Related Articles
Superstar Rajinikanth looks dashing in new Darbar stills
சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் தலைவர்
ரஜினியின் மறுபிறவி - என்னவெல்லாம் நடந்தது?
தண்ணீர் பஞ்சம் போக்குவதில் ரஜினியின் பங்கு என்ன?
ரஜினி மக்கள் மன்றத்தினர் பணிகள் மக்களுக்கும் கடவுளுக்கும் தெரியும் .. அது போதும்!
ஐந்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தலைவர் - வயித்தெரிச்சல் படாதீங்க பொறாமைக்காரர்களே!
சிவாஜி படம் : ஓர் அனுபவம் !!! - 12 Years of Shivaji : THE BOSS
Indian superstar Rajinikanth’s 2018 blockbuster “2.0” is set for a July 12 release across China, under the title “Bollywood Robot 2: Resurgence.”
மோடி பதவியேற்பு விழாவில் தலைவர் ரஜினிகாந்த்
`மோடி என்கிற தனிமனிதரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!' - ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
படையப்பன் கற்பூரம் மாதிரி யார் கொளுத்தினாலும் ஜோதியை தருவான்!!!
(Tuesday, 13th August 2019)

தமிழ்நாட்டு அரசியல் ஓட்டம் கிழக்காக ஓடிக்கொண்டிருக்க, மேற்கால் ஓடினால் கடுமையான எதிர்வினைகள் வருமென்று தெரிந்தும் ரஜினி மேற்கால் சாவகாசமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடை பயில்கின்றார். ரஜினிக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?

தமிழக அரசியல் ஓட்டம் பாஜாகாக்கு எதிராக இருக்கும் நிலையில்; சரியெனப்படும் சந்தர்ப்பத்தில் ரஜினி தயங்காமல் பாஜக பக்கம் பேசுவது சரியான செயலா? இது பொதுப்புத்தியில் ரஜினியின் இமேஜை காலி செய்துவிடாதா?

சினிமாவில் நடிகனாக சாதித்த ரஜினி அரசியலில் ஒன்றுமில்லாமல் போகப்போகிறார் என்கிறார்களே 'நடுநிலை'  என சொல்லிக்கொள்ளும் சில பத்திரிக்கையாளர்கள்...! அது எப்படியான பார்வை?

ரஜினிக்கு அரசியலே தெரியவில்லை, வெகுளியாக கருத்துச்  சொல்கிறார், மேம்போக்காக அரசியலை புரிந்துவைத்து அப்பப்போ மைக் முன்னால்  உளறுகிறாரா?

ரஜினி என்ன நெகட்டிவ் பப்ளிசிட்டியில் பேசுபொருளாக இருக்க விரும்புகிறாரா?

இப்போது முருகதாஸ் படம், அடுத்தது சிவா படம் என ரஜினி தொடர்ந்து  நடித்துக்கொண்டே இருக்கிறார், ரஜினி அரசியலுக்கு வருவாரா? ரசிகர்களை ஏமாற்றி கடைசிவரை படம் நடித்துவிட்டு ரஜினி போகப்போகிறார் என்கிற பேச்சு உண்மையா?

இப்படியான பல எண்ணங்கள் கேள்விகள் பொதுவெளியில் ரஜினியின் அரசியலைப் பலவீனமாக சித்தரிக்க எழுப்பப்படுகின்றது!!  சரி ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை, மேம்போக்காக பேசுகிறார், தவறான திசையில் பயணிக்கிறார், ஏன் அவர் அரசியலுக்கே வரப்போவதில்லை..! பின்னர் ஏன் ரஜினி தும்மினாலும் இருமினாலும்  இத்தனை விவாதம்? எதிர்வினை? ஸ்டாலின் அதிமுக கூட்டணியை வென்று இலகுவாக முதல்வராகும் சந்தர்ப்பம் இருக்கும்போது எதற்கு ரஜினியின் ஒவ்வொரு அசைவுக்கும் கட்சிக்காரர்கள், கூட்டணிக் கட்சிக்காரர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய கட்சி ஆதரவாளர்கள், ஐடி விங், விலைபோன சோ கோல்ட் ஊடகவியலாளர்கள், காட்டூனிஸ்ட்கள், எக்ஸ் பிரபலங்கள் என்று பெரிய வலையமைப்பில் ரஜினிக்கு எதிரான கோஷங்கள், வாதங்கள், விவாதங்கள், விதண்டாவாதங்கள், பொய்கள், திரிப்புக்கள், டுவீட்டுக்கள், நிலைத்தகவல்கள், காட்டூன்கள் என திமுக ஏன் அலறுகிறது?

