வாழும்போதே வரலாறு ஆனவர்கள் வெகு சிலரே. அவர்களுள் சூப்பர் ஸ்டாரும் ஒருவர் என்பது அவர் ரசிகர்களாகிய நமக்கெல்லாம் பெருமை தான். சென்ற ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்தில் சூப்பர் ஸ்டார் பற்றிய பாடம் இடம்பெற்றதை முதன் முதலில் அறிவித்தது நமது தளம் தான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
The legend turns a lesson – Superstar in CBSE school book!!
தற்போது நான்காம் வகுப்பு பாடத்திலும் ரஜினி பற்றிய ஒரு சிறு கேள்வி பதில் இடம்பெற்றுள்ளது. பொது அறிவு பாடத்தில் “Miscellany” என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடத்தில் மேற்படி கேள்வி பதில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான செய்தி நமக்கு முதலிலேயே கிடைத்துவிட்டபோதும் பணிச் சுமை காரணமாக என்னால் உடனடியாக தளத்தில் வெளியிடமுடியவில்லை. இது தொடர்பாக தினமலர் வெளியிட்ட செய்தியை நண்பர் ஒருவர் எனக்கு தெரிவித்திருந்தார். சற்று அவகாசம் எடுத்து விரிவாக வெளியிடலாம் என்று காத்திருந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இந்த பாடப் புத்தகத்தை நண்பர் ஒருவர் SCAN செய்ய அளித்து உதவினார். புத்தகத்தை புரட்டும்போது தான் புரிந்துகொண்டேன், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் அது என்றாலும் நமக்கு தெரியாத, நாம் அறிந்துகொள்ளவேண்டிய பொது அறிவு சம்பந்தமான விஷயங்கள் பல அதில் உள்ளன. அந்த வகையில் சில பொது அறிவு விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
ரஜினி பற்றிய செய்தி இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு என்றால் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள் இந்தியா முழுதிற்கும் பொதுவானது என்பது கூடுதல் சிறப்பு.
முன்னதாக தினமலர் வெளியிட்ட செய்தி :
சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினிகாந்த்
நாகர்கோவில்: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் என்று நான்காம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது அறிவு பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நான்காம் வகுப்புக்கான பொது அறிவு புத்தகத்தை டில்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. டில்லி ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் இந்த ஆண்டு நான்காம் வகுப்புக்கான பொதுஅறிவு பாடப்புத்தகத்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் 23-வது பக்கத்தில் மிசெலனி (பல்வகை துணுக்குகள்) என்ற தலைப்பில் 18-வது பாடம் இடம் பெற்றுள்ளது.இதில் நடிகர் ரஜினிகாந்தின் படம் இடம் பெற்றுள்ளது. பாடத்தின் முதல் கேள்வியாக படத்தில் இடம் பெற்றுள்ளவர் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது. படத்தின் அடிப்பகுதியில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சினிமா நடிகர் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
|