சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி எழுதாத "வலைஞர்கள்" இல்லை என்று சொல்லலாம். அப்படி அவரைப்பற்றி அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஏதாவதொரு விஷயத்தை சொல்லி இருப்பார்கள்.
இங்கே, நான் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி தெரிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" என்றதுமே நம் மனத்திரையில் இந்த பாயும் புலி. சுறுசுறுப்பு, ஸ்டைல், உத்வேகம் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் விவரிக்க முடியாத ஆளுமை நிறைந்த காந்தம் இந்த ரஜினிகாந்த். சிறியோர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்கும் திரை உலகின் மன்னன். இவர் பற்றி அரிய தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில படங்கள் (ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார். இது மிகவும் பழைய செய்தி...... ஜப்பானில் ரஜினி அவர்கள் நடித்த "முத்து" படம் 200௦௦ நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும், அதை தொடர்ந்து "சந்திரமுகி" படம் சக்கை போடு போட்டதும் கூட அனைவரும் அறிந்ததே....
பின்வரும் விஷயம் கூட பழைய செய்திதான்... ஆனால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ரஜினி அவர்கள் எத்தனையோ நடிகர்கள், நடிகைகளுடன் நடித்து உள்ளார். ஹிந்தியில் அவர் நடித்த சமயத்தில், ஷாருக் கான் தவிர அனைவரும் ரஜினியுடன் நடித்து உள்ளனர்.
அதே போல், தமிழிலும், பெரிய ஹீரோயின்கள் அனைவரும் அவருடன் நடித்து உள்ளனர் (சுகன்யா, சிம்ரன் போன்ற சிலரை தவிர). இதை சற்று விரிவாக பார்ப்போம். சொல்லபோகும் விஷயம் யாருக்கும் தெரியாததல்ல.... புதிதும் அல்ல.........
ஒரே குடும்பத்தை சேர்ந்த எம்.ஆர்.ராதா (நான் போட்ட சவால் படத்திலும்), ராதாரவி (உழைப்பாளி, அண்ணாமலை உள்ளிட்ட படங்களிலும்), ராதிகா (போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்களிலும்), வாசு விக்ரம் (சிவாஜி தி பாஸ்) உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளனர்.
இதே போன்று உறவினர்களான சாருஹாசன், கமலஹாசன், சுஹாசினி, ஜி.வி., மணிரத்னம் போன்றோர் ரஜினியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இவர்கள் நிஜத்தில் உறவினர்கள் மற்றும் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளனர்.
(சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்)
சகோதரர்கள் : சாருஹாசன் மற்றும் கமல்ஹாசன் :
சாருஹாசன் - தளபதி, வீரா
கமலஹாசன் - அபூர்வ ராகங்கள் தொடங்கி தில்லு முல்லு வரை ஏறத்தாழ 17 படங்கள்.
ஜி.வி மற்றும் மணிரத்னம்
ஜி.வி. - "தளபதி" படத்தை "ஜி.வி. பிலிம்ஸ் பேனரில் தயாரித்தார், அவரின் சகோதரர் மணிரத்னம் படத்தை இயக்கினார்.
ராம்குமார் மற்றும் பிரபு
ராம்குமார் - சந்திரமுகி
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி
பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம்
பிரபு தேவா - டான்ஸ் மாஸ்டராக பல படங்கள். பாபா உள்ளிட்ட சில படங்களில் ஒரு காட்சியில் தலை காட்டியுள்ளார்.
ராஜு சுந்தரம் - நடனம் மட்டும் அமைத்து உள்ளார்.
ராஜேஷ் ரோஷன் மற்றும் ராகேஷ் ரோஷன்
ராஜேஷ் ரோஷன் - ரஜினி நடித்த "பகவான் தாதா" உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார். இவர் இன்றைய பாலிவுட் இளம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் அவர்களின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.............
சசி கபூர் மற்றும் ரிஷி கபூர்
சசி கபூர் - கைர் கானூனி
ரிஷி கபூர் - தோஸ்தி துஷ்மணி
அம்பிகா மற்றும் ராதா :
அம்பிகா - எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த், மாவீரன் உள்ளிட்ட பல படங்கள்.
ராதா - பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்கள்.
நக்மா மற்றும் ஜோதிகா
நக்மா - பாட்ஷா
ஜோதிகா - சந்திரமுகி
ஜோதிலக்ஷ்மி மற்றும் ஜெயமாலினி
ஜோதிலக்ஷ்மி : முத்து உள்ளிட்ட பல படங்கள்.
ஜெயமாலினி : அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்
டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதகுமாரி
டிஸ்கோ சாந்தி : பல படங்கள்
லலிதகுமாரி : மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை)
இளையராஜா - ரஜினி படத்திற்கு பாடல் எழுதி உள்ளார், பின்னணி பாடி உள்ளார், 65-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
கங்கை அமரன் - ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.
சரிதா - தப்பு தாளங்கள், புதுக்கவிதை உள்ளிட்ட படங்கள்.
விஜி - தில்லு முல்லு படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார்.
ஜெயசுதா - பாண்டியன் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சுபாஷினி - நினைத்தாலே இனிக்கும், ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
பாட்டி மற்றும் பேத்தி
செளகார் ஜானகி - "தில்லு முல்லு" (இவரின் பிறந்த நாளும், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12 தான்).
வைஷ்ணவி - " தர்மதுரை" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
அம்மா, பெண்
லக்ஷ்மி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஐஸ்வர்யா - ரஜினியுடன் "எஜமான்" படத்தில் நடித்து இருப்பார்.
ரஜினி நடித்த படங்களை டைரக்ட் செய்த சகோதரர்கள் (டைரக்டர்கள் ஸ்ரீதர் மற்றும் சி.வி.ராஜேந்திரன்)
ஸ்ரீதர் : இளமை ஊஞ்சலாடுகிறது, துடிக்கும் கரங்கள்
சி.வி.ராஜேந்திரன் : கலாட்டா சம்சாரா (கன்னடம்), கர்ஜனை
கணவன் மற்றும் மனைவி - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்
கமலஹாசன் - பல படங்கள்
சரிகா - கங்குவா (மலையூர் மம்பட்டியான் தமிழ் படத்தின் ஹிந்தி பதிப்பு, தமிழில் ஜெயமாலினி நடித்த வேடத்தை, இந்த ஹிந்தி பதிப்பில் ஏற்று நடித்தார்.)
மனோஜ் கே.ஜெயன் - தளபதி படத்தில் நடித்து இருப்பார்.
ஊர்வசி - ஜீவன போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருப்பார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி - "நான் சிகப்பு மனிதன்" உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
மணிமாலா - "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
சிவச்சந்திரன் - சிவப்பு சூரியன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
லட்சுமி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
சுந்தர் சி. - அருணாசலம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினியுடன் நடித்து இருப்பார். இந்த படத்தை இயக்கியவரும் அவரே.
குஷ்பு - தர்மத்தின் தலைவன், நாட்டுக்கொரு நல்லவன், மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
போஸ் வெங்கட் - 'சிவாஜி" படத்தில் வில்லன் சுமனின் கையாளாக நடித்து இருப்பார்.
சோனியா - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், சிறுமியாக நடித்து இருப்பார்.
விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர் சலீம் சைமன் உள்ளிட்ட சில படங்கள்.
அம்பரீஷ் - "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார். (அம்பரீஷ் பற்றி ஒரு உபரி செய்தி..... மு.க.முத்து நடித்த "பூக்காரி" என்ற படத்தில் தமிழ் படங்களில் அறிமுகமாகி இருப்பார். இதில், அம்பரீஷுக்கு வில்லன் வேடம். தொடர்ந்து வெளி வந்த மற்றொரு மு.க.முத்து நடித்த படமான "சமையல்காரன்" படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து இருப்பார். அப்போது அவர் பெயர் "அமர்நாத்". பின்னாளிலே "அம்பரீஷ்" என்ற பெயர் மாற்றத்துடன் நடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தார்).
சுமலதா - "கழுகு", "முரட்டுகாளை" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார்.
பாக்யராஜ் : "நான் சிகப்பு மனிதன்" மற்றும் "அன்புள்ள ரஜினிகாந்த்"
பிரவீணா : "பில்லா"
பூர்ணிமா ஜெயராம் : "தங்கமகன்" (ரஜினியின் ஜோடியாக நடித்து இருந்தார்).
மணிரத்னம் - தளபதி படத்தை டைரக்ட் செய்தார்.
சுஹாசினி - தாய்வீடு (ரஜினியின் தங்கையாக), மனதில் உறுதி வேண்டும் (இதில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்), தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து இருப்பார்.
ஐ.வி.சசி - காளி, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்தவர்.
சீமா - காளி, எல்லாம் உன் கைராசி உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்தவர்.
பிரகாஷ் ராஜ் - "படையப்பா" படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.
லலிதகுமாரி - மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை). லலிதகுமாரி ரஜினியுடன் "மாப்பிள்ளை" படத்தில் நடித்து இருந்தார்.
தந்தை, மகள் மற்றும் மகன் - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்
ஜெமினி கணேசன் : "அலாவுதீனும் அற்புத விளக்கும்" படத்தில் நடித்து இருப்பார்.
ரேகா : "ப்ரஷ்டாசார்" மற்றும் "பூல் பனே அங்காரே" படங்களில் இணைந்து நடித்து இருப்பார்.
தர்மேந்திரா - இன்ஸாப் கோன் கரேகா மற்றும் பாரிஷ்டே (ஹிந்தி திரைப்படம்).
ஹேமமாலினி - அந்தா கானூன் (ஹிந்தி திரைப்படம்). ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சன்னி தியோல் - சால்பாஸ் (ஹிந்தி திரைப்படம்)
விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர், சலீம், சைமன் படத்தில் நடித்து இருப்பார்.
ப்ரீதா - படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பார்.
முத்துராமன் : "போக்கிரி ராஜா" படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
கார்த்திக் : "நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.
சிவாஜி - பல படங்கள்.
ராம்குமார் - சந்திரமுகி (ஒரே ஒரு காட்சி).
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி
ஒய்.ஜி.பார்த்தசாரதி - "பாயும் புலி"
ஒய்.ஜி.மகேந்திரன் - "பாயும் புலி", துடிக்கும் கரங்கள், சிவப்பு சூரியன், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட படங்கள்.
வி.கே.ராமசாமி - நல்லவனுக்கு நல்லவன், வேலைக்காரன், அருணாசலம் உள்ளிட்ட பல படங்கள்.
வி.கே.ஆர்.ரகு - பெரிய அளவில் பிரபலமடையாத இவர் ரஜினியுடன் நடித்த படம் நல்லவனுக்கு நல்லவன்...
ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் - ராகேஷ் ரோஷனின் மகனான இவர், ரஜினியின் மகனாக "பகவான் தாதா" படத்தில் நடித்து இருந்தார்.
ரஜினியுடன் ஜோடியாகவும் பிறகு வேறு வேடங்களிலும் நடித்தவர்கள் :
சுஜாதா : ஜோடியாக "அவர்கள்" படத்திலும், தாயாக "கொடி பறக்குது" மற்றும் "பாபா" படங்களிலும் நடித்தார்.
ஸ்ரீவித்யா : ஜோடியாக "அபூர்வ ராகங்கள்" படத்திலும், சகோதரி வேடத்தில் "மனிதன்" படத்திலும், மாமியாராக "மாப்பிள்ளை" படத்திலும், தாயாராக "தளபதி" படத்திலும் நடித்து இருப்பார்.
ரஜினியுடன் வெகு நாட்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தவர்கள் :
ரவிக்குமார் : "அவர்கள்" படம் (1977) மற்றும் "சிவாஜி தி பாஸ் (2007).
ராஜப்பா : "நினைத்தாலே இனிக்கும்" (1979) மற்றும் "படையப்பா" (1999)
சுமன் - "தீ" (1981) படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்து இருப்பார். "சிவாஜி தி பாஸ்" (2007), வில்லனாக நடித்து இருப்பார்.
ஒரே குடும்பத்தின் இருவேறு உறவினர்கள் : மாமனார் மற்றும் மருமகள்.
அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்", "கிரப்தார்" உள்ளிட்ட ஹிந்தி படங்கள்.
ஐஸ்வர்யா ராய் : "எந்திரன்" படத்தில் ரஜினியின் இணையாக நடித்து கொண்டுள்ளார்.
ரஜினி ஹிந்தி படங்களில் நடித்த போது (தற்போது சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை), யார் யாருடன் நடித்தார் என்று பார்ப்போம்.
அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்" மற்றும் "கிரப்தார்"
தர்மேந்திரா : "இன்ஸாப் கோன் கரேகா" மற்றும் "பாரிஷ்டே"
சஞ்சய் தத் : "கூன் கா கர்ஸ்"
ரிஷி கபூர் : "தோஸ்தி துஷ்மணி"
சசி கபூர் : "கெயர் கானூனி"
அமீர் கான் : "ஆதங் ஹாய் ஆதங்" (ஆமிர்கான் ரஜினியின் தம்பியாக நடித்து இருப்பார்). படத்தின் டைட்டிலில் கூட முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.
வினோத் கண்ணா : "கூன் கா கர்ஸ்", இன்சானியாத் கா தேவதா" மற்றும் "பாரிஷ்டே"
சத்ருகன் சின்ஹா : "அஸ்லி நக்லி"
ராஜேஷ் கண்ணா :"பேவபாய்"
சன்னி தியோல் : "சால்பாஸ்"
கோவிந்தா : "ஹம்" மற்றும் "கெயர் கானூனி"
மிதுன் சக்கரவர்த்தி : "பிரஸ்டாசார்"
ஜாக்கி ஷராப் : "உத்தர் தக்ஷின்"
ஜிதேந்திரா : "தமாச்சா" மற்றும் "தோஸ்தி துஷ்மணி"
ராகேஷ் ரோஷன் : "மகாகுரு", ஜீத் ஹமாரி" மற்றும் "பகவான் தாதா"
அனில் கபூர் : "புலாந்தி"
|