எடப்பாடி பழனிச்சாமி முதல், ஏனைய அமைச்சர்கள், கமல்ஹாசன், சீமான்  போன்ற  அரசியல்வாதிகள்வரை திமுகவை நேரடியாக எதிர்க்கும்போது கொடுக்கும் எதிர்வினையின் நூறு அல்ல ஆயிரம் மடங்கு எதிர்வினையை தங்களுக்கு கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாமல் ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் நிகழ்த்தவேண்டிய தேவை என்ன? திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள்தான் இப்படி என்றால் நாம் தமிழர் போன்ற மூன்றாம்தர (அதாவது கடந்த இடைத்தேர்தலில் மூன்றாவதாக வந்த கட்சி) கட்சிக்கு ரஜினி விமர்சனம்தான் முக்கிய பேசுபொருள். ஏன் சூர்யாவின் கல்விக் கொள்கைகளை  ரஜினி ஆதரித்தபோது பாஜாக கூட ரஜினியை விமர்சித்து தள்ளியது, அர்ஜுன் சம்பத் ஒருபடி மேலே போய் ரஜினி திமுக ஊதுகுழல் என்கிறார். ஏன்? எதற்காக? ஒன்றுமே இல்லாத வெறும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஏன் இப்படி எதிர்வினை கொண்டு சுற்றிவளைத்து கட்சி பேதமின்றி தாக்க வேண்டும்? 

பயம்???? இல்லாமல் வேறு என்ன?

ஆனால் அதிமுக, பாஜாக மட்டும் ரஜினியை அவ்வளவு இலகுவில் சீண்டுவதில்லை, காரணம் ரஜினி பாஜாக சார்ந்த கூட்டணியில் உள்வாங்கப்படலாம் என்கின்ற நப்பாசை. அதே நப்பாசை திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் நிறையவே இருக்கு..! இவர்கள் ஆசை போல சொல்வதுபோல ரஜினி பாஜாக கூட்டணியில் இருந்துவிட்டால் பாஜாக எதிர்ப்பு அலையை வைத்து ரஜினியை இலகுவாக தகர்த்துவிடலாம் என்கின்ற பேராசை.

ரஜனிக்கு அரசியல் என்ன தெரியும் என்பவர்களை யாரென்று பார்த்தால் பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்கும் பேர்வழிகள்தான். 1996ல் அரசியல் ஓட்டத்தில் இருந்தவர்களுக்கு ரஜினியின் அரசியல் பலமும் ஸ்திரமும் மட்டுமில்லை தெளிவும் நல்லாவே தெரியும்..! ரஜினி தெரியாத எதையும் கை  வைப்பதில்லை, சினிமாவில் ரஜினி இயக்குனராக முயற்சி செய்யவே இல்லை என்பது அதற்கு பெரிய உதாரணம்..! ரஜினியின் 1996 ஆம் ஆண்டு டூடடர்ஷன் நேரலையில் இருந்த அரசியல் தெளிவுக்கு இப்ப அனுபவம் 23 வருடங்கள். இதை இங்குள்ள சில்லறைகள் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம், ஆனால் திராவிட  மேலிடத்திற்கு இது நன்றாகவே தெரியும், அந்த பயம்தான் அவர்களை ரஜினியின் மூச்சுக் காற்றையும் பெரும் படைகொண்டு தாக்க விளைகிறது!!

திட்டமிட்ட வலிந்த எதிர்ப்புக்கள் back fire ஆகிய சம்பவங்களை மனோரமா, வடிவேலு விடயங்களில் அனுபவம் கண்டும் திராவிட கழகங்கள் அதை நிறுத்தப்போவதில்லை. ஆனால் ரஜினி சொன்னதுபோல எதிர்ப்புக்கள் ரஜினிக்கு பெரும் மூலதனமாகின்றன..!

இங்கு ரஜினியை பிஜேபி என்பதற்கான நிறுவல்கள் திமுகவுக்கு  தேவைப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் நிழல் தமிழகத்தில் பாஜாகவுக்கும் தேவைப்படுகின்றன. ஆனால் ரஜினி தெளிவாக காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். ரஜினி பாஜாக சார்ந்த கருத்துக்களின் போது பாஜாக வரவேற்பையும், திமுக சார்ந்த பெரும் படை ரஜினி விமர்சனத்தையும்; அதே நேரம் பாஜக சாராத எதிர்மறை கருத்துக்களுக்கு பாஜாக விமர்சனத்தையும் திமுக சார்ந்த விமர்சனப் படை அமைதியையும் கடைப்பிடிக்கின்றன.

