Sathyaraj
26 December 2008
சூப்பர்
ஸ்டார் ரஜினி என்னுடைய மிகச்சிறந்த நண்பர் என்றும் அவரைப்
பறஅறி தான் ஒருபோதும் தவறாக தனிப்பட்ட முறையில் தாக்கிப்
பேசவில்லை என்றும் கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
பெரியார் வலைக்காட்சி தளத்துக்கு அவர் அளித்து பேட்டியில்
இதைத் தெரிவித்துள்ளார்.
இதில் ரஜினி பற்றி அவர் கூறியிருப்பதை மட்டும் இங்கே
தருகிறேன்:
சினிமா துறையில் ரஜினியும் நீங்களும் ஒருவர் மீது
ஒருவர் மிகுந்த மதிப்போடும் புரிந்துணர்வோடும் நடந்து
கொண்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த காட்டமான
கருத்துக்கள் ரஜினியைத் தாக்குவதாகவே புரிந்து கொள்ளப்பட்டது.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில்
ரஜினியைப் பாராட்டினீர்கள். உண்மையில் ரஜினி குறித்த உங்கள்
கருத்து என்ன?
உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது
மிகவும் அக்கறை கொண்டவர்.
ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப்
பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர்
கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வருத்தம் தெரிவிச்சாரோ...
அதற்குத்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேடையில் நான்
பேசிய பேச்சுகள் ரஜினிகாந்த் சாருக்கு எதிரானவையாக, தவறாகப்
புரிந்து கொள்ளப்பட்டன.
அதேநேரம் ஈழப்பிரச்சினையில் அவரது தைரியமான பேச்சை நான்
மேடையிலேயே பாராட்டினேன். ஒரு தமிழன் என்ற முறையில் அதைச்
செய்தேன்.
ரஜினி சாரைப் பற்றி என் கருத்தைக் கேட்டிருக்கிறீர்கள்.
ரஜினி சார் மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமா
பார்வையாளர்களை மிகவும் அதிகப்படுத்திய பெருமை ரஜினி சாரை,
அவர் படங்களைச் சேரும். அதை யாரும் மறுக்கவே காரணம். இன்று
தமிழ் சினிமாவின் வியாபாரம், பார்வையாளர்கள் பல மடங்கு
அதிகரித்திருப்பதற்கு முக்கியமான, மிக முக்கியமான காரணம்
ரஜினி சார்தான். இதற்காக அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
உண்மையில் அவர் ஒரு அற்புதமான நடிகர். இப்போது நாம்
பார்க்கும் ரஜினி சாரைத் தாண்டி, ஒரு ரஜினி இருக்கார். ஒன்பது
ரூபாய் நோட்டு மாதவப் படையாச்சி வேஷமெல்லாம் அவரால் ரொம்ப
சிறப்பாக செய்ய முடியும்.
ஆனால் வியாபார சினிமாவில மாட்டிக்கிட்டதால அவரால அதிலிருந்து
வெளியில் வர முடியவில்லை. ஆனா தனிப்பட்ட முறையில அவர் மீது
நான் ரொம்ப ரொம்ப மரியாதை, மதிப்பு வச்சிருக்கேன். தனிப்பட்ட
முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
ரொம்ப நல்ல மனிதர் ரஜினி.
-சங்கநாதன்




|