Celebrities
Abirami Ramanathan  
Aishwarya Rai
Ajith Kumar
Amir Khan  
Amitabh Bachan  
A.R. Rahman  
AVM Saravanan  
Balakumaran (Writer)  
Bharathiraja  
Bose Venkat  
Chiranjeevi  
Cho Ramasamy  
Deepika Padukone  
Dhaanu (Producer)  
Durai (Producer)  
Durai (Director)  
Hema (Kannada Actress)  
Hema Malini  
Hirthik Roshan  
Jackie Shroff  
Jeyanthi (Rajini's pair in Valli)  
K. Bagiyaraj  
K. Balaji  
K. Balachander  
K. Nataraj  
Kalaignanam (Producer)  
Kamalhassan  
Karthi  
Kovai Senthil  
K.S.Ravikumar  
Kareena Kapoor
Kushbu  
Latha  
Madhan  
Mahendran  
Manivannan  
Manobala  
Manoramma  
Meena  
Mohanlal  
Mohan Raman  
Nagesh  
Nagmah  
Namitha
Na Muthukumar (Lyric Writer)
Nayanthara
National Chellaiya
Paandian
Paarthiban  
Panju Arunachalam  
Peter Selvakumar  
Prabu  
Prakash Raj  
Preetha  
P. Vasu  
Puliyoor Saroja  
Rajasekar (Director)  
Radha  
Radhika  
Ravi Chandran  
R. K. Selvamani  
Roja  
R.Thiayagarajan (Director)  
R.V. Uthayakumar  
Salman Khan  
Saritha  
Sarathkumar  
Sathyaraj  
Senthil Nathan (Director)  
Shankar (Director)  
Sivakumar  
Sooriya  
S.P.Muthuraman  
Sonakshi Sinha
Sri Devi  
Sri Vidya  
S.S. Chandran  
Sujatha (Writer)  
Sultan Moideen (Chef)  
Suresh Krishna  
S.V. Shekar  
Thamizhmani (Producer)  
Y.G. Mahendran  
Vaali  
Vadivelu  
Vairamuthu  
V.C.Ghukanathan  
Vijayakumar  
Vivek  
V.K. Ramasamy  

  Join Us

Celebrities Speak

Kamal Hassan

சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அரசியல் ரீதியாகப் பலமுறை மோதிக் கொண்டிருக்கிறார்கள். மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார்கள். வெளியே தெரியாத அளவு சினிமாவினாலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அது ரசிகர்களையும் பிடித்துக் கொண்டு இன்றைக்கும் இருக்கிறதென்றாலும் முன்போல் இல்லை.

இவர்களுக்குப் பின் ரஜினி-கமல் ரசிகர்களிடையேயும் போட்டி உண்டு. மோதல் உண்டு. அந்த அளவுக்கு போட்டியும், மோதலும் ரஜினி-கமலிடம் இல்லை. நல்ல நட்புண்டு. உள்மனதில் இருவரும் என்ன நினைக்கிறர்கள் என்பது நமக்குத் தெரியாது.



'அபூர்வ சகோதரர்கள்' படம் பார்க்க ரஜினிக்காக கமல் பிரத்யேக காட்சியொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இருவருமே அவரவர் நடித்த படத்தை ஒருவருக்கொருவர் போட்டுக் காட்டுவது வழக்கம். இது சிவாஜி-எம்.ஜி.ஆரிடம் கூட இருந்ததில்லை. 'அபூர்வ ராகங்கள்' முதல் ரஜினி-கமல் இருவரும் சுமார் 16 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய சாதனைதான்.

'அபூர்வ சகோதரர்கள்' படம் பார்த்து முடிந்த பின் வெளியே வந்த ரஜினி ஆர்வத்தோடு கமலைத் தேடியிருக்கிறார். கமல் முன்னதாகவே வீட்டுக்குப் போயிருந்தார். அதனால் மறுநாள் காலையில் மாலையோடு கமல் வீட்டுக்குச் சென்ற ரஜினி, அதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்து, ''அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் நடித்ததைப் போல் இந்தியாவிலேயே யாரும் நடிக்க முடியாது" என்றும் கூறிப் பாராட்டியிருக்கிறார்.

"கமல் நல்லதொரு நடிகர். நடிப்பில் அவரோடு என்னை ஒப்பிட முடியாது. ஒப்பிடக் கூடாது. சினிமாவிற்காக அவர் மெனக்கெடுகின்ற அளவு என்னால் முடியாது" என்று பலமுறை ரஜினி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

தாயில்லாமல் நானில்லை

கமல்-ரஜினி இருவரும் ஒரு சமயம் "இனி நாங்கள் சேர்ந்து நடிக்க மாட்டோம்" என்று கலந்து பேசி முடிவெடுத்து அறிவித்தார்கள். இந்த அறிவிப்புக்குப் பின்பும் தேவர் பிலிம்சின் 'தாயில்லாமல் நானில்லை'யில் இருவரும் இணைந்து நடித்தார்கள். எப்படி?

உடல் நலமின்றி சிகிச்சைக்காக விஜயா நர்சிங் ஹோமில் இருந்த ரஜினிக்கு, அருகிலுள்ள வாகினி ஸ்டூடியோவில் கமல் கதாநாயகனாக நடிக்கும் 'தாயில்லாமல் நானில்லை' படப்பிடிப்பு நடக்கிறது என்ற தகவல் தெரிய வந்தது. அதனால் அவருக்கு திடீரென்று ஒரு ஆசை முளைத்தது. கமலுடன் மீண்டும் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று காரை எடுத்துக் கொண்டு நேராக தேவர் பிலிம்ஸ் அலுவலகம் வந்தவர், அங்கு டைரக்டர் தியாகராஜனைச் சந்தித்து "கமலுடன் 'தாயில்லாமல் நானில்?'யில் சேர்ந்து நடிக்கணுமே. சான்ஸ் தருவீர்களா?" என்று கெஞ்சலான பாவனையில் உரிமையோடு கேட்டார்.

"ரஜினிக்கு இல்லாமலா" என்று உடனே தியாகராஜன் சம்மதித்தார். அதற்கு நன்றி கூறிய ரஜினி, "எதற்கும் கமலையும் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன், ஏனென்றால் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது" என்றவர் படப்பிடிப்பின் போது கமலை செட்டில் சந்தித்தார்.

"உன்னோட இந்தப் படத்திலே நடிக்கணும்னு ஆசை. என்ன சொல்றே?" ரஜினி.

"இது என்னப்பா கேள்வி. நீ இஷ்டப்படறே நடியேன். வேணாம்னா சொல்லப் போறேன்" இது கமல்.

"அதுக்கு இல்லே. நாம போட்டிருக்கிற ஒப்பந்தம்...." என்று ரஜினி நினைவுப்படுத்த, அதற்கு கமல் சொன்ன பதில் இது.

"கொஞ்ச காலத்துக்கு இனி சேர்ந்து நடிக்கறதில்லே. அதுவும் முக்கிய பாத்திரத்திலே (Running Characters) அப்படீன்னுதான்னே பேசினோம். இதுலே நான் ஹீரோ. நீ வரப்போறதோ இரண்டு சீன்தான். அதுக்குப் போய்..... வந்தியா பேசாம நடி. என்ன!"

கமலின் இந்த சம்மதத்திற்குப் பின் 'தாயில்லாமல் நானில்லை'யின் ரஜினி கவுரவ வேடத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்தார்.

"நீ என் படத்தில் சான்ஸ் கேட்டு வலுவில் நடித்திருக்கிறாய். நான் மட்டும் உன்னை சும்மா விடுவேனா....! இதே தேவர் பிலிம்ஸின் அடுத்த படத்தில் (அன்னை ஓர் ஆலயம்) கவுரவ நடிகராக உன்னோடு நடிக்க சான்ஸ் தரணும்' என்று ரஜினியை கமல் கேட்டுக் கொள்ள, அவரும் 'சரி'யென்று தலையாட்டியதாக ஒரு தகவல் உண்டு.

'தாயில்லாமல் நானில்லை' படத்தில் இளவரசி ஸ்ரீதேவியை நாடகக் கலைஞன் கமல் காதலிக்கிறார். அதை ஸ்ரீதேவியின் தந்தை எதிர்க்க அதற்காக கமலை அடிக்கச் சொல்லி ரவுடி ரஜினியை ஏவி விடுகிறார். ரஜினி கமலோடு மோத, ஸ்ரீதேவி நடுவில் குறுக்கிட்டு தன் காதலைப் பற்றிச் சொல்கிறார். ரஜினி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இருவரையும் வாழ்த்திவிட்டுச் செல்கிறார். இந்தக் காட்சியில் ரஜினி-கமல் இருவரும் கடுமையாக மோதி நடிக்கையில் தியேட்டர்களில் பெரும் பரபரப்பு இருந்தது. இருவரும் உண்மையாகவே மோதிக் கொண்டார்கள் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள்.

'ஷோலே' படத்தினை பாலாஜி தமிழில் எடுக்க விரும்பி, சஞ்சீவ் குமார், அமிதாப்பச்சன், தர்மேந்திரா ஆகியோரது வேடங்களில் சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரை நடிக்கச் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. ரஜினி-கமல் இருவரும் போட்டுக் கொண்ட ஒப்பந்தமும் காரணங்களில் ஒன்றாக இருந்தது.

இது போல் ரஜினி, கமலை இணைத்த பல சம்பவங்கள் உண்டு. அது பற்றி கமல்ஹாசனே சொல்கிறார்.

"கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரையொருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலரும், எங்களுக்குள் கோள் மூட்டி விடப் பார்க்கும் சிலர் இருந்தாலும், எங்களது நட்பு எங்கள் சினிமா அந்தஸ்தையும் மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

'அபூர்வ ராகங்கள்' தொடங்கி எங்கள் நட்பும் வளர்ந்தது. 'அவர்கள்' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன" என்று கேட்டேன். ரஜினி அமைதியாக என்னிடம், "கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு 'ஸ்டைல்' நடிப்புத்தான் சரி" என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். 'சுற்றி வளைத்து' என்பதே அவரிடம் கிடையாது.

'அவர்கள்' படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் 'அவர்கள்' நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.

'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்குவேன். "அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்" என்று அழைத்து செல்வார்.


 

சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2.00 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3.00 மணிக்கும், 4.00 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7.00-க்கெல்லாம் படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.

மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9.00 மணிக்கு தூங்கி, காலை 5.00 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை. சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே. அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை! (இதை 'படையப்பா' வெற்றி விழாவிலும் கமல் சொன்னார்)

'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றபோதுதான், இனி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம். தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு சொல்வது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி இப்படித் தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது. இருவரும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் இணைந்து நடிப்போம். அதற்குள் எங்களுக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது.

ரஜினி, கமலுக்கு அப்புறம் ரஜினியைவிட, கமலை விட மிஞ்சி நிற்க தமிழகத்திலேயே நடிகர்கள் வருவார்கள். நாங்கள் வயதானபின் அவர்கள் போட்டி போடட்டும் அதற்குள் நாங்கள் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

திருமண விருந்து

ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் நானும் கலந்து கொண்டேன். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.

ரஜினியின் பெருந்தன்மை

இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரானபோது, "ஸாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்கப் போனபோது பகையுணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்!" என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டபோது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன்.

போட்டி

சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.

நான் முதன் முதலாகத் தயாரித்த 'ராஜபார்வை'யைப் பற்றி பலரும் 'ஆகா' 'ஓகோ'வென்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் 'சரியில்லை' என்றார். காரணம் கேட்டேன். "டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்?" என்றார்.

ரஜினியின் பெரிய படமொன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு எம்.ஜி.ஆர். சிவாஜியிடம் கூட இருந்திருக்க முடியாது. ஏன் வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.

ஒரு சமயம் ரஜினியிடமுள்ள பழக்கமொன்றைச் சுட்டிக் காட்டி நிறுத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி."

"முன்பொரு சமயம், அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ரஜினிக்கு வந்தபோது என்னிடமும் அது பற்றி அபிப்பிராயம் கேட்டார். வேண்டாம் என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். ரஜினி அதை ஏற்றுக் கொண்டு "எனது பிற நலம்விரும்பிகளும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று கூறினார். அத்தோடு அரசியலில் ஈடுபடும் எண்ணத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார். 'அரசியலில் ஈடுபடாததே எங்கள் இருவருக்கும் பெரிய ஆரோக்கியமான சொத்தாக'க் கருதுகிறேன். அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ரஜினியின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும் அவர் எச்சரிக்கையோடு அதன் விளைவுகளை எதிர் கொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

'நாயகன்' படம் பார்த்துவிட்டு நடிகனுக்கு நடிகன் என்று பாராட்டினார் ரஜினி. 'புன்னகை மன்னன்' 100-வது நாள் விழாவில் நான் அப்படத்தில் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, 'இது போல் எந்த நடிகராலும் செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார்.

'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப் படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. கலைஞர்களை வெற்றிகள்தான் பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.'' என்கிறார் கமல்.

'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்று பாட்ஷாவில் ரஜினி பேசிய வசனம் எதிரொலிக்காத தமிழர் வீடே இல்லை எனலாம். சின்னஞ்சிறு மழலைகளுக்கு இது போன்ற ரஜினி பேசிய வசனங்கள், அவர்களது வார்த்தை உச்சரிப்பை மெருகுப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் தமிழ்ப் பேசக் கற்றுக் கொள்வதற்கு ரஜினியின் படங்கள் நேரடியாக உதவுகின்றன என்பது நடைமுறை உண்மை.

நிஜத்தில் ரஜினி ஒரு தடவை சொன்னால் அதை அந்த சமயத்திலேயே புரிந்துக் கொள்ள வேண்டும். நிஜமாகவே புரியவில்லையென்றால் ரஜினி இன்னொரு முறை சொல்லத் தயங்கமாட்டார். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களை ரஜினி சும்மா விடமாட்டார், அல்லது ஒதுக்கித் தள்ளிவிடுவார்.

>>> NEXT





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information