ரஜினி ஒரு விழாவுக்கு போனால் அந்த விழாவிற்கு வந்தவர்கள் பற்றி பெருமையான, நல்ல விடயங்களை பேசுபவர் என்பது ஜெ, கருணாநிதி காலம் தொடக்கம் ரஜினியை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது ரஜினியின் நேர்மறையான அணுகுமுறை, அதைத்தான் தனது ஆன்மீக அரசியலிலும் ரஜினி வெளிக்காட்டி வருகிறார். இது தெரிந்தும் ரஜினி பாஜக தலைவர்கள் பற்றி நல்லதை  பேசும்போது மட்டும் ரஜினி பாஜாக என முத்திரை குத்தப்போய்; ஒரு கட்டத்தில் அதே இவர்களுக்கு மக்கள் மத்தியில் back fireஆகப்போவது உறுதி, இது ரஜினிக்கும் நல்லாவே தெரியும்.

1) ரஜினி கண்மூடித்தனமாக பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதற்கு என்ன தடை உள்ளது? தமிழகத்தில் ஏற்கனவே உருவாக்கி இருக்கும் எண்ண ஓட்டத்தில் படகை செலுத்தினால் கரையேறுவது இலகு என்பது ரஜினிக்கு தெரியாதா?

2) பாஜாக எதிர்ப்பலை உள்ள இடத்தில் ரஜினிக்கு பாஜகவை ஆதரித்து அரசியல் செய்வதற்கு என்ன அவசியம் உள்ளது?

ரஜினி நரசிம்மராவ், மன்மோகன், வாஜ்பாய், மோடி என காங்கிரஸ், பாஜக பிரதமர்கள் அனைவருடனும் நல்ல உறவுநிலையை கடைப்பிடித்தவர். மத்திய அரசாங்கத்தை எதிர்த்து மாநிலங்களில் இன்று நிகழ்த்தும் போராட்டம் என்கிற போலியான சுயலாப அரசியலால் தமிழக மக்களை பின்தள்ள ரஜினி விரும்பவில்லை. ரஜினி மோடியை மட்டுமல்ல ராகுலையும் அனுசரித்துதான் போகின்ற சுபாமமுடையவர், ஏன் ஸ்டாலின் கூட ரஜினிக்கு எதிரி இல்லை..!

காஸ்மீர் விவகாரம் 75 க்கு மேற்பட்ட சதவீத இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம், அதில் தேசியவாதியாக எண்ண  ஓட்டம் உள்ள ரஜினியிடம் அதற்கான வரவேற்பே இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..! இதனை ரஜினி வரவேற்றதால், மோடி அமித்சாவை புகழ்வதால் ரஜினி பாஜாக என்றால்; வீரப்பன் விவகாரத்தில் தன்  விரோதியாக இருந்த ஜெவை தைரியலக்ஸ்மி என்ற ரஜினி அதிமுகவா? ஜெ முன் கருணாநிதியை புகழ்ந்த ரஜினி என்ன திமுகவா? பா. சிதம்பரத்துடன் நெருங்கிப் பழகிய ரஜினி காங்கிரஸ்காரரா?

படையப்பன் கற்பூரம்  மாதிரி யார் கொளுத்தினாலும் ஜோதியை தருவான்!!!

ஆனால் இந்த திமுக காரர்களால் அந்த கற்பூரத்தை உணரும்  நிலை இன்று இல்லை; அந்த கற்பூரம் தம்மை எரித்துவிடும் என்று அஞ்சுகிறார்கள், உண்மையும் அதுதானே..! அதற்காக முடிந்தளவு அடிமட்டம் வரை கீழிறங்கி விளையாட இப்போதே முடிவெடுத்து விட்டார்கள். அதற்காக மேலே சொன்னது போல பல தரப்பை பயன்படுத்துகிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்வோரும் முக்கிய ஊடகங்களும். ஆனால் அளவுக்கு மிஞ்சிய அமுதம் விஷமாகப்போவது மட்டும் உறுதி. 

