சூப்பர் ஸ்டாரின் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் மட்டுமல்ல, அதிக விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த படம் சிவாஜி தான்.
தற்போது இந்த வெற்றி மகுடத்தின் சிறகில் வைரமாய், சிவாஜி படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் EFEX க்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
ஸ்பெஷல் EFEX ஐ சிறப்பான முறையில் கையாண்டதர்க்கும் குறிப்பாக செக்க செவப்பாக ரஜினியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் காட்டிய ஸ்டைல் பாடலே இந்த விருதை இப்படத்திற்கு வாங்கித் தந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இது வரை சிவாஜி குவித்த விருதுகள் பின்வருமாறு:
1. NDTV - 2007 ஆம் ஆண்டின் சிறந்த இந்தியர் விருது - பொழுதுபோக்காளர் பிரிவு
2. GV SICA - சிறந்த நடிகர்
3. VIJAY AWARDS 2007 - சிறந்த அபிமான நடிகர்
4. FILMFANS - சிறந்த நடிகர்
5. FILMFARE - சிறந்த இசையமைப்பாளருக்கான விருது - ஏ.ஆர்.ரஹ்மான்
6. FILMFARE - சிறந்த ஒளிப்பதிவாளர் விர்து - கே.வி. ஆனந்த்
7. VIJAY AWARDS 2007 - சிறந்த இசையமைப்பாளருக்கான விருது - ஏ.ஆர்.ரஹ்மான்
8. VIJAY AWARDS 2007 - சிறந்த பாடலாசிரியர் - பல்லேலக்கா - நா.முத்துகுமார்
9. GV SICA - சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தாரணி
10.GV SICA - சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - விவேக்
11. FILMFANS - சிறந்த திரைப்படம்
12. FILMFANS - சிறந்த பெண் பின்னனி பாடகர் - சின்மயி - சகானா சாரல்
13. TAMIL MUSIC AWARDS - சிறந்த இசையமைப்பாளருக்கான விருது - ஏ.ஆர்.ரஹ்மான்
14. VIJAY AWARDS 2007 - சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தாரணி
15. TAMIL MUSIC AWARDS - சிறந்த இயக்குனர் - ஷங்கர்
16. TAMIL MUSIC AWARDS - சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தாரணி
17. NATIONAL AWARD - சிறந்த ஸ்பெஷல் EFEX
18. ஜெயா டி.வி. - ஹாசினி பேசும்படம் - 2007 ஆண்டு சிறந்த திரைப்படம்
எதாவது விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்.
மாநில அரசின் விருதுகளை அள்ளியது ‘சிவாஜி’!
சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களிலேயே அதிகபட்ச சாதனை நிகழ்த்திய படம் சிவாஜி தான். வசூலிலாகட்டும் விருதுகளை குவித்ததிலாகட்டும் ‘சிவாஜி’ தி பாஸ் தான் டாப்.
சிவாஜி திரைப்படம் இது வரை குவித்த விருதுகளைப் பற்றி ஏற்கனவே கடந்த வாரம் நாம் ஒரு தனிப் பதிவு அளித்திருந்தோம். இதோ தற்போது மீண்டுமொரு முறை சாதனை நிகழ்த்தியிருக்கிறது சிவாஜி. 2007 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிவாஜி திரைப்படம் பல்வேறு துறைகளில் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது.
சிவாஜி படம் சூப்பர் ஸ்டாருக்கு நிச்சயம் மாநில அரசின் ‘சிறந்த நடிகர்’ விருதினை பெற்றுத் தரும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தாலும் படம் இத்துணை விருதுகளை குவிக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
சிவாஜி குவித்துள்ள 2007 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதுகள்:
1) சிறந்த திரைப்படம் - சிவாஜி
2) சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)
3) சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவாஜி)
4) சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் (சிவாஜி)
5) சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவாஜி)
6) சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி (சிவாஜி)
‘சிவாஜி’ படம் குவித்து வரும் இந்த சாதனைகளுக்கு முழு முதல் காரணமாக உள்ள சூப்பர் ஸ்டாருக்கும், சாதித்து காட்டிய இயக்குனர் ஷங்கருக்கும் மற்றும் விருது பெற்றுள்ள சுமன், விவேக், தோட்டா தரணி, சின்மயி ஆகியோருக்கும், படத்தின் வெற்றிக்காக பாடுபட்ட ஏனைய கலைஞர்களுக்கும் உறுதுணையாக இருந்த மற்ற அனைவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
எந்திரன் இந்த சாதனையை முறியடிக்க இறைவனை வேண்டுவோம்.
|