5 May 2004
சென்னை விமான நிலைய ஓய்வறையில் பிரதமர் வாஜ்பாயை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் வாஜ்பாய் இரவு சென்னை வந்தார். ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்கலந்து கொண்டார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவரை பா.ஜ.க. தலைவர்கள்வரவேற்றனர்.
பின்னர் விமான நிலைய ஓய்வறையில் வாஜ்பாய் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவரை நடிகர்ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது ரஜினி வாஜ்பாய் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரிடம் நதிகள் இணைப்புத்திட்டத்தை பா.ஜ.க