திருச்சி மக்கள் மன்றமும், Rajinifans.com இனைய தளமும் இணைந்து ஜுன் 10 ந் தேதி திருச்சி மாவட்டம் , மணிகன்டம் ஒன்றியம் ராம்ஜி நகரில் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு 400 நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்ட இணைசெயலார் கர்ணன் தலைமையில் நடந்தது.
திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் மாவட்ட செயலாளர் கலீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
விழாவில் மாவட்ட நிர்வாகிகள், மணிகன்டம் ஒன்றிய நிர்வாகிகள், Rajinifans.com நிர்வாகிகள் சத்யநாராயணன், தேவ்நாத்,கிருஷ்ணகுமார், Lic ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|