இந்தக் கட்டுரையின் சென்ற பாகங்களை படிக்க :
Part 4: http://www.rajinifans.com/detailview.php?title=1699
"ரஜினி அவர் பாட்டுக்கு ஆன்மீக அரசியல்னு சொல்லிட்டு போய்ட்டாரு. நீங்க தான் பாவம் அதுக்கு இவ்ளோ நாளா முட்டு கொடுக்க வேண்டியதா போச்சு" என்றவாறே என்னுடைய நண்பர் ஒருவர் ( Typical ரஜினி Hater ) கால் செய்து சொன்னார். என்னுடைய முந்தைய பாகங்களையும் படித்தவர் அவர்.
நான்கு பாகங்களாக ரஜினியின் அரசியலை விளக்க முற்பட்டு இருந்த என்னிடம், "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்" என்பது போல "முட்டு கொடுத்தேன்" என்று கூறியதில் நானே கொஞ்சம் திணறி தான் போனேன்.
சரி, அவர் வழியிலேயே செல்வோம் என்று, ஆன்மீக அரசியலில் என்ன பிரச்சனை என்று இந்த கட்டுரைக்கான Content ஐ அவரிடம் இருந்து பெற முயற்சி செய்தேன்.
வித்யாசமாக ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தால், மீண்டும் அவர் ஹிந்து மதத்திற்கு மட்டும் ஆதரவாக இருப்பவர், பா.ஜ.க வை போலவே ஹிந்து மத ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார், மந்திராலயம் சென்ற அவர் ஏன் சர்ச்சிற்கோ மசூதிக்கோ செல்லவில்லை என்று குழி தோண்டி புதைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிய அதே புராணத்தை பாடினார்.
ரஜினிகாந்த் பிறப்பால் ஒரு ஹிந்து. படித்தது ராமகிருஷ்ணா மிஷனில். அதனால் அவரது செயல்பாடுகளில் அவர் சிறு வயதில் இருந்து பின்பற்றிய நடைமுறை பழக்க வழக்கங்கள் இருக்கும்.
அன்னை தெரசா தன் கழுத்தில் சிலுவை அணிந்தபடியே இருந்ததால் அவர் மத வெறியர் என்று அர்த்தம் ஆகுமா ? அவரது பழக்கவழக்கத்தை பின்பற்றினாலும் அனைவருக்கும் பொதுவாக இருப்பதே ஆன்மீகம். இதை உணர்ந்து தான் "இயேசு" என்னுடைய ஆன்மீக குரு என்று ரஜினியே கூறி உள்ளார்.
ரஜினி முருகன், ரஜினி அந்தோணி, ரஜினி முபாரக் என்று பெயர் சூட்டிக்கொள்ளும் அளவுக்கு அனைத்து தரப்பினரின் அன்பை பெற்ற அவரை, ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைப்பது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
சென்ற பகுதியில் அண்ணா அவர்கள் ஆட்சியில் அமைத்துவிட்டு போன திராவிட சித்தாந்தம், எவ்வாறு 50 ஆண்டுகள் எவ்வாறு நிலைத்து நின்றது, சென்ற ஆட்சியாளர்கள் (திராவிட காட்சிகள் உட்பட) தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலம் ஆக்கியது போன்றவற்றை பார்த்து இருந்தோம்.
சரி மக்கள் ஏற்றுக்கொண்ட அந்த திராவிட சித்தாந்தத்தை தவிர்த்து ஏன் இப்போது ஆன்மீக அரசியலுக்கான தேவை வந்தது ?
1967 இல் மாற்றத்தை கொண்டுவர முயன்ற அண்ணா அவர்கள், அதற்கு முன்னர் காங்கிரஸில் இருந்த சில நல்ல கொள்கைகள், தமிழக மக்கள் விரும்பிய சில மாற்றத்தை முன்வைக்கும் கொள்கைகள், சில முற்போக்கான கொள்கைகள் என ஒரு புதிய Theory யாக "திராவிட கொள்கைகளை" வகுத்தார்.
அப்போதைய அரசியலில் குல கல்வி முறை, ஹிந்தி எதிர்ப்பு போன்ற சில விஷயங்கள், நாம் தேசிய நீரோடையில் செல்லத்துணிந்து சுய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணத்தை விதைத்தது.
ஆகவே, இந்த புவியியல் சார்ந்த மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுக்கப்பட்டதே "திராவிட கொள்கைகள்" (திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே உள்ள ஒரு Geographical Area") .அப்போது அந்த சித்தாந்தம் உண்மையில் நமக்கு தேவை பட்டது. பின்வந்தவர்களும் அவர் சொன்ன திரவிட சித்தாந்தத்தில் இருந்த முக்கிய அம்சங்களான சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை தவறாமல் பின்தொடர்ந்தார்கள்.
ஆனால், இன்றைய நிலையில் மாநில சுயாட்சி, பிரிவினைவாதம் போன்ற சில இடங்களில் இந்த திராவிட கொள்கைகளை புரிந்து கொள்ளாமல் , அதை சரிவர இந்த தொடராமல் தமிழகத்தை ஒரு சிக்கலுக்குள் சிக்கியதை போன்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்கள். இதை களையெடுக்க ஒரு புது சித்தாந்தம் மீண்டும் தேவை படுகிறது.
சரி, இது நாத்திகம் பேசும் பூமி ஆயிற்றே, இங்கு ஆன்மிகம் எடுபடுமா ? இந்த இடத்தில தான் அனைவரும் தவறு இழைக்கிறார்கள். ஆன்மிகம் என்பது அனைவருக்கும் / அனைத்து உயிருக்கும் பொதுவானது. அதை இறை நம்பிக்கை உடையவர்கள் சுலபமாக கிரகித்து கொள்வதால் ஆன்மீகத்திற்கும், பக்திக்கும் வித்யாசம் தெரியாமல் போய் விடுகிறது.
இது போலவே திராவிட கொள்கை என்றால் அது நாத்திகம் என்கின்ற தோற்றமும் வந்துவிடுகிறது. Geographically, இந்த கட்டுரை எழுதும் நானும் ஒரு திராவிடன் தான். Spiritually, பெரியாரே ஒரு ஆன்மீகவாதி தான். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கும் எவனும் ஒரு ஆன்மீகவாதியே.
சரி, அண்ணாவின் திராவிட கொள்கையில் இப்பொழுது சில குறைகள் தென்படுவதை பார்க்க முடிகிறது. அதை சரி செய்ய முயலும் ரஜினி, ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து உள்ளாரே , இது திராவிட கொள்கையை பாதிக்காதா?
மீண்டும் தெளிவாக சொல்கிறேன், நமது கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் சில அடிப்படை விஷயம் (BASIC PRINCIPLES) உள்ளது. அதை தாண்டி நாம் எதையாவது செய்ய துணிந்தால் மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பார்கள்.
சமத்துவம், சமூகநீதி எல்லாம் வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ணாவின் கண்டுபிடிப்பு அல்ல. 11 ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற வரலாறு நம் மண்ணிற்கு உண்டு. ( துறவி ராமானுஜர் இதை செய்தார், இதனால் தான் நாத்திகம் பேசிய கலைஞர் கூட இவரை பற்றிய டீ.வி சீரியலுக்கு திரைக்கதை எழுதினார்).
இதுபோல மாநில அதிகாரம் பற்றியும் நமது வரலாற்று அரசர்கள் போதும் போதும் எனும் அளவிற்கு எடுத்துக்காட்டு தந்து இருக்கிறார்கள்.
1950 காலகட்டத்தில் நமது கலாச்சாரத்திற்கு ஒத்த இந்த கொள்கைகளுக்கு ஆபத்து ஏற்படவிருந்த சூழலில், எங்களுக்கான அரசியல் வேண்டும் என்று திராவிடம் சித்தாந்தம் ஒரு மாற்றத்தை கொடுத்தது.
இதுபோலவே ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியலிலும் கண்டிப்பாக இந்த "BASIC PRINCIPLES" இருக்கும். ஆனால் திராவிட வழியில் இல்லாமல் அது ஆன்மீக வழியில் இருக்கும்.
சரி அதை திராவிடமாகவே கொடுக்கலாமே, அதில் என்ன பிரச்சனை?
ஏற்கனவே கூறியதை போல திராவிடம் என்பது இந்த குறிப்பிட்ட பகுதிக்கான அரசியல். இதை இன்னும் குழப்பிக்கொண்டு பிரிவினைவாதம் பேசும் அளவிற்கு சென்றுவிட்டார்கள். மாற்றமானது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆன்மீக அரசியல் கண்டிப்பாக அந்த மாற்றத்தைக் கொடுக்கும் என்று ரஜினி நம்புகிறார்...
அவர் ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர் என்பதால் "ஆன்மீக அரசியல்" என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார். ( கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் மீது பயம் கொள், இல்லையெனில் மனசாட்சி மீது பயம் கொள்) . ஆனால் பெரியாரின் நாத்திகத்தை கொள்கையாக கொண்ட அண்ணாவிற்கு அது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.
திராவிட அரசியலை நாத்திக அரசியலாக இந்த Whatsapp போராளிகள் புரிந்துகொண்டதை போல அப்போதைய மக்கள் தவறாக எண்ணிவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.
தனது அரசியல் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை தெளிவாக்கவே " ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்கினார். ஆன்மீக அரசியல் வேறு எதையாவது சொல்கிறதா என்ன?
மாற்றம் ஒன்று தான் மாறாதது. சரியான நேரத்தில் மாற்றம் நிகழாமல் போனால் அது ஆபத்தில் தான் முடியும். 1967 இல் மாற்றம் தேவை பட்டது. திராவிட சித்தாந்தம் மூலம் அது நிகழ்ந்தது, இப்போது மீண்டும் அதே போன்ற கடின சூழல்.
திராவிடம் அண்ணாவின் ஸ்டைல் ! ஆன்மீகம் ரஜினி ஸ்டைல் !!
நல்லதே நினைப்போம் ! நல்ல்லதே பேசுவோம் !! நல்லதே செய்வோம் !!! நல்லதே நடக்கும் !!!!
வாழ்க பாரதம் !
வளர்க தமிழகம் !!
ஜெய் ஹிந்த் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|