கடந்த வார தொடக்கத்தில் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் அரசியல் வட்டாரத்தில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரஜினி கட்சியைத் தொடங்குவார் என்று அவர் கூறியது மீடியாக்களில் விவாதப்பொருளாக மாறாவிட்டாலும், அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக உற்று நோக்கப்படுகிறது.
அரசியலைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதை ஒரு யுத்தமாகவே ரஜினி வர்ணிக்கிறார். "போர் வரும் போது பாத்துக்கலாம்", "வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும்" என்று கூறியதெல்லாம் நினைவிருக்கலாம்.
ஆனால் அவர் அரசியல் அறிவிப்பு செய்யும் முன்னர் ரசிகர் சந்திப்பில் கூறிய ஒரு வாக்கியம் மிக மிக முக்கியமானது.
"எனக்கு அரசியலை பார்த்துப் பயம் இல்ல, அரசியல் ஒரு போர், யுத்தத்துல களம் இறங்குனா ஜெயிக்கணும்,அதுக்கு முதல்ல வியூகம் வேணும்" என்று கூறி, அரசியலில் இறங்கினால் நான் தகுந்த / சாமர்த்தியமான முன்னேற்பாடுகளோடு தான் இறங்குவேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
'ரஜினி வாயே தொறக்க மாட்டேன்றார் ' என்ற பேச்சு பொதுவாக இருந்தாலும், அவர் பேசாமல் இருப்பது அவருடைய மிகப் பெரிய Stategy, அவர் அனைத்துக் கட்சிகளோடு Mind Game விளையாடுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் பலர் கூறி வருகின்றனர்.
மௌனத்தைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவிற்கு வியூகம் வகுத்து உள்ளார் ரஜினி !!!
இப்படி ஒரு நிலையில் ஏ.சி.சண்முகம் அவர்கள் கூறியது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்களிடையே கூட ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
தலைவர் தான் சட்டமன்ற தேர்தல் தான் முக்கிய இலக்கு என்று கூறி விட்டாரே, நாம் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமா என்று சாரரும், நாடாளுமன்றமோ எதுவோ, எதுவா இருந்தாலும் ஒரு கை பார்த்துடுவோம் என்று ஒரு சாரரும் கூறுகின்றனர்.
இதைப் பார்க்கும் போது " எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் சொல்லிக்கொடுக்கத் தேவை இல்லை, அவர்களே மற்றவர்களுக்குச் சொல்லி தருவார்கள்" என்று ரஜினி கூறியதை நினைவுபடுத்துகிறது.
ஒரு சிறு அறிவிப்பிற்கே 2021 தேர்தல் வரை கணக்குப் போட்டு விவாதித்து விட்டார்கள் !!!
இறுதி முடிவை எடுக்கப்போவது இதையெல்லாம் தாண்டிய ஒரு கணக்கை போட்டு வைத்திருக்கும் தலைவர் தான் என்றாலும், சில ரசிகர்கள் குழம்புவதால், நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதால் / புறக்கணிப்பதால் வரும் நிறை குறைகளை நடுநிலையாக அலசிப் பார்க்கலாம்.
இதில் என்னுடைய சொந்தக் கருத்தை பதிவிடாமல், முழுக்க முழுக்கப் பல்வேறு தரப்பட்ட ரசிகர்களிடம் கடந்த ஒரு வாரமாகக் கலந்துரையாடி நான் பெற்ற கருத்துகளை முடிந்த அளவில் நடுநிலையோடு தொகுத்து உள்ளேன்.
ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தலைவர் கட்சியே தொடங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், அப்போது கண்டிப்பாகத் தேர்தல் புறக்கணிப்பு தான்.
ஆனால் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும்.
ஊடகமும் மக்களும் ரஜினியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், ரஜினியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெரும்.
குறிப்பாக, தேர்தலில் களம் இறங்காவிட்டாலும், மத்தியில் இதே அரசு தொடர வேண்டுமா அல்லது மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா ? என்ற கேள்வி கண்டிப்பாக ரஜினியின் முன்பு வைக்கப்படும்.
ஆக, கட்சி இல்லாவிட்டாலும் ரஜினியை சுற்றியே பாராளுமன்ற தேர்தலின் தொடக்கக் காலம் அமையப் போவது உறுதி !!!
சரி பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றால் கட்சியை ஏன் தொடங்க வேண்டும் ?
நிச்சயமாக ரஜினி கட்சியைத் தொடங்கும் போது இருக்கும் Hype என்பது ஒரு சுனாமியை போல இருக்கும்.
தேர்தலுக்கு ஒரு ஆறு மாதம் முன்பு கட்சியைத் துவங்கினால் அந்தப் புயலில் சுலபமாக நம்மால் கரை சேர முடியும். அந்த Hype ஐ பாராளுமன்ற தேர்தலுக்கே ஏன் வீணடிக்க வேண்டும் ?
சரி, அப்படியே அந்த அலையில் கணிசமான தொகுதிகளை ஜெயித்தாலும், மத்திய அரசியல் அளவில் நாம் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்தக முடியும் ?
ஒருவேளை தமிழகத்திற்கு எதிரான மனநிலை கொண்ட மத்திய அரசு அமைந்து, நம்மால் பாராளுமன்றத்தில் சிறப்பாகச் செயல் பட முடியாமல் போனால், அது 2021 சட்டமன்ற தேர்தலை பாதிக்குமே ?
இதெல்லாம் ஒரு சின்ன நெகட்டிவிட்டியாக இருந்தாலும், இந்த முடிவிலும் சில நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
கலைஞர் அவர்கள் குறைந்த அளவிலான M.P க்களைக் கொண்டு அப்போதைய மத்திய அரசை ஆட்டுவித்த வரலாறு மீண்டும் நிகழலாம். ஒருவேளை அது வெறும் 4 முதல் 5 M.P யாக இருந்தாலும், அந்தக் கட்டுப்படுத்துதல் இருக்கும்.
காரணம், ரஜினி அவர்கள் கலைஞரிடம் அரசியல் பயின்றவர். தேர்தலில் காலம் இறங்கவே வியூகம் அமைக்கும் அவர், தேர்தலுக்குப் பின் செயல்பட வேண்டிய Blue Print யே வைத்து இருப்பார்.
ஒரு வேளை ஒரு சீட் கூட ஜெயிக்காமல் போனாலும், நாம் வாங்கும் வாக்குச் சதவீதம், தமிழகத்தின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் குறியீடாகத் திகழும்.
நமது பலம் பலவீனம் , எந்தத் தொகுதியில் Focus செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து சட்டமன்ற தேர்தலில் சொல்லி அடிக்க உதவும்.
மேலும் இந்த வாக்கு வங்கியின் தாக்கம் அனைத்து கட்சிகளின் கூட்டணி Equation யை தாறுமாறாகச் சிதறடிக்கும் !!!
இதுவரை Haters மட்டுமே செய்து கொண்டு இருந்த விமர்சனம், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களிடம் இருந்து துவங்கும்.
அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ரஜினியின் கிளீன் இமேஜ் என்பது டேமேஜ் ஆகாமல் இருக்கும்.
பாராளுமன்ற தேர்தல் என்பது தி.மு.க, ஆ.தி.மு.க மற்றும் TTV அணிகளுக்கிடையே உள்ள அதிகாரப் போட்டியாக மாற நிறைய வாய்ப்புள்ளதால் இந்தக் குழாயடி சண்டையில் ரஜினி பங்கு பெறாமல் இருப்பதே நல்லது என்று சிலர் எண்ணுவர்.
ஆனால் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் போது ஒரு வலிமையான எதிர் கருத்தும் வரும்.
'நம் தமிழக மக்கள் கடந்த ஒரு ஆண்டுப் பல இன்னல்களைச் சந்தித்து விட்டனர், அதனால் நான் அரசியலுக்கு வருகிறேன்' என்று கூறிய ரஜினி, தமிழக மக்களின் குரலை இந்தியா முழுக்க ஒலிக்க வைக்கக் கூடிய இந்தப் பாராளுமன்றத் தேர்தலை ஏன் புறக்கணிக்கிறார் என்ற கேள்வி எழுப்பப்படலாம்.
இந்த ஒரு கேள்வி, தாமதமாக முடிவு எடுக்கக் கூடியவர் என்ற குற்றச்சாட்டையும், ஒரு வேளை பா.ஜ.க விற்கு மறைமுக உதவி செய்கிறாரோ என்ற யூகத்தையும் கிளப்பி விடும்.
சரி, ஒரு சரியான காரணத்தைச் சொல்லி தலைவர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் மேலே கூறியதை போல, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்வி கண்டிப்பாக நம் தலைவர் முன் வைக்கப்படும்.
மொத்தத்தில், தலைவர் நிற்கிறாரோ இல்லையோ, ஒரு stand எடுக்க வேண்டும், ஆதலால் தலைவரை சுற்றி தான் தேர்தலின் தொடக்கக் காலம் அமையும்.
சரி, நிற்பதால் / நிற்காமல் போவதால் , மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்த போகும் சாத்தியக்கூறுகள் பார்த்தோம். ஒரு வேளை நின்றால் / நிற்காமல் போனால் ஏற்படப் போகும் சாத்தியக்கூறுகளை கடைசியாகப் பார்த்து விடுவோம்.
ஒரு வேளை நின்றால் :
1. தமிழகக் கூட்டணி கணக்குகளில் ஒரு பூகம்பம் வரும்.. பெரிய கட்சிகளுடன் நட்பு பாராட்டிய பல கட்சிகள் கண்டிப்பாகத் தலைவரின் தலைமையில் கூட்டணி அமைக்க முந்தி அடித்துக்கொண்டு வரும்.
அவர்களை அரவணைக்கும் விதத்திலும் , கூட்டணி பங்கீடு விதத்திலும், தான் ஒரு அரசியல் சாணக்கியன் என்பதை மக்கள் முன்னர் நேரடியாகத் தலைவர் நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டும்.
2. ஓருவேளை கூட்டணி வேண்டாம், நான் தனியாக ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று கூறி களம் இறங்கினால், அது இன்னும் அதிரடி தான்.
எடுத்த எடுப்பிலேயே அது Rajini vs Anti Rajini என்ற தேர்தலாகவே மாறி விடும். புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சியை எதிர்க்க மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்று கூடுவதே மக்களைச் சிந்திக்க வைக்கும்.
3. பா.ஜ.க புரளிகள், தாமதம் எனும் குற்றச்சாட்டு, பேசவே மாட்டார் என்ற புலம்பல் இதையெல்லாம் எவனாலும் கூற முடியாமல் போகும்.
'எங்க பிரச்சனையைத் தீர்க்க ரஜினியே காலத்தில் இறங்கிட்டாரு டா' என்று மக்களே அதற்குப் பதில் அளித்து விடுவார்கள்.
சரி நிற்காமல் போனால் :
1. இந்தத் தேர்தல், அரசியல் வெற்றிடத்திற்கான போட்டியாகத் தான் இருக்கும். இதில் தலைவர் இல்லாமல் போனால் ஸ்டாலின், OPS/EPS, TTV ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவார்கள்.
இதனால் இவர்களில் தான் அடுத்தத் தலைமுறை தலைவர்கள் என்ற பிம்பம் மக்களுக்கும் எளிதாகப் பதியலாம்.
2. மேலே இரு முறை குறிப்பிட்டதைப் போல, தேர்தலின் தொடக்கக் காலம் தலைவரை சுற்றியே இருந்தாலும், தலைவர் பங்கேற்காமல் போனால் ,தேர்தலின் சூட்டில் மக்கள் நம்மை மறக்கவும் வாய்ப்பு உள்ளது.
இருக்கும் இரண்டு மூன்று option களில் ஒரு சிறந்த option ஐ தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள்.
3. ஒரு உதாரணத்திற்காகத் தி.மு.க 20 மற்றும் TTV 20 என்று ஜெயித்து விட்டால், அது தமிழக அரசியலையே Stalin vs TTV என்ற மனா நிலைக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டதாக மக்களுக்குள் ஒரு எண்ணம் விதைக்கப்படும் (தலைவர் கூறிய Mass Intelligence)
4.அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், 30,000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் , கிட்டத்தட்ட 15,00,000 பூத் கமிட்டி உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்பு, தேர்தலை புறக்கணித்தால் அது ஜனநாயக முறையை ஒரு இக்கட்டான நிலையில் வைக்கும்.
5. ரஜினிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றால், இந்தக் கட்டுரையை எழுதும் நான் உட்பட வேறு ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டிய நிர்பந்தம் வரலாம்.
அனைவரும் NOTA விற்குத் தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ரசிகனாக இருந்து , காவலராகச் செயல்பட்டு வரும் நம் தொண்டர்களுக்கு அது ஒரு தார்மீக ரீதியான அழுத்தகமாக இருக்கும்.
ஆயிரம் யூகங்கள் இருந்தாலும், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவிக்கும் முன்னர் "போரில் வென்றால் நாடாள்வாய் , தோற்றால் வீர மரணம் அடைவாய், ஆனால் போரிடவில்லை என்றால் கோழை ஆவாய்" என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய உபதேசத்தைக் கூறி ஆரம்பித்த நமது தலைவர் , அப்பொழுதும் தேர்தலை ஒரு போராகவே சித்தரித்தார்.
"நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்ற 20 ஆண்டுகாலமாக எதிர்பார்த்த அந்த வார்தையைக் கூறுவதற்கு முன்னர் அவர் இன்னொரு கிருஷ்ண உபதேசத்தையும் கூறினார்.
"நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன், நீ அம்பு விடுறது தான் பாக்கி"
தலைவர் தன்னுடைய அதிரடி வியூகங்களை அற்புதமாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். காவலர்களாகிய நாம் "அம்பு" விடத் தயாராக இருப்போம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழகம் !!
ஜெய் ஹிந்த் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|