வழக்கமாக, பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலே, அவர்களுடைய ரசிகர்கள் இரெண்டு நாட்களில் "100 கோடி டா", "200 கோடி டா" என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்! உண்மையில், படம் எத்தனை நுறு கோடி வியாபாரம் செய்தாலும், அனைவருக்கும் இலாபகரமாக இருந்ததா என்பது முக்கியம். அதன்படி, படம் வெளியான 3ம் நாளே காலா 100 கோடியைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. படத்தைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் :
- 140 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம்.
- படம் வெளியாவதற்கு முன்னாலேயே சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என்று அனைத்தையும் சேர்த்து 230 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி விட்டது.
- இதுவரை நிலவும் பாக்ஸ் ஆஃபீஸ் கணக்குப்படி, யாருக்குமே நஷ்டம் ஏற்படுத்தக்கூடிய படமாக காலா இருக்காது என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு படம் திரைக்கு வந்தால், அதன் வெற்றியை தீர்மானிப்பது அது எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓட்டம் கண்டது என்பதை வைத்துத் தான். இப்போதெல்லாம், முதல் வாரம் கடந்து படம் ஓடினாலே ஓரளவு வெற்றி கண்டுவிட்டது என்று அர்த்தம். பைரஸி பிரச்னைக்கு முழுமையான ஒரு தீர்வு கிடைக்காத இந்த காலத்தில், முடிந்த வரையில் எவ்வளவு சீக்கிரம் எத்தனை திரையரங்குகளில் படத்தைத் திரையிட முடியுமோ அத்தனை இடங்களில் திரையிட்டு, படத்தைப் பற்றி விமர்சனங்கள் வருவதற்கு முன் எவ்வளவு கல்லா கட்ட முடியுமோ, அவ்வளவு கல்லா கட்டுகின்றனர்.
காலாவைப் பொறுத்தவரை, முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று வெளிவந்திருந்தால், நாம் கீழே பார்க்கப்போகும் புள்ளி விவரங்கள் முற்றிலும் வேறு மாதிரி இருந்திருக்கும். தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப் போய், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் வாரமான ஜூன் முதல் வாரம், 7ம் தேதியன்று படம் வெளிவந்திருக்கிறது. தமிழகத்தில் நிலவிய பதட்டமான சூழ்நிலை காரணமாக, பெரிய ப்ரமோஷன் எதையும் செய்யாமலேயே வெளி வந்தது காலா. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு இருப்பதால், அவர்களில் பலர் இன்னும் படம் பார்க்கவில்லை.
இவை எல்லாம் காலாவின் பாக்ஸ் ஆஃபீஸ் சோடை போனதற்கு காரணம் என்று சப்பைக்கட்டு காட்டுகிறோம் என்று நினைப்பவர்களுக்கு எங்களின் ஒரு நிமிட மௌன அஞ்சலி....
ஏனென்றால், தலைவர் படங்களுக்கே உரிய தனிச்சிறப்புடன் கலெக்க்ஷன் களை காட்டுகிறது! மேற்கூறிய காரணங்கள் எதுவுமே பாதிக்காமல் கம்பிரமாக கர்ஜிக்கிறது காலா! கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும், நம்பகமான வலைத்தளங்களிருந்தும், பாக்ஸ் ஆஃபீஸ் டிராக்கர்களிலிருந்தும் தொகுக்கப்படடவை. மேலும், நம்முடைய குழுவின்
உறுப்பினர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும், உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தகவல்களை அனுப்பியவண்ணம் இருக்கின்றனர். அவற்றையும் கீழே கொடுத்துள்ளோம்.
காலா இதுவரை செய்த பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகள் :
1. சிங்கப்பூர்/மலேசியா
சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்றே திரையிடப்பட்டது. வெளியானது வார நாள் என்றாலும், சிங்கப்பூரில் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்று சாதனை படைத்தது.
மலேசியா தலைவர் கோட்டை என்பதை கபாலிக்குப் பின் காலா மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. மலேசியா-வில் "Hot Movie Checks"-ல் முதல் இடத்தைப் பிடித்து மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்தியது காலா.
2. ஆஸ்திரேலியா
முதல் இரெண்டு நாட்களின் வசூல் 1 கோடி. இது, ஆஸ்திரேலியாவில் 2018-ல் வெளியான அனைத்து தமிழ்ப்படங்களை விட மிக மிக அதிகம். ஓப்பனிங் A$105,672, வெள்ளிக்கிழமை அன்று A$100,662, சனிக்கிழமை A$110,616, ஞாயிற்றுக்கிழமை A$85,263 என்று வசூலித்து, ஆஸ்திரேலியாவின் டாப் 5 வரிசையில், பத்மாவதிற்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் (A$402,213) இருக்கிறது.
3. USA
- இதுவரை வெளியான தலைவரின் படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, நிறைய திரையரங்குகளில் வெளியான படம் காலா மட்டுமே.
- காலா, 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் தலைவரின் 4வது படமாகும். (கபாலி, எந்திரன் மற்றும் லிங்கா மற்ற படங்கள்). இந்த வார இறுதியில் 2 மில்லியன் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018-ன் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை. அமெரிக்காவில் இன்னும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
- முதல் வார இறுதியில் திரையிடப்பட்ட 324 இடங்களில், வார இறுதியில் மட்டும் $1,625,614 வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் எது? நம்ம "கபாலி" தான்! கபாலியின் இமாலய சாதனையான $3,616,002-ஐ வேறு எந்த படங்களும் நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.
4. இந்தியா
- சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒரு நாள் வசூல் செய்து சாதனை படைத்தது காலா - 1.76 கோடி
- காலாவின் 15 கோடி ஓப்பனிங், 2018-ல் வெளிவந்த அனைத்து படங்களை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15.4 கோடி.
- காலாவின் இரண்டாம் நாள் வசூல் 10.5 கோடி...இது சாதாரண விஷயமல்ல! பொதுவாக, படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விட, 50% குறைந்துவிடும்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 85% அரங்கு நிறைந்த காட்சிகள். விடுமுறை வாரம், பண்டிகை வாரம் என்று எதுவுமே இல்லாமல் இவ்வளவு கூட்டம் வருவது பெரிய விஷயம்.
- சனிக்கிழமை (9ம் தேதி) அன்றும், ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) அன்றும் முறையே 8.4 கோடி மற்றும் 9.3 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தம், முதல் 4 நாட்களில் 43.6 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
- சென்னையைப் பொறுத்த வரை, இதுவரை கிட்டதட்ட 6.6 கோடி வசூலித்துள்ளது.
- சென்னை சத்யம் திரையரங்கில், நேற்று (12ம் தேதி) மேட்னி காட்சி house full என்ற செய்தி கிடைத்துள்ளது. வார நாளான நேற்று பகல் காட்சி house-full ஆவது படத்தின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- சென்னையை அடுத்து, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சிறப்பான வசூல் செய்கிறது.
- பொதுவாக, எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் அளவிற்கு படம் ஓடுவது அரிதாகி விட்டது. இப்போது, சேலம் சினிப்ளெக்ஸ் ட்விட்டர் பதிவின் படி, அவர்களின் முதலீட்டை மீட்டு விட்டதாகவும், இனிமேல் வரும் வசூல் அனைத்தும் இலாபம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வார நாட்களிலும் 95% அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போடுவதாக அறிவித்துள்ளனர்.
- இதே போல், புதுக்கோட்டை சினிமாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 34 ஷோக்களில் அனைத்து காட்சிகளும் house-full ஆக மொத்தம் 22.6 லட்சம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வெற்றியை, அப்படம் தென் மாவட்டங்களில் பெறும் வசூல் தான் முடிவு செய்யும். அவ்வகையில், காலா மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று!
5. சவுதி அரேபியா
- சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை "காலா" பெற்றுள்ளது. மற்றும், சவுதியில் வெளியான 2வது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இதற்கு முன், ஹாலிவுட் தயாரிப்பான "Black Panther" வெளியானது.
6. மற்ற நாடுகள்:
- நைஜிரியாவில் காலாவைக் கொண்டாடுகிறார்கள், தென் ஆப்ரிக்காவில் படம் செம ஹிட் என்று கண்டம் தாண்டி தலைவர், தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.
- தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் காலாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் தினசரி காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
- வளைகுடா நாடுகளில் இதுவரை 7 கோடி வசூல் என்று தகவல் கிடைத்துள்ளது. ரமலான் நோன்பு முடிந்தவுடன் வரும் வார இறுதியிலிருந்து இன்னும் சிறப்பான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவிலும் வரும் வார இறுதி ரமலான் விடுமுறையை ஒட்டி வருகிறது என்பதால், மேலும் ஒரு சில வசூல் சாதனைகளை எதிர்ப்பார்க்கலாம்.
- ரஷ்யாவில், மாஸ்கோ நகரில் படம் வெளியாகி, கடந்த வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- ஜப்பானைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழக்கம் போல், அங்கிருக்கும் தலைவரின் ரசிகர்களின் பேராதரவால் படம் சக்கைப் போடு போடுகிறது
- கௌரி ஷங்கர்
|