சரி ரஜினி  காஸ்மீர் விவகாரத்தை ஆதரித்து பேசும்போது அதற்கான திமுக சார்ந்த மிகப்பெரும் எதிர்வினை நிகழும் என்பது ரஜினிக்கு தெரியாதா? தெரியும். இன்னும் சொல்லப்போனால் இது ரஜினியின் திட்டம்.  நடுத்தட்டு, மற்றும் அடித்தட்டு மக்களை தேர்தல் காலத்து பிரச்சாரங்களில் கவர முடியும் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த சோ கோல்ட் intellectual மேல்தட்டு மக்கள் மனதில் ரஜினி என்கிற விம்பத்தை நடிகன், கூத்தாடி என்பதை தாண்டி பதிய வைக்க வேண்டிய தேவை உண்டு. ரஜினி அண்மைக்காலங்களில் இதைத்தான் உடைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியின் பாஜாக ஆதரவு நிலைகளை பெரும்பாலும் எடுத்து பாருங்கள்; அது தேச நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும். டெமோன்ஸ்ரேஷன் பற்றி இங்குதான் விமர்சிக்கிறார்கள், ஆனால் மேல்தட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதன் பலன் தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் சொன்ன விடயம் மோடி வந்த பின்னர் கிட்டத்தட்ட அங்குள்ள கறுப்பு இந்திய சந்தைகள் வெயிலைக் கண்ட பனியாக மறைந்து விட்டது என்பதுதான். பணத்தை வெளிநாட்டில் இருந்து எடுக்கவும் கொடுக்கவும் மிகக்கடுமையான நடைமுறை. இப்படி நன்மைகள் என்று பொதுப்புத்தியில் intellectuals பீல் பண்ணும் விடயங்களை ரஜினி ஆதரவு கொடுக்கும்போது அவர்கள் சார்ந்த ரஜினி பார்வை மாறுகிறது, ரஜினியின் பார்வையை புரிந்து கொள்கிறார்கள், ரஜினியின் சினிமா இமேஜ் உடைந்து அரசியலுக்கான இமேஜ் அங்கு பரவ ஆரம்பிக்கிறது. இதுதான் ரஜினியின் மாஸ்டர் பிளான்.

அடுத்து அரசியல் விமர்சகர் துரைசாமி அவர்கள் சொன்னதுபோல இதுவரை இந்துமத எதிர்ப்பை வைத்து  சிறுபான்மை வாக்கை கவர்ந்த கடும் மதவாதக்  கட்சியான திமுக; இந்துக்களின் வாக்கை சாதியத்தை வைத்து வேட்டையாடியது. இத்தனைக்கும் திமுகவிற்கு அவர்களே வைத்திருக்கும் பெயர் சுயமரியாதைக் கட்சி..!  ஆனால் ரஜினி விடயத்தில் திமுகவிற்கு இந்த இந்துமத எதிர்ப்பு பெரும் அடியாக இருக்க போகிறது. அடித்து சொல்கிறேன் ரஜினி பாஜாகவுடன் கூட்டணியைக்கூட வைக்க மாட்டார். அப்படியான நிலையில்  ரஜினியால் பெருமளவு இந்துக்கள் அல்லாதவர்களது வாக்கை தன்  தனிப்பட்ட செல்வாக்காலும் மாற்றுமத வேட்பாளர்களாலும் உடைக்க முடியும். அதே நேரம்  சாதிய வேறுபாடுகளற்ற ரஜினியிடம் திமுகவின் சாதி அரசியல் தோற்றுப்போனால் திமுக கையறுநிலையில் இருக்கும். இது திமுகவுக்கும் நன்றாகவே தெரியும், அதனால்தான் ரஜினியை வருவதற்கு முன்னே முடிவுரை எழுதவைக்க கடும் முயற்சி செய்கிறார்கள்; விழலுக்கு இறைக்கிறார்கள்.

திரும்பவும் சொல்கிறேன், 1996 அரசியலில் அத்தனை தீவிரமாக இருந்த ரஜினியின் அரசியல் அனுபவத்திற்கு இப்ப வயது 23. இந்த 23 ஆண்டுகளில் ரஜினியை சுற்றி  அரசியல் இருந்தது...! நரசிம்மராவ், வாஜ்பாய், சோ.. என பெரும் அரசியல் வித்தகர்கள் ரஜினியை அரசியல் ரீதியாக அணுகிய காலங்களை  எல்லாம் கடந்து இன்று ரஜனி ஒரு முழுமையான அரசியல்வாதியாக, தெளிவாக  உள்ளார். நாம் முன்னரே சொன்னதுபோல உள்ளக கட்டமைப்புக்கள் கிட்டத்தட்ட பூர்த்தியடைந்த நிலையில்; சட்ட மன்ற தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார்..! அந்த டைம் விரும்பியோ விரும்பாமலோ ரஜினி மட்டுமே பேசு பொருளாக இருப்பார். அது தேர்தல் முடிவுகள் வரும்வரை தொடரும்..! அந்த நேரத்து அலை ரஜினிக்கு ஆதரவாக சிறிது வீசினாலும் தமிழகம் தப்பித்துவிடும், ஆம் ரஜினி வென்று விடுவார்.

Courtesy : https://eppoodi.blogspot.com/2019/08/blog-post.html






 
1 Comment(s)Views: 728

R. Prasanna,Madurai
Tuesday, 13th August 2019 at 04:33:44

அருமையான கட்டுரை. திமுகா தலைவரிடம் தோற்பது நிச்சயம்.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information