 தமிழக மக்களுக்கு தற்போது திருவண்ணாமலைக்கு அடுத்து மிகவும் பிரசித்தமான மலை எதுவென்றால் அனேகமாக அது இமயமலையாகத்தான் இருக்கும். காரணத்தை நாம் கூறவும் வேண்டுமா?
இமயமலைப் பயணம் சொகுசுப் பயணமா?

சூப்பர் ஸ்டார் கடந்த 15 ஆண்டுகளாக இமயமலைக்கு பயணம் சென்று வருகிறார். பல முறை தனியாகவும், பல முறை நண்பர்களுடனும் சென்று வந்திருக்கிறார்.
இமய மலை பயணம் என்பது சிலர் நினைப்பது போல சொகுசுப் பயணம் அல்ல. அது மிகவும் கடினமான ஒன்று.
ரஜினியின் இமய பயணம் செய்தியானது எப்படி?

ரஜினியின் இமயப் பயணத்தை ஆரம்பகாலத்தில் ரகசியமாகவே இருந்தது. 1995 ஆம் ஆண்டு அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் இருந்து அவரது நடவடிக்கைகளை பத்திரிக்கைகள் உற்று நோக்க ஆரம்பித்தன. ரஜினி தும்மின்னால் கூட அது முதல் பக்க செய்தியானது. இந்த சூழ்நிலையில் தான் அவரது இமயப் பயணம் குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
ரஜினி என்றுமே யாருக்கும் சொல்லாமல், தான் பாட்டுக்கு அமைதியாக இந்த பயணத்தை மேற்கொள்வார். ஆனால் நாளாவட்டத்தில் அது ஒரு முக்கிய பத்திரிகை செய்தியானது. விமான நிலையத்தில் இருக்கும் செய்தியாளர்கள், ரஜினியை விமான நிலையத்தில் பார்த்தால், அவர் எந்த பிளைட்டில் எங்கு செல்கிறார் என்று விசாரித்து உடனே அதை செய்தியாக்கிவிடுவார்கள். தலைவர் டெல்லி பிளைட் ஏறினார் என்றாலே ரிஷிகேஷ் தான் என்ற முடிவுக்கு ஒரு காலத்தில் பத்திரிகையாளர்கள் வந்தேவிட்டனர் என்பது தான் அதில் காமெடி.
ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்

ரசிகர்களுக்கே ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் இமயப் பயணம் குறித்து பல சந்தேகங்கள் இருந்தன. பல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்தது. 1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் அவரது இமயப் பயணம் குறித்து கேட்ட ஒருவர், “அடிக்கடி இமயமலை போறீங்களே தலைவா… ஏன்?” என்று கேட்டபொழுது “நான் என்னை தேடி செல்கிறேன்” என்று பதிலளித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி வெளியான சமயத்தில் ஆனந்த விகடனில் பனிமலை பயணத் தொடர் என்ற தொடர் கட்டுரை சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் குறித்து முதன் முதலில் வெளியானது. பல அபூர்வ படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியது. இமயமலை பயணம் என்றால் ஏதோ உல்லாசப் பயணம் என்று நினைத்துகொண்டிருந்தவர்களுக்கு அது எத்தகைய ஒரு கடுமையான பயணம் என்று புரிந்தது.
விமர்சித்தவர்கள் அவசியம் பார்க்கவேண்டும் சாரே…

ரஜினியின் இமயப் பயணத்தை பற்றி எந்தவித ஞானமும் இன்றி தவறாக விமர்சித்தவர்கள் அநேகம் உண்டு. கிண்டலடித்த பத்திரிக்கைகள், வெப்சைட்டுகள், ப்ளாக்குகள் ஏராளம் உண்டு. அவர்கள் அனைவரும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகப்போகும் இந்த தொடரை அவசியம் பார்க்கவேண்டும். அல்லது குறைந்த பட்சம் இன்றைய ஜூ.வி.யில். துவங்கும் இது குறித்த தொடரையாவது படிக்கவேண்டும்.
இமயமலைப் பயணம் என்றால் என்ன? ரஜினி ஏன் அங்கு செல்கிறார் என்று அப்பொழுது தான் அவர்களுக்கு புரியும். ஆனால் ஒன்று… மேற்படி தொடரை பார்த்தால் தவறாக விமர்சித்தவர்கள் நிச்சயம் தங்கள் கருத்துக்களுக்கு வெட்கித் தலை குனிவார்கள்.
போட்ட மேக்கப்பை கழுவி அது காய்வதற்குள் மறுபடியும் கேமிரா முன்னாள் நிற்கும் addict நடிகர்களுக்கு நடுவே, நாடே போற்றும் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும்,. நடிப்பை தாண்டி, பல அதிசயங்களோடு விரவிக் கிடக்கும் இந்த வையத்தை காண புறப்பட்டவர் நம் தலைவர் ஒருவரே.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு உலக அறிவோ பயண அறிவோ துளியும் இன்றி காலம் கழிக்கும் நடிகர்களுக்கு நடுவே, தனியாளாக உலகை சுற்றி வந்த வாலிபன் நம் சூப்பர் ஸ்டார். மேலும் இவரை போன்ற எந்த தட்ப வெப்ப நிலையையும் சமாளிக்கக்கூடிய நபரை பார்ப்பது அரிது (அதாவது WEATHER BEATEN person) என்று துக்ளக் ஆசிரியர் சோ ஒரு முறை கூறினார். அது எத்துனை உண்மை…!!
சூப்பர் ஸ்டாரின் இமயப் பயணம் எங்கிருந்து துவங்குகிறது?
அவரின் இமயமலைப் பயணத்திற்கான காரணம் என்ன?
அவர் எப்படி செல்வார்? யாருடன் தங்குவார்?
என்ன கெட்டப்பில் மேற்படி பயணத்தின் போது இருப்பார்?
பாபாஜி குகை எங்கே இருக்கிறது? அதன் சிறப்பு என்ன?
யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாமா?
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விஜய் டி.வி.யின் மேற்படி தொடர் பதிலளிக்கும். தவறாமல் பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
சூப்பர் ஸ்டாரின் இமய மலைப் பயணம் குறித்து, விஜய் டி.வி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பவிருக்கிறது. இமயமலை மற்றும் பாபாஜி குகை, பாபாஜி ஆகியாய்வை பற்றி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம். வரும் 21 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை இரவு 10.00 மணிக்கு இந்நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது.
இது குறித்த மாலை மலர் 19/09/09 செய்தி

|