Related Articles
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 4 - அருணாச்சலம்
அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை!! இறங்கி வந்த திருமாவளவன் !!
எம் ஜி ஆர் உருவாக்கி வைத்திருந்த மாஸ் ஹீரோ பார்முலாவை மாற்றியமைத்த ரஜினி
அவ்வளவு அழகான பாடலை படத்தில் இருந்து நீக்குவதற்கு எப்படி மனம் வந்தது?
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா
எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா?
சூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர்! கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியமா வேறு நடிகர்களை தேடிக்கொண்ட படங்கள்
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 2 - மன்னன்
மீண்டும் படையப்பா ரஜினியால் அலறப்போகும் சன் டிவி TRP

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஃப்ளாஷ்பேக் : பெத்தராயுடு படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி (1995)
(Tuesday, 16th June 2020)

1995 ஆம் ஆண்டு, ரஜினியின் பிறந்த நாள் நிகழ்ச்சி....

இதையொட்டித் தமிழகத்தின் பல கட்சிகளும் ரசிகர்களும் நடத்திய கோலாகல விழாக்கள், பரபரப்பான டிவி பேட்டி எல்லாமாக சேர்ந்து ரஜினியின் பிறந்த நாள் முடிந்த பிறகு, வியாழக்கிழமை திருப்பதியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையேறினார் ரஜினி.

தமிழகத்தில் நிலவரத்துக்குச் சற்றும் குறையாத வண்ணம் அங்கும் பெருங்கூட்டம் அவருக்காக அலைமோதிக் கொண்டிருந்தது. மேடைக்கு வந்ததிலிருந்து விழா முடிந்து அவர் காரில் ஏறிக் கிளம்பும் வரை ' பாட்ஷாகி ஜிந்தாபாத் ' , ' ராபோயி முக்ய மத்த்திரி (வருங்கால முதல்வர் ) ஜிந்தாபாத் ' என்று கூட்டம் மாறி மாறித் தெலுங்கில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது .

பெத்தராயுடு ' படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி அது. இத்தனைக்கும் இந்தப் படத்தில் ரஜினி செய்திருப்பது சுமார் பதினைந்து நிமிடங்களே வருகிற கௌரவ வேடம்தான் . ஆனால், படத்தின் வெற்றி விழாவில் அவருக்குத்தான் முக்கிய அந்தஸ்து!!!

பொதுவாக சினிமா வெற்றி விழாக்கள் தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் நட்சத்திர ஓட்டலில் மட்டுமே நடக்கும் . ஆனால் , 'பெத்தராயுடு'வின் வெற்றி விழா நடந்ததோ திருப்பதியில் பல ஏக்கர்கள் விரிந்து பரந்து கிடக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் விசாலமான மைதானத்தில்!!!

சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்த அந்த மாபெரும் மைதானத்தில் விழாவில் துவக்கம் முதல் இறுதி வரை உற்சாக ஆர்ப்பரிப்புதான். இந்த விழா நிகழ்ச்சிக்கு ரஜினி செல்வதாகவே இல்லை . ஆனால் , பெத்தராயும் மெயின் ஹீரோவும் , ரஜினியின் நல்ல நண்பருமான மோகன்பாபு விடுவதாக இல்லை.

 சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையின் பிரபல ஓட்டலில் நடந்த ஒரு பிரஸ்மீட்டில் 'ரஜினி தமிழகத்தின் முதல்வராக வந்தே தீர வேண்டும் . அதற்கு தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுக்க நான் தயார்' என்று அறிவித்தவர் மோகன்பாபு. அவர் தான் பெத்தராயுடு படத்தின் கதாநாயகன், என்றாலும் , இந்த வெற்றி விழாவில் தான் சற்றுப் பின்னால் ஒதுங்கிக் கொண்டு பொதுக்கூட்டத்தின் கதாநாயகனாக ரஜினியை முன்னே நிறுத்த விரும்பினார் மோகன்பாபு . ரஜினியை வற்புறுத்தி விழாவுக்காகத் திருப்பதி வரவழைத்தும் விட்டார் . - ஆந்திர முதல்வர் சந்திரபாபுவைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ரஜினியை நோக்கி ' பாட்ஷா , பாட்ஷா ' என்று கோஷமிட்டுக் கையரைத்துக் கொண்டேயிருந்தது கூட்டம்.

முதல் நாள் நன்றாக வழவழ என ஷேவ் செய்யப்பட்ட நன்கு வளர்ந்த தாடியுடன் முகத்துடன் டிவியில் வந்த ரஜினிகாந்த், பால் வெள்ளை நிறத்தில் வெள்ளை வெளேர் என்று குர்த்தாவும் அணிந்து கொண்டு விழாவுக்கு வந்திருந்தார் . தன் அமைச்சரவை சகாக்கள் , சட்டமன்ற , நாடாளு மன்ற உறுப்பினர்கள் சகிதம் வந்திருந்தாலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே ரஜினிக்கு முக்கியத்துவம் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் . அதில் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை !!!

விழா ஆரம்பமான சமயம் சினிமா பிரமுகர்கள் , அமைச்சர்கள் , முதல்வர் என்று ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்து மாலை அணிவித்து மேடையில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார்கள். இந்த வரிசையில் கனைமாணாக கடைசியாக அழைக்கப்பட்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் நடுநாயகமாக உட்கார வைக்கப்பட்டார் ரஜினி. அதைப்போலவே முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதற்குப் பின்னால் கடைசி பேச்சாளராகப் பேசுகிற அந்தஸ்து ரஜினிக்கே அளிக்கப்பட்டது !!!

ரஜினியின் பேச்சைக் கேட்பதற்காகவே வந்திருந்த அந்தக் கூட்டம் 'பாட்ஷாவைப் பேசச் சொல் ... பாட்ஷாவைப் பேசச் சொல்' என்று விழாவின் பாதியிலேயே தெலுங்கில் கூச்சல் எழுப்பியபோது , 'ரஜினி முக்கியமானவர். அவர் கடைசியாகத்தான் பேசுவார். அதுவரை அமைதியாக இருக்க சொல்லுங்கள்' என்று மோகன்பாபு மூலமாகக் கூட்டத்தினருக்கு 'மைக்'கில் சொல்ல வைத்தார் சந்திரபாபு நாயுடு. சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த விழாவில் ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, சந்திரபாபு நாயுடுவிடம்- ஆந்திர அரசியல் பற்றி நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தார் ரஜினி !!!

இதற்கெல்லாம் உச்சகட்டமாக அமைந்தது, சந்திரபாபு நாயுடுவின் பேச்சு !!! ரஜினியை 'மித்ருடு' ( நண்பரே ) என்று குறிப்பிட்டு, 'பெத்தராயுடு படத்தில் மட்டும் உங்களுக்கு நல்ல காரெக்டர் அல்ல, நிஜ வாழ்க்கையில் நல்ல காரெக்டர் உடையவர் நீங்கள். பொதுமக்களின் விருப்பப்படி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் . நீங்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம்'... என்று சொல்லிவிட்டுப் பின்னால் திரும்பி ரஜினியை நோக்கி 'அரசியலுக்கு எப்போது வருகிறீர்கள்?' என்று கேட்பதைப் போல ஒரு பார்வையை வீசினார் . ஆனால் , ரஜினியோ முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை !!!

ரஜினி பக்கம் திரும்பிப் பார்த்தபடியே பேசினார் ஆந்திர முதல்வர். "நீங்கள் மேடையேறியபோது கவனித்தீர்களா?, தமிழகத்தைத் தாண்டியிருக்கும் இந்த ஆந்திர மக்கள் கூட உங்களை "வருங்கால முதல்வர்" என்று சொல்லி கோஷம் எழுப்பினார்கள் !!! நீங்கள் அரசியலுக்குக் கட்டாயம் வர வேண்டும்!!! தமிழகத்தின் நலனை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு இதை நான் சொல்லவில்லை... தேர்தலின் போது உங்களின் ஆதரவு ஆந்திராவில் இருக்கும் எனக்குத் தேவை" என்று சொல்ல , மேடை என்பதையும் மறந்து பெரிதாக சிரித்தார் ரஜினி.

கையெடுத்துக் கும்பிட்டபடியே மைக் அருகே வந்த ரஜினி சுந்தரத்தெலுங்கில் பேச ஆரம்பித்தார் . இவரும் சந்திரபாபு நாயுடுவை மித்ருடு ' என்றே அழைத்தார் . "பெத்த நயினா ஆயின ஆசீர்வாதம் தீசிகோனி ராஜ்ய பரிபாலனம் செய்யால" என்றார். தன் பேச்சில் பெத்த நயினா (பெரியப்பா ) என்று ரஜினி குறிப்பிட்டது NTRரைத்தான் . உங்களின் ஆட்சி தொடர்ந்து நடக்கவும் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய தொகுதிகளைக் கைப்பற்றவும் பெரியவரின் ( NTR ன் ) ஆசி உங்களுக்கு அவசியம் தேவை !!! பெரிய பொறுப்பு கொடுத்து அவரை டெல்லியில் உட்கார வைத்துவிட்டு மாநிலத்தில் நீங்கள் தொடர்ந்து முதல்வராக நீடிக்க அவருடன் சமாதானம் செய்துளெள்ள வேண்டியது அவசியம் என்பதுதான் ரஜினி பேச்சின் ஹைலைட்.

அதைத் தொடர்ந்து பெத்தராயுடு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் மோகன்பாபு , கலைநயத்துடன் தயாரித்துக் கொண்டு வந்திருந்த கனமான ஒரு தங்கக்காப்பு : பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரரால் மூலம் ரஜினிக்கு அணிவிக்கப் பட்டது . பெத்தராயுடு சினிமாவில் ரஜினி அணிந்த அதே ஸ்டைல் காப்பு . ஆனால் , இது நிஜ தங்கம் ! 'இனி எப்போதும் இதை நீங்கள் கழற்றக்கூடாது' என்று ரஜினிக்கு அன்புக் கட்டளை பிறப்பித்தார் மோகன்பாபு , ரஜினி எப்போதும் அதை அணிந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் . கிட்டத்தட்ட முப்பது சவரனில் 'ஜெயண்ட்' சைனாக இருந்தது அந்தக் காப்பு , தான் தயாரிக்கப் போகும் ' பாபு எம்.எல்.ஏ. ' என்ற தெலுங்குப் படத்துக்கு ரஜினியின் கால்ஷீட்டை மேடையிலேயே உரிமையுடன் கேட்டு வாங்கி விட்டார் மோகன்பாபு.

விழா முடிந்த பிறகு மோகன்பாபு அளித்த ஒரு விருந்தில் சந்திரபாபு நாயுடுவும் ரஜினிகாந்த்தும் நீண்ட நேரம் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தனர். நிருபர்கள் சுற்றிலும் இருப்பதைக் கவனிக்காமல், அ.தி.மு.க - காங்கிரஸ் உறவு மீண்டும் மலர்வது நிச்சயமாகிவிட்டது போலிருக்கிறதே என்று சந்திரபாபு நாயுடு கேட்க அதுவரை ரிலாக்ஸ்டாக இருந்த ரஜினி மீண்டும் சரியலாகித் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்த்தார் . பிறகு சந்திரபாபு நாயுடுவைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போய் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார் ரஜினி!!!

 

 

 

 

 

 

 






 
0 Comment(s)Views: 827

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information