நேற்றைய தினம் (07/09/19) ரஜினியிஸ வரலாற்றில் ஒரு முக்கியமான தினம். 43 ஆண்டுகால சினிமா பயணத்தில் 40 ஆண்டுகாலம் SUPER STAR அந்தஸ்தில் அவர் இருந்தாலும், அந்த ரஜினியிசம் ஒரு புது உச்சத்தை தொட்ட நாள் 07/09/18.
ஒரு கதாநாயகன் நடிக்கும் இரு வேறு திரைப்படங்களைப் பற்றிய அறிவிப்பு ஒரே நாளில் வருவது, இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று. அந்த Celebration Mode இல் இருந்து மீண்டு வந்து இந்த கட்டுரையை எழுத எனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது.
1978 இல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாணு வழங்கியபோது அது Black & White யுகம். பிரம்மாண்ட தயாரிப்புகள் மட்டுமே ஈஸ்ட்மேன் கலரில் வந்துக்கொண்டு இருந்தது. இப்போதோ டிஜிட்டல் யுகம். படம் வெளியாகும் முன்பே Piracy பிரிண்ட் வந்து விடுகிறது.
காலம் மாறிவிட்டது, காட்சிகள் தான் மாறவில்லை. ரஜினியின் படத்தைப்பற்றிய செய்தி வருகிறதென்றால் அந்த நாளே விழாக்கோலம் ஆகி விடுகிறது.
ரஜினிக்கென்று ஒரு போர்முலா உள்ளது, அதை மட்டுமே அவர் பின்பற்றி வெற்றி பெறுகிறார் என்று அவரது உழைப்பை மட்டப்படுத்திய பலருக்கு நேற்று தன்னுடைய பாணியிலேயே பதில் சொன்னார் ரஜினி
நேற்று இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு. 2.o, மற்றும் பேட்ட. இவ்விரண்டு படங்களும் இரு எதிர் துருவங்கள்.
1. ஒன்றின் கதைக்களம் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் உச்சம், இன்னொன்று தரை லோக்கலான டைட்டில் .
2. ஒரு டைரக்டர் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல கூடியவர், மற்றோருவர் இளம் இயக்குனர்.
3. ஒன்று பிரம்மாண்டத்தின் உச்சம் , இன்னொன்று வழக்கமான பட்ஜெட்.
இப்படி வித்தியாசங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இந்த இரண்டு படங்களிலும் ஒரே ஆளாய் மனதில் நிற்பது ரஜினி மட்டுமே.
காலாவில் 99% ரஜினி ரசிகர்களுக்கு, ஓப்பனிங் சீனில் ஒரு ஏமாற்றம் வந்ததை மறுப்பதற்கில்லை. அந்த குறையை ரஜினி ரசிகன் என்ற முறையில் தீர்த்து வைக்க வேண்டிய கட்டாயம் கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு இருந்தது. அந்த வீடியோவே முடியும் தருவாயில் தான் தலைவரின் முகம் காண்பிக்கப்பட்டது. அதுவரை வித விதமான ஆங்கெளில் தலைவரை காட்டிக்கொண்டிருந்தார் அந்த தலைவரின் ரசிகன். (வேறு யாரு நம்ப டைரக்டர் தான்).
பிரமாண்டத்திற்கு பெயர் போன "Sun Pictures" இந்த படத்திற்கு "பேட்ட" என்ற தரை லோக்கல் பெயர்வைத்ததில் இருந்தே "Expect the Un-Expected" என்று கார்த்திக் சுப்பாராஜ் உணர்த்தி விடுகிறார். (அதுவும் "பேட்டை" என்று தூய தமிழ் கூட இல்லை. இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல).
கல்லூரி ப்ரொபசராக ரஜினி வருகிறார் என்பது போல தகவல்கள் முன்னர் வந்திருந்தாலும், மோஷன் போஸ்டரில் வரும் கெட்-அப்பிற்கும், கிளப்பப்பட்ட யுகங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று தான் தோன்றுகிறது. அதிரடியான கெட்-அப்பில் இருக்கும் ரஜினியை ஒருவேளை ப்ரொபஸராகவே காண்பித்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது ரஜினியை விருந்தாக கார்த்திக் சுப்பாராஜ் படைக்கப் போகிறார் என்பதில் ஐயமில்லை.
பேட்ட என்ற பெயருக்கு ஏற்றவாறு அரிவாலோடு / பட்டாக் கத்தியோடு வருவார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் ஒரு சாதாரண Candle Stand ஐ ஆயுதமாக தூக்கிக்கொண்டு வந்தாலும், அதை ரஜினி செய்வதால் அது பல மடங்கு மாஸ் ஆகி விடுகிறது. "யாரும் இருக்கும் இடத்தில இருந்து விட்டால் எல்லாம் சௌக்யமே" என்ற கவியரசு பாடல் நினைவில் வராமல் இல்லை. சாதாரண Candle Stand ஆக இருந்தாலும், அது தலைவரின் கையில் இருக்கும் போது மாஸான ஆயுதமாக மாறுகிறது.
கபாலி, காலாவில் கோவமான முகபாவனையுடனே ரஜினியின் முகத்தை பார்த்த ரசிகர்களுக்கு சிரித்த முகத்தோடு வசீகரமான பர்ஸ்ட் லுக்கை பார்த்தது கண்டிப்பாக சிலிர்ப்பைக் கொண்டுவந்து இருக்கும். SUPERSTAR என்று வரும் சமயத்தில் கத்தி ஒன்று பாய்வது எல்லாம் Typical சூப்பர்ஸ்டார் ரசிகனின் ஸ்டைல்.
சரியாக ரஜினியின் முகத்தை காண்பிக்கும் போது "பாட்ஷா" படத்தில் வருவது போல "ஹே ஹே" என்று ஒரு டச்சை தட்டிவிட்டு தனக்குள்ளும் ஒரு சூப்பர்ஸ்டார் ரசிகன் ஒளிந்துக்கொண்டு இருப்பதை அனிருத் வெளிகாட்டிவிட்டார்.
பிளாக் & ஒயிட் காலம் முடியும் தருவாயில் ஆரம்பித்த ரஜினிசம், ஈஸ்ட்மேன் கலர் , கலர் என்று தொடர்ந்தது. பின்பு Motion Capture எனும் ஒரு புதிய டெக்னாலஜியையும் தொட்டு பார்த்தது. 3D யில் பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது.
ஆன்லைனில் ரஜினிக்கு மவுசு இல்லை என்ற கருத்து பரவலாக இருந்தாலும், இந்திய சினிமாவின் ஆன்லைன் சாதனைகள் உலக அளவில் போட்டி போட்டு ஒரு புதிய தொடக்கத்தை அளித்தது. இதோ இப்போது மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ள போதும் அது 100K லைக்ஸ் ஐ அசால்டாக கடந்து செல்கிறது...
மீண்டும் ஆன்லைனில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ள நமது தலைவர், ஏதோ மார்க்கெட் இழந்து போனதால் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று கிளப்பி விட்ட ஆன்லைன் போராளிகளுக்கே சம்மட்டியடி கொடுத்துள்ளார்.
சரி, நம்மிடம் போதுமான நேரம் இல்லை. இதோ அடுத்த வாரம் 2.o டீஸர் வரவிருக்கிறது. பேட்டையின் கொண்டாட்டத்தை சீக்கிரம் அனுபவித்த்துவிட்டு 2.o விற்கு தயாராவோம்.
- விக்னேஷ் செல்வராஜ்
|