGLE PAGE ஆக கொடுப்பதில் சிரமங்கள் உள்ளன. எனவே ஒரு நல்ல புகைப்படத்தை சேர்க்க விரும்பி அந்த ஸ்டில்லை சேர்த்துள்ளேன்.
குறிப்பு 2 : இந்த கட்டுரையின் தமிழாக்கம் விரைவில் வெளியிடப்படும்.
(Our thanks to Forbes India Magazine and also our site readers Sriram and Vignesh for bringing this to my notice.)
|