Related Articles
சிவாஜி தி பாஸ் - இது வரை குவித்த விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி ஈரம் திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்
சினிமா குடும்ப உறுப்பினர்கள் ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்
தலைவர் - ரஜினி வெளியிட்ட ஆவணப் படம்!
Rajinikanth is the right choice for Endhiran! - Sabu Cyril
ஸ்ரீதேவி திருமணம்...தலைவர் வாழ்த்து!
ரத்ததானத்துக்கென்று ரஜினி ரசிகர்கள் துவங்கியுள்ள வெப்சைட்!
Soundharya opens up on Sultan the Warrior
சி.பி.எஸ்.இ. பொது அறிவு பாடத்தில் ரஜினி
Thalaivar Rajinikanth blesses Jeyam Ravi...

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தென்னிந்திய நடிகர் சங்க விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்
(Monday, 24th August 2009)

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 15-ந் தேதி முதல், நாடக விழா நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் நடித்த 'வெற்றி வெற்றி வெற்றி' என்ற நாடகம் நடைபெற்றது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

'ரொம்ப வித்தியாசமான நிகழ்ச்சி இது. நான் பொதுவாக எல்லா விழாக்களுக்கும் சரியான நேரத்துக்குப் போய் விடுவேன். இந்த நிகழ்ச்சி நமது குடும்ப விழா. நமது சகோதர, சகோதரிகள் இங்கு இருக்கிறார்கள் என்பதால், கொஞ்சம் தாமதமாக வந்தேன்.

கசப்பான சம்பவங்கள்...

1979-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. அப்போது எம்.ஜி.ஆர். தலைமையில் சிவாஜி நடித்த 'அசோக சக்கரவர்த்தி' நாடகம் நடைபெற்றது. நான் 'ஷூட்டிங்' முடித்து விட்டு, ஒரு ஸ்கூட்டரில் நடிகர் சங்கத்துக்கு வந்தேன். போலீஸ்காரர்கள் என்னை உள்ளே விடவில்லை. என்னை யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதன்பிறகு சிலர் வந்து, 'இவர்தான் ரஜினிகாந்த்' என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே நாடகத்தை பார்த்து ரசித்தேன். அதன்பிறகு சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. இப்போதுதான் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

சரத்குமார், இங்கே நாடகத்தில் நடித்தார். அவரிடம் 'நீங்கள் ஏற்கனவே நாடகத்தில் நடித்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'பழக்கம் இல்லை, இதுதான் முதல் அனுபவம்' என்று சொன்னார்.

எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் 'வேலைக்காரன்' படத்தில் நான் நடித்தபோது, குறிப்பிட்ட ஒரு சீனில் குழப்பம் ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.கே.ராமசாமி, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வி.கே.ராமசாமி என்னை அழைத்து, 'நீ நாடகத்தில் நடித்து இருக்கிறாயா?' என்று கேட்டார். 'நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். 'மேடை நாடகங்களில் நடித்தால்தான் நடிகர்களுக்கு 'டைமிங் சென்ஸ்' வரும்' என்று சொன்னார்.

என் நடிப்புலக அறிமுகமே மேடையில்தான் நடந்தது. நான் பஸ் கண்டக்டராக இருந்தபோது 25 நாடகங்களில் நடித்தேன். அதைப் பார்த்து என் நண்பர்கள், 'நீ சினிமாவுக்கு போனால் பெரிய ஆளாகி விடுவாய்' என்று ஏத்திவிட்டுட்டாங்க. அப்படியே நான் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் 2 வருடங்கள் நடிப்பு பயிற்சி பெற்றேன். என்னுடைய நாடக நடிப்பை கே.பாலசந்தர் சார்தான் மாத்தினார்.

நாளை பற்றி மட்டும்தான் யோசிப்பேன்!

கலை உலகின் மிகப்பெரிய மகான்களான என்.டி.ராமாராவ், சிவாஜி, ராஜ்குமார் போன்றவர்களின் கடைசி காலகட்டத்தில் அவர்களுடன் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த மகான்கள் நாடக கலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்கள். இதுதொடர்பாக நானும் அவர்களிடம் பேசி இருக்கிறேன்.

நாடகத்தில் நடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம், வேறு எதிலும் கிடைக்காது. நான் எப்போதுமே நாளையை பற்றி யோசிப்பேன். நாளை மறுநாளைப் பற்றி யோசிக்க மாட்டேன்.

நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பது எப்படி, பார்ப்பது எப்படி, வசனம் பேசுவது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் சொல்லிக் கொடுப்பது இல்லை. அதுதான் தலைவிதி. சம்பாதித்த பணத்தை எப்படி கட்டிக்காப்பது என்றும் நாடக நடிகர்களுக்கு தெரியாது.

பொழுதுபோக்காக ஆரம்பித்து பிழைப்பாக மாறுவது இரண்டு விஷயங்களில்தான். ஒன்று கலை, இன்னொன்று விளையாட்டு. கலைஞர்களுக்கு பணம் இருந்தால் பொழுது போய்விடும். பணம் இல்லை என்றால், விடிந்தாலே கஷ்டம். இங்கே மனோரமா பேசும்போது, கலைஞர்களுக்கு வயது ஆகக்கூடாது என்று கூறினார். உடம்புக்கு வயது ஆவதை தடுக்க முடியாது. மனதுக்கு வயது ஆகாமல் தடுக்க முடியும்.

தங்கத் தட்டில் தேங்காய்!

நடிகர் சங்கத்துக்கு நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். என்ன விஷயமாக இருந்தாலும், மனநிறைவோடு செய்ய வேண்டும்.

நடிகர் சங்கம் இருப்பது தி.நகரில். அதுவும் 18 கிரவுண்டில். இந்த இடத்தை வைத்துக்கொண்டே ஒரு மாதத்தில் சில லட்சங்கள் வருமானம் பார்க்கலாம். 18 கிரவுண்டு நிலத்தை வைத்துக்கொண்டு வருமானம் இல்லாமல் இருப்பது தங்கத் தட்டில் தேங்காய் விற்பது போலாகி விடும்.

இப்போது நடப்பது உங்கள் ஆட்சி. கலைஞர் முதல்வராக இருக்கிறார். ஆச்சி மனோரமா போன்றவர்கள் அவரிடம் சென்று நடிகர் சங்கத்துக்கு உதவ வேண்டும் என்று சொன்னால், அவர் தட்ட மாட்டார். அந்த இடத்தை வளர்ச்சியடையச் செய்து வருமானம் வருகிற மாதிரி செய்யலாம். அழகான திரையரங்கத்தை உருவாக்கலாம். இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்த வேண்டும். நடிகர் சங்கம் உருவாவதற்கு காரணமான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு பாடுபட்ட விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றவர்களை மறக்க முடியாது, என்றார் ரஜினி.

நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் எம்.என்.ராஜம், முதல் பெண் தலைவர் அஞ்சலிதேவி ஆகிய இருவரும் விழாவில் கவுரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்த் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.

விழாவில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோரும் பேசினார்கள்.

பெரும் வரவேற்பு!

விழாவில் ரஜினியின் பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெரும் ஆரவாரத்தோடு அவரது பேச்சை ரசித்தனர். அவர் பேச எழுந்த போதே, நடிகர்கள் பலர் 'தலைவா வாழ்க... உங்களைத்தான் நம்பியிருக்கோம்' என கோஷமிட்டபடி இருந்தனர்.

-சங்கநாதன்

 

 

 

 

 

 

 

 






 
12 Comment(s)Views: 960

veera,Dubai
Tuesday, 22nd September 2009 at 09:44:40

Am really wondering why these people want to ask help from our Thalaivar on the stage in front of everyone...i saw that program video it's totally a bullshit way to ask help and putting a |Great |Man in critical situation..and i wanna tell those people " Don't think tat you guys have trapped our Thalaivar..he's gonna trap this Tamil Nadu."
selvakumar.a,tamilnadu/thirupur
Sunday, 20th September 2009 at 05:01:56

thaliva one day iam coming seeing your
Ragu,Srilanka/Colombo
Sunday, 13th September 2009 at 10:41:00

Hai!!! Frnds
In this particular events Mr.Ratharavi requested "Rajini" sir to only participate in our events the rest will be(Collection) automatically come to our "Committe">> Which shows Thalaivar's Mass power>>

kiran,bangalore
Tuesday, 25th August 2009 at 22:37:25

please translet in english, i am big fan of thaliver,
Balaji,India/New Delhi
Monday, 24th August 2009 at 07:52:05

I felt really very happy after reading this article, but equally disappointed becaused some of our friends told us that he is also going 2 act in a small role in the stage play....But no worrys....Thalaiver is gr8 and rock as always....
rajesh,chennai,india
Monday, 24th August 2009 at 06:31:58

please translate to english...........
Andrew Singh,Toronto, Canada
Monday, 24th August 2009 at 02:40:07

Hey guyz n admins..wat i cud figure out here is our one n only thalavier is receiving a gift frm d Nadagir Sangam i guess..pls pls pls pls pls pls pls guyz translate into English so that millions of non Tamil literacy of RAJINIKANTH fans out der cud understand ur tremendous hardwork via diz article presentation in diz article..so sorry guyz if i been rude..jz a small request guyz..thnx..Long life Thalavar Rajnikanth sir and his fans out der..
sunil,India (Bengaluru)
Monday, 24th August 2009 at 02:14:58

Pls translet in english
ayyappan venkatraman,hyderabad
Monday, 24th August 2009 at 02:04:13

SS is legend. He is a man who can save the tamil film industry.Just see how he transformed himself from an actor in to orator. Entire film fratenity is behind him. Even if he comes to public service everyone will respect and listen to his word. he true man with generosity in his heart. God bestowed him with greatness of gratitude towards all the people . Long live SS ,Jai hind. NO ONE EVER MUCH WITH HIS HONESTY, SINCERERITY AND SIMPLICITY. HE IS MAN WITH TRUE HEART. GOD BLESS HIM.
SKB, ABU DHABI,U.A.E.
Monday, 24th August 2009 at 01:10:00

ATLEAST NOW OTHER BIG ACTORS ALSO FOLLOW THE SS-ATTEND AND PROMOTE DRAMA/STAGE PERFORMANCES.
Raja,chennai
Monday, 24th August 2009 at 00:39:23

Vijayakanth must learn manners from rajnikanth. He has praised him. But that show becames a big hit becos of arrival of Super Star. My coushin brother is in singapore, he said that tickets in singapore and malyasia is sold only after confirmed news received that ss is participating in that show. Eventhough SS has appraised for Vijayakanth.
prema,m'sia
Monday, 24th August 2009 at 00:16:42

thanks for posting such an article.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information