சாபு சிரில்... இந்தியாவின் ட்ரெண்ட் செட்டர் எனும் அளவுக்கு மெகா படங்களுக்கு பிரமாண்டமான செட்களை அமைப்பதில் நிபுணர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படமான எந்திரனுக்கு இவர்தான் கலை இயக்குநர்.
எந்திரன் - தி ரோபோ என்பது சாதாரண படமல்ல... விஞ்ஞானம், கலை அழகு, தொழில் நுட்பம் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த ஒரு ஆல் இன் ஒன் சர்வதேசப் படம் என்பதால் அதன் தரம், தன்மை புரிந்து பணியாற்றக் கூடிய கலை இயக்குநர் தேவைப்பட்டார். அதன் விளைவுதான் சாபு சிரிலை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர்.
சென்னைக்கு அருகே மாயாஜால் எதிரே, சாபு சிரில் அமைத்துள்ள பிரமாண்ட செட்தான் இன்றைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப்பெரிய சுற்றுலா மையமாகிவிட்டது.
இந்த செட்டுக்கு ஆன செலவு மட்டும் ரூ.5 கோடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த செட்டின் நேர்த்தியை. இந்திய திரையுலக வரலாற்றில் இத்தனை செலழித்து க்ளைமாக்ஸுக்கு யாரும் செட் போட்டிருப்பபார்களா என்பது சந்தேகமே.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை!
“எந்திரன் படம் முழுதும் க்ளைமேக்ஸ் விறுவிறுப்பு இருக்கும்!!” - சாபு சிரில்
எந்திரனைப் பற்றி செய்திகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி வருகிறது. ஏதோ குமுதம் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அவ்வப்போது யானைப் பசிக்கு சோளப் பொறி போல ஒன்றிரண்டு செய்திகளை தருகின்றன.
இதோ இந்த வாரம் குமுதத்தில் எந்திரனைப் பற்றி வந்திருக்கும் அசத்தல் கட்டுரை ஒன்று. படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் எந்திரன் பற்றியும் சூப்பர் ஸ்டார் பற்றியு சில வார்த்தைகள் கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதில் கவனிக்கவேண்டியது:
1) எந்திரன் படம் முழுக்க க்ளைமேக்ஸ் பரபரப்பு இருக்கும்.
2) ஓம் சாந்தி ஓம் படத்தை விட எனக்கு பெயரை பெற்று தரும்.
3) ஷங்கர் நினைப்பதை செய்துகாட்டுவதே ஒரு சவால் தான்.
4) ஷங்கருக்கு ஒவ்வொரு பிரேமும் எப்படி வர வேண்டும் என்று மனதில் வைத்திருக்கிறார்.
5) சூப்பர் ஸ்டார் செட்டுக்கு வந்துவிட்டால் எல்லா விஷயமும் பேசுவார். தனிப்பட்ட விஷயங்களை பற்றி அக்கறையாக விசாரிப்பார்.
6) யார் வேலையிலும் ரஜினி குறுக்கிடமாட்டார்.
|