கடந்த முறை தமிழகம் நல்ல வளச்சியை அடைந்து இருந்தாலும், ஏன் சிஸ்டம் சரியில்லை என்பதற்குச் சில உதாரணங்களைக் குறிப்பிட்டு இருந்தேன்.
அதோடு "தலைவர்" என்ற அந்தஸ்தை பெற ரஜினி தகுதியானவரா? ரஜினியால் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் ? என்ற கேள்வியோடு நிறுத்தி இருந்தேன்.
பலர் என்னை, ரஜினி எப்படி இந்தச் சிஸ்டத்தைச் சரி செய்வார் என்பதை நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன், அவர் இதைச் செய்வார் அதைச் செய்வார் என்று நான் கூறுவதற்கு அவர் தனது கட்சி கொள்கையாவது அறிவித்து இருக்க வேண்டும்.
அதை விடுத்தது அவர் 'ஆட்டை மாடாக மாற்றுவார்' என்று அவரை நான் புகழ்ந்து கொண்டு இருந்தால் அதற்குப் பேர் "சொம்பு தூக்குதல்"
கூத்தாடியாக இருந்தாலும், நிர்வாகத் திறமை இருப்பவர்களாக இருந்தால் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள் என்று கூறி இருந்தேன்.
கலைஞர், M.G.R, ஜெ போன்றவர்கள் தங்களது நிர்வாகத் திறமையைத் தேர்தலை சந்திக்கும் முன்பே மக்களிடம் வெளிப்படுத்தி இருந்தனர். உதாரணமாக M.G.R அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்தார்.
ஜெ அவர்கள் அ.தி.மு.க பிளவுபட்டபோது அதனை ஒன்றிணைத்த விதம் மூலமாகத் தனது திறமையைக் காண்பித்தார்.
ஆனால் தான் சார்ந்த சினிமா துறையில் கூட எந்த ஒரு பதவியோ, நிர்வாகப் பொறுப்போ வகிக்காத ரஜினியை எதனடிப்படையில் ஆதரிக்க வேண்டும் ?
அப்படிப் பார்த்தால் நஷ்டத்தில் இருந்த தென் இந்திய நடிகர் சங்கத்தை லாபகரம் ஆக்கிக்காட்டிய விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை விட, எந்தப் பொறுப்பும் வகிக்காத ரஜினியின் அரசியலுக்கு "HYPE" ஏன் கொடுக்கப்படுகிறது ?
வருகிறேன்…
நிர்வாகத்திறமையின் அடிநாதமே கட்டுப்படுத்துவதும், பிரச்னையைத் தீர்வை நோக்கி கொண்டு செல்வதும் தான்.
ஒரு தலைவனானவன் எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடடி தீர்வை மட்டும் காணாமல், அதன் வேர் வரை ஆராய்ந்து ஒரு நிரந்தர / நீண்டகாலத் தீர்வை தர முயல வேண்டும்.
ரஜினி என்ன அப்படியாப்பட்ட கட்டுப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்தினார்?! Social Media வந்த பிறகு ரஜினியை பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.
காவிரி பிரச்சனை உச்சத்தைத் தொட்ட சமயம் அது.
‘நாம் நெய்வேலியில் போராட்டம் செய்யும் முன்பு கர்நாடகாவில் உள்ள தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ’ என்று ரஜினி கூறியதை , ரஜினி கன்னடர்களுக்கு ஆதரவு என்று திரித்துக் கூறி திரையுலகில் உள்ள சிலரே அவருக்கு எதிராக வேலை செய்த நேரம்.
ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய முடியாது , நான் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார்.
அவர் உண்ணாவிரதம் இருந்ததோ சென்னையில் தான் ஆனால் அதன் வீச்சுத் தமிழகம் முழுவதும் இருந்தது.
ஆம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைதியாக நடத்தி முடித்து வெற்றி கண்டார்கள்.
ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரே நாளில் நகராமல் ஆட்டிப்படைத்த அந்த ஆளுமையைப் பற்றி எல்லாம் இந்த 'Social Media Kids' க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
(ஸ்டாலின் அவர்களே கலைஞரின் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்க வைத்ததை ஆளுமை என்று தான் சொல்ல வேண்டும்) அப்பேற்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் வன்முறையோ, அசம்பாவிதமோ நடக்கவே இல்லை.
மேலும் “பாபா” பட விவகாரத்தின்போது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போதும் பா.ம.க கட்சியினர் ரஜினி ரசிகர்களால் தாக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
ரசிகர்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாலும், தன்னுடைய "கண் அசைவில்"அந்த லட்சக்கணக்கான ரசிகர்களையும் கட்டுப்படுத்துவது ஒரு அசாத்திய திறமை இல்லையா?
தன் தலைவனை மீறி எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அனைத்து ரசிகர்களுக்கும் கட்டளை இடாமலேயே ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் அந்தச் சுய ஒழுக்கத்தைப் புகுத்தியது நிர்வாகத் திறமை அல்லாமல் வேறென்ன ?
சரி, கட்டுப்படுத்துவது ஒரு திறமையாகவே இருக்கட்டும், ஒரு தலைவன் தனது ரசிகனை கண்டிப்பாகக் கட்டுப்படுத்துவான். ஆனால் அனைவரும் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் வேறு ஒரு மாற்று தேவை என்ற நிலையில் கண்டிப்பாக அந்தத் தலைவனை ஒரு 'option'ஆகப் பார்ப்பார்கள்.
உதாரணமாகக் கலைஞரை எந்த ஒரு அ.தி.மு.க ஆதரவாளரும் (தொண்டன் என்று கூறவில்லை) தலைவனாக ஏற்க மாட்டான். ஆனால் ஜெ மீது வெறுப்பு ஏற்பட்டால் கலைஞரையே மாற்றாகப் பார்ப்பான்.
அதுபோல என்னதான் ரசிகர்களுக்கு மட்டும் தலைவனாக இருந்தாலும் "மாற்று" என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒருவனை மக்கள் தேடும் போது அதில் ஆகச் சிறந்த 'option'இல் ரஜினி கண்டிப்பாக முதலில் இருப்பார்.
சரி கட்டுப்படுத்துவதைப் பிறகு பார்க்கலாம். ஒரு தலைவனின் மிக முக்கிய அம்சமும், தமிழக மக்களுக்கு இன்றைய தேவையாகவும் இருப்பது, மேலே கூறியதை போலப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு இல்லாமல் நிரந்தர / நீண்டகாலத் தீர்வை தேடி கொடுப்பது தான்.
ஒரு பிரச்னையை வேர் வரை ஆராய்ந்து வித்யாசமான அதே சமயம் தெளிவான, உறுதியான முடிவு எடுத்தால் தான் அது தீர்வை நோக்கி செல்லும். ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் "Innovative Thinking".
இதற்குச் சிறந்த உதாரணம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று "உழவர் சந்தை"களைக் கலைஞர் திறந்தது, தண்ணீர் பிரச்சனைக்கு "வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு" திட்டத்தை நாட்டிற்கே முன்னோடியாக ஜெ அவர்கள் செயல்படுத்தியது ஆகியவற்றைச் சொல்லலாம்.
ரஜினி என்ன "Innovative idea"வை கொடுத்தார் என்று கேட்பவர்களைப் பார்த்தால் பாவப்படதான் தோன்றுகிறது... கூறுகிறேன்.
எத்தனையோ பேர் இலங்கை தமிழர்களுக்குப் பாடுபடுகிறார்கள், ஆனால் இங்கேய உள்ள அகதிகளுக்குக் குடியுரிமை செய்ய வழிவகைச் செய்யவில்லை என்று நெற்றி பொட்டில் அடித்தார் போலக் கூறினார்.
இது ஏதோ 80 களில் சொன்னது அல்ல. நான்கு மாதம் முன்பு ( ஏப்ரல் 2018) இல் தான் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அனைவரும் அரசை குறை கூறிய போது இது "உளவுத்துறையின்" தோல்வி (அதாவது உளவுத்துறை அந்தச் சமூக விரோதிகளைக் கண்டுபிடித்து இருந்தால் துப்பாக்கி சூடு நடந்து இருக்காது) என்று பிரச்சனையின் அடிநாதத்தைக் கூறியவர் தான் ரஜினி.
( மக்கள் அதிகாரம் என்ற அமைப்புத் தங்களை மூளை சலவை செய்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களே கூறிவிட்டனர் )
பெரிய அணைகள் கட்டுவதற்குப் போதுமான புவியியல் சூழல் இல்லாத தமிழகத்தில் அணைகள் வேண்டும் என்று விவரம் அறியாமல் போராடும் மக்கள் மற்றும் இது தெரிந்தும் அந்தப் போராட்டத்தில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில், நதிகளை தேசிய மயமாக்கினால் எந்த இரு மாநிலத்திற்கும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று ரஜினி சொன்னதை "Innovative Thinking" என்று சொல்லாமல் என்னவென்பது ?
சரி நான் சொல்வதெல்லாம் நிகழ்கால உதாரணங்களாகவே உள்ளதே, அப்படியானால் 90களில் ரஜினியை ஆதரித்தவர்கள் எல்லாம் வெறும் கூத்தாடிக்கு ஓட்டு போட்ட கூட்டமா? இல்லை... இல்லவே இல்லை.
1995 யிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டாகத் தவறு செய்யும் அளவு சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது (அப்போதே கூறிவிட்டார்) என்று ஆழ்ந்து சொல்லி இருக்கிறார்.
ஒரே ஒரு மாத காலத்தில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி, அப்போதைய மிகப் பெரிய கட்சியுடன் தொகுதி பங்கீடு உட்பட அனைத்தையும் சுமூகமாக முடிக்க உதவியதை விட என்ன ஆளுமையை அவர் வெளிப்படுத்த வேண்டும் ? (தொடங்கிய 1 மாத காலத்திற்குள் தா.ம.க தேர்தலை சந்தித்தது !!! ).
நாத்திகமும் சமத்துவமும் 50 ஆண்டுகளாகப் பேசி வரும் இந்த "பெரியார் மண்ணில்" ஆத்திகமும் சமத்துவமும் பேசும் "ஆன்மீக அரசியல்" செய்யப் போகிறேன் என்று சொல்வதற்கே தனித் தைரியம் வேண்டும் !
காவல்துறையினர் மீது பொதுமக்கள் கை வைத்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விடும் என்று யாரையும் திருப்தி செய்ய நினைக்காமல் தைரியமாக தன் கருத்தைக் கூறியவர்.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் "Nervous Disorder" பிரச்னையோடு இருந்தேன் என்று சொல்ல ஒரு தூய உள்ளம் வேண்டும் !!
"One man show" ஆக இருப்பேன் என்று சொல்லாமல், சிறந்த ஆலோசகரை வைத்து நல்லாட்சி கொடுப்பேன் (M.G.R சிலை திறப்பு விழாவில் ) என்று சொல்ல ஒரு தன்னடக்கம் கலந்த தலைமை பண்பு வேண்டும்!!!
அவர் நல்லவர் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏன் என்றால் அவரை எதிர்க்கும் அரசியல்வாதிகள் கூட "அவர் நல்லவர் தான், ஆனால் அரசியலுக்கு வர தேவை இல்லை " என்று கூறி தான் எதிர்க்கிறார்கள்.
நல்லவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டமும் வகுத்து விட்டார்கள் போலும் !!!...
மீண்டும் சொல்கிறேன், ரஜினியால் மட்டும் தான் முடியும் என்று சொல்லவில்லை... ரஜினியால் முடியும் என்று தான் கூறுகிறேன்...
அது சரி, மேற்சொன்ன தலைமை பண்பை விஜயகாந்த் தேவையான அளவு காட்டிவிட்டார், "Intellectual" என்று பெயர் எடுத்த கமல் தனது சினிமா துறையில் எண்ணற்ற "Innovative Thinking" ஐ புகுத்தி இருக்கிறார்.
ஆனாலும் அவர்கள் அரசியலுக்குக் கொடுக்கப்படாத "Hype" ஏன் ரஜினியின் அரசியலுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது ???
அடுத்தப் பதிவில்...ðŸ™ðŸ»ðŸ™ðŸ»
- விக்னேஷ் செல்வராஜ்
|