நேற்றைய தினம் புதிய தலைமுறை எனும் நடுநிலை!! ஊடகம் காலா திரைப்படம் 40 கோடி ரூ நட்டம், அதைத் தனுஷ் கொடுக்க முன் வந்துள்ளார் என்ற ஒரு அடிப்படை ஆதாரமற்ற செய்தியை பகிர்ந்து பலத்த கண்டணங்களைப் பெற்ற பின் நீக்கி மறுப்பும் தெரிவித்த நிகழ்வு நடந்தேறியது.
புதிய தலைமுறையின் முதன்மை செய்தியாசிரியரே வருத்தம் தெரிவித்துச் (தனித்தகவலில்) செய்தி போடும் அளவு ரஜினி ரசிகர்கள் கொதித்துவிட்டனர்.. தொடர்ந்து வுண்டர்பார் நிறுவனமே படம் நல்ல லாபம் ஈட்டிக்கொடுத்த வெற்றிப்படம் என்று அறிக்கை வெளியிட்டது.
ரஜினி படங்களுக்கு அண்மை காலமாகத் தொடரும் நிகழ்வுகள் தான் மேற்குறிப்பிட்டவை..இதற்கெல்லாம் காரணங்கள் தான் என்ன?
சமூகவலைதளத்தில் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் ஒரு மீம் உள்ளது..அதாவது இந்தி சினி உலகில் உச்சநச்சத்திரம் மாறிவிட்டார்..தெலுங்கு திரை உலகிலும் சிரஞ்சீவிக்கு அடுத்த அதிக மார்க்கெட் வசூல் கொண்ட ஒரு தலைமுறை உருவாகிவிட்டது.
மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்ந்தாலும் அடுத்தத் தலைமுறை நடிகர்கள் அவர்களை வணிக ரீதியில் பின் தொடரும் நிலை உருவாகிவிட்டது.
ஆக மொத்தத்தில் இந்திய சினிமாவின் அனைத்து மட்டத்திலும் உச்ச நட்சத்திரங்கள் மாறிவிட்டார்கள்.
ஆனால் 1979 முதல் தமிழ் சினிமாவில் மட்டும் ஒரே உச்சநட்சத்திரமாக ரஜினி திகழ்கிறார் என்றவாறு அந்த மீம் இருக்கும்.. இது உண்மையா ?
ஆம் உண்மை மட்டும் அல்ல.. இது ஒரு வரலாறு.
44 ஆண்டுகளாய் உச்ச நட்சத்திரமாக எந்த ஒரு துறையிலும் நீடிக்கும் வரலாறு இது வரை நிகழ்ந்ததும் இல்லை.. இனி நிகழப்போவதும் இல்லை.. காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே போட்டுடைத்த ஒரு விசயம் தான் இது .
அந்தப் பொறாமை இருக்கத்தான் செய்யும்.. வயிறு எறியத்தான் செய்யும்.. அதனுடைய வெளிப்பாடுகள் தான் ரஜினி படங்கள் தோல்வி என்று செய்யப்படும் பிரச்சாரம் ..
1992 ம் வருடம் அண்ணாமலை எனும் பெரு வெற்றிப்படத்தைக் கொடுத்த பின் தமிழகச் சினிமாவின் அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தியாக மாறிப்போனார் ரஜினி.
அதுவரை ஒரு ரஜினி பட ரெக்கார்டை சில வருடங்கள் கழித்தேனும் ஒரு கமல் படமோ இல்லை ஒரு விஜயகாந்த் படமோ இல்லை பிற நடிகர்கள் படமோ முறியடித்த நிலை மாறி 90 களுக்குப் பின்பு ரஜினி படங்களின் ரெக்கார்டுகளை ஒரு ரஜினி படம் தான் முறியடிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவானது.
அது முதலே ரஜினியின் இரண்டாம் கட்ட நடிகர்கள் மத்தியில் ஒரு வயிற்றெரிச்சல் உருவாகிவிட்டது.. அரசியலிலும் இவர் தவிர்க்கமுடியாத சக்தி ஆகிப்போனதன் பின் ரஜினி படத்தின் தோல்வி என்பது ஒட்டுமொத்த அவரின் தோல்வியாகக் கொண்டாடப்பட்டது.
இதைச் சரியாகக் கணித்த ரஜினி 90 கள் முதல் தேர்வு செய்த படங்களில் மட்டும் நடிக்க ஆரமித்தார். விளைவு 90 களில் தோல்விப்படமே இல்லை எனும் அளவு அவர் கேரியரின் உச்சம் தொட்டார்.
படையப்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றி ரஜினிக்குச் சினிமா போதும் எனும் நிலையைத் தந்தது ஆச்சர்யம் தரவில்லை எனக்கு. ஏனென்றால் அத்தகைய வெற்றியை இந்தியாவின் எந்த நடிகரும் பெற முடியாது அன்றைய சூழலில்.
படையப்பாவின் வெற்றியை அடுத்து ஒரு ரஜினி படம் முறியடிக்க முடியாமல் போனால் ரஜினியின் எதிராளிகள் அதையே காரணம் காட்டி அவரை மட்டம் தட்ட வாய்ப்பிருக்கிறது என அவர் நினைத்துப் படம் ஒப்புக்கொள்ளவில்லை.
பின் பலத்த யோசனைகளுக்குப் பின்பு பாபா படம் பூஜை போடப்பட்டது.. சினிமா உலகம் பரபரப்படைந்தது.
ரஜினியின் எதிரிகள் வழக்கம் போல இப்படமாவது தோற்றுவிடாதா என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர்.. எதிர்பார்த்த படியே ரஜினி சறுக்கினார்.
சினிமா உலகம் ரசித்துக் கொண்டாடியது.. பார்டி வைத்துக் குதூகலித்த செய்திகளெல்லாம் கூட உண்டு. மீண்டும் ரஜினி அமைதி எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கானது மட்டும் அல்ல .. அந்தந்த காலத்தில் யார் வசூலில் வரவேற்பில் உச்சத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆக முடியும் என மனம் திறந்து பெருந்தன்மையாகப் பேசினார்.
பின் தான் சந்திரமுகி திரைப்படம் வெளிவருகிறது.. அதன் இசை வெளியீட்டு விழாவில் வழக்கத்துக்கு மாறாக ரஜினி ஆவேசமாய்ப் பேசினார்.
பாபா படத் தோல்வியை வைத்து ரஜினி அவ்வளவு தான் என எண்ணியவர்களுக்கு அவர் அளித்த நேரடி பதிலடியாகத்தான் இதைப் பார்க்க முடியும்.. "நான் யானை இல்ல குதிரை" என்று தைரியமாகப் பேசினார்.
படம் வந்தது.. பெரு வெற்றி பெற்றது...உடனடியாகச் சங்கருடன் இணைந்து சிவாஜி எனும் ப்ளாக் பஸ்டர்..
அடுத்து குசேலன் எனும் கெஸ்ட் ரோல் படம்.. தவறான விளம்பரங்கள்.. காவேரி பிரச்சனை.. மறுபடி ரஜினியை கார்னர் செய்து குசேலனும் ஓடாமல் போனது.
அப்போதும் ஒரு பேச்சு கிளம்பியது.. இனி ரஜினி அவ்வளவுதான்.
வந்தது எந்திரன்.. நடந்தது வரலாறு.. உடனேயே ராணா படப் பூஜை.. தமிழ் சினிமா உலகமும் அப்போதைய இரண்டாம் கட்ட நடிகர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ரஜினிக்கு அப்போது வயது 60.. இந்திய சினிமாவின் அதி உச்ச நடிகர் ரஜினி.. இனி ரஜினியை ஒன்றுமே செய்ய முடியாது என்று நினைத்தவர்களுக்கு அவரின் உடல்நிலை பாதிப்பு வசதியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
2011-2014 இடைபட்ட காலத்தில் ஒரு இரண்டாம் கட்ட நடிகர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் எவ்வளவு பிரயத்தனப்பட்டார் என்பதை இக்கட்டுரையை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
ரஜினி சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பி பின் நடித்த கோச்சடையான் படம் தோல்வி அடைந்தது.. லிங்கா அறிவிப்பு வெளியானது.. இது ப்ளாப் ஆனால் இனி நாம் தான் என அந்த இரண்டாம் கட்ட நடிகர் நினைத்ததில் தவறும் இல்லை.
ஏனென்றால் அந்தச் சம்யத்தில் தான் அடுத்தச் சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார் அந்த நடிகர்.
மேலும் ஆளுங்கட்சியோடு பகைத்துக்கொண்டு ஒரு படம் தோற்று அந்தப் படத்திற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய விருது நிகழ்வில் கலந்து கொண்டு கம்பத்தில் கோல் போடும் எல்லாருமே சூப்பர் ஸ்டார் என்ற உலகார்ந்த தத்துவத்தை உதிர்த்த நிகழ்வுகளெல்லாம் அந்தச் சமயத்தில் தான் நடந்தது .
இன்னொரு மிக முக்கிய நிகழ்வு ஜெயலலிதா சிறைக்குப் போயிருந்த நேரம்.
ரஜினி அரசியலில் நுழைவார் என உறுதியாக நம்பப்பட்ட சூழலும் கூட.. இன்றைக்கு ஜெ இருக்கும் போது ரஜினி அரசியல் பேசவில்லை என்று பேசும் பால்வாடிகளுக்கு லிங்கா இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசிய அரசியல் எல்லாம் நினைவுக்கு வராது.
அமீர், சேரன், விஜய குமார் என எத்தனை பேர் அந்த மேடையில் ரஜினியை அழைத்தனர் என்பதும் மறந்து போயிருக்கக்கூடும்.
ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளி வந்தது படம்.. படத்தை வாங்கித் திருச்சி தஞ்சை பகுதியில் வெளியிட்ட விநியோகஸ்தர் வெள்ளி இரவு படம் செம வசூல் சாதனை.. TT ஏரியாவில் முதல் நாள் வசூல் 97 லட்சம் என முகநூலில் செய்தி வெளியிட்டார்.
அடுத்த ஒரே இரவில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
படம் வெளியான மூன்றாம் நாளே ஊடகங்களைச் சந்தித்துப் படம் தோல்வி, படம் வசூல் இல்லை.. ரஜினி படங்களுக்கு இனி மதிப்பில்லை எனச் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேட்டி கொடுத்துப் படத்தைப் படு கொலை செய்தார்.
திருச்சி தஞ்சை ஏரியாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல் சாதனை என்று செய்தி போட்ட நபர் ஒரே நாளில் இவ்வாறு மாறியது எப்படி..?
கொஞ்ச நாள் கழித்து அவர் யார் அளித்த பிரியாணி விருந்தில் கலந்து கொண்டார்..? அவர் எந்தக் கட்சியில் இருந்தார்? என்பதை எல்லாம் நான் உங்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன்.
படம் தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் ரஜினி எனும் பிராண்டிற்கும் ரஜினியின் செல்வாக்குக்கும் நேரடி அச்சுறுத்தல் விடும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதற்கும் காரணங்கள் ஒன்று தான்.
அது ரஜினியின் இத்தனை ஆண்டுக் கால முதலிடம்(வெறும் முதல் இடம் அல்ல..அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கூடிய முதல் இடம் ).
அடுத்தப் பட அறிவிப்பு வரும் வரை சவுண்ட் விட்ட அந்த நபர் கபாலி, 2.0 என்ற இரு படங்களின் அறிவிப்புக்குப் பின் காணாமல் போனார்... காரணம் உங்களுக்கே விளங்கியிருக்கக்கூடும்...
ஆம் ரஜினியின் அரசியல் வருகையையும் அவரின் முதல் இடத்தையும் கேள்விக்குள்ளாக்குவது தான் அவரின் ஒரே பணி.. இரண்டையும் செய்தாயிற்று ..சோ அவர் ஒதுங்கிக் கொண்டார்.
ரஜினியும் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு ரஞ்சித் எனும் இளம் இயக்குநர் , தாணு எனும் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு பெரிய தயாரிப்பாளர் கூட்டணியில் களம் கண்டார்.
எதிர்மறை விமர்சனங்கள் வந்தும் எந்திரனின் சரித்திர சாதனையைத் திருப்பி எழுதினார் கபாலியாய்.. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விசயம் ரஜினி ரசிகர்கள் தாண்டி பொதுத் தளத்தில் ரஞ்சித்துடன் ரஜினி இணைந்ததும் படத்தில் அவர் பேசிய அரசியலும் பலருக்கு பிடித்திருக்கவில்லை.
அதனால் இரண்டாம் முறையும் இருவரும் இணைந்த அறிவிப்பு அவர்களுக்குத் தேள்கொட்டியதை போன்ற ஒரு நிகழ்ச்சி என்றால் மிகையில்லை..
இயல்பிலேயே அவர்கள் இரண்டாம் இணைவை புறக்கணிக்கும் முடிவை படம் வரும் முன்பே பலர் எடுத்துவிட்டனர்.
ரஜினி - ரஞ்சித் இணைவை ரசிக்காதவர்களின் புறக்கணிப்பு முடிவு, ரஜினியின் அரசியல் வருகை நமக்குப் பாதிப்பாய் அமையும் என்று கணித்துச் சில கட்சியினர் எடுத்த புறக்கணிப்பு முடிவு, ரஜினியின் தூத்துக்குடி பேச்சை தவறாகப் பிரச்சாரம் செய்து அதன்மூலம் சிலர் எடுத்த புறக்கணிப்பு முடிவு, அந்த இரண்டாம் இட நடிகரின் ரசிகர்கள் எடுத்த புறக்கணிப்பு முடிவு என இத்தனை புறக்கணிப்பு முடிவுகளுக்குப் பின்பும் ஒரு படம் வெற்றி அடைய முடியும் என்றால் அது ரஜினி படமாக அன்றி வேறு யார் படமாக இருக்க முடியும்... ?
இதுவும் ரஜினியின் எதிரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்த அவர்கள் எடுத்த கடைசி அஸ்திரம் தான் படம் நட்டம் எனும் பிரம்மாஸ்திரம்.
இங்கே நான் காலாவை கபாலி எந்திரனுக்கு நிகரான வெற்றிப்படமாகச் சொல்லவே இல்லை.
ஆனால் படம் நட்டம் என்று சொல்பவர்கள் எந்திரன் கபாலியுடன் ஒப்பிட்டு காலா அந்த அளவு வசூலிக்கவில்லை அதனால் ரஜினி மார்க்கெட் அவ்ளோ தான் என ஊளை இடுகின்றனர்.
இது சிறுபிள்ளைத் தனமான வாதம்.. ரஜினிக்கு அண்ணாமலையும் வெற்றிப்படம் தான் வீராவும் வெற்றிப்படம் தான்..
ஆனால் அண்ணாமலையோடு ஒப்பிடுகையில் வீரா வசூல் குறைவு அதனால் வீரா தோல்வி என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனமோ அதே போலத் தான் கபாலி காலா ஒப்பீடும்.
காலா ஒரு வெற்றிப்படம் என்பதன் இன்னொரு உறுதி தகவல் லிங்கா ஓடவில்லை என மூன்றாம் நாளே கிளம்பியதை போலக் காலாவுக்கு யாரும் கிளம்பவில்லை.
அப்படிக் கிளம்பியிருந்தால் ஊடகங்கள் அவரிடம் பேசிப் பேசியே படம் தோல்வி எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட யாரும் கிடைக்காததால் தான் அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது அத்தனை கோடி நட்டம் இத்தனை கோடி நட்டம் எனக் கிளப்பி விடப்படும் செய்திகள்.
சரி ரஜினி ஒரு தோல்விப்படம் கொடுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது.. படங்கள் தோற்பதும் ஜெயிப்பதும் ஏன் அத்தனை பெரிய விசயமாக வேண்டும் ரஜினிக்கு மட்டும்..
கடந்த 6 ஆண்டில் குறிப்பிட்ட இரு டைரக்டர்களுடன் நான்கு வெற்றிப்படங்கள் கொடுத்தவருக்கும் அவ்விருவர் தவிர்த்த பிற டைரக்டர் படங்களில் அத்தனையையும் தோல்விப்படமாகக் கொடுத்த நடிகருக்கும், ஒரே டைரக்டருடன் படம் செய்து தோல்வியை அடைந்த நடிகருக்கும், படமே இல்லாமல் சின்னத்திரைக்குப் போனாலும் அவரின் விஸ்வரூபம் படத்தின் வசூலுடன் ஒப்பிட்டுப் பாபநாசத்தைத் தோல்வியாகப் பிரச்சாரம் செய்யாமல் இன்று பிக்பாஸே படம் என்று நினைக்கும் நடிகருக்கும் வெற்றி தோல்விகள் பெரிதாக விவாதிக்கப்படாமல் இருக்கும் போது ரஜினிக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய விவாதங்கள்...?
விடை ஒன்று தான் ரஜினியின் நம்பர் ஒன் நிலையும் அவரின் அரசியல் அடியும் தான்..
ரஜினியை பொது மக்களும் அவர் ரசிகர்களும் வெறும் நடிகராகப் பார்க்கவில்லை.. அவரின் நம்பர் ஒன் நிலையும் அவரின் அரசியல் வருகையும் பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் ரஜினி படம் தோல்வி அடைந்தால் மக்களிடமும் அவர் ரசிகர்களிடமும் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏர்படுத்தும் என்பது தெரிந்த ஒரு உளவியல் தாக்குதல் தான் ரஜினி படம் தோல்வி எனும் செய்தியின் ஊற்றுக்கண்.
இதே ரஜினி அரசியலுக்கு வராமல் காலா வெளியாகி இருந்தால் இத்தனை பெரிதாக இந்தச் செய்தி வந்திருக்காது.. எதிராளிகளைப் பொருத்த வரை முன்பு ரஜினியின் அரசியல் கனவு, நம்பர் 1 இடம் இரண்டையும் கலைக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்டார்கள்.
இப்போது திரை உலகில் நம்பர் ஒன்னாகவே இருங்கள் அரசியல் மட்டும் வேணாம் எனப் பிரயத்தனப்படுகிறார்கள். அவ்வளவு தான் விசயம்..
காலா தோல்வி என்று சொல்பவர்களிடம் அண்ணாமலை வீரா ஒப்பீட்டை வைத்தாலே போதுமானது.. அண்ணாமலை வீராவுக்குப் பின் ஒரு பாட்ஷா வந்ததைப் போல இப்போது ஒரு பாட்ஷா வராமலா போய்விடும்... 😉 .
தலைவர் ஸ்டைலில் சொல்லணும்னா, இன்று எனக்குத் தெரியும்.. நாளை உனக்கும் புரியும்.. ஹேய் 5 க்குள்ள 4 வை.. ஆழம்பார்த்து கால வை... 😉😉â¤â¤ .
- ஜெயசீலன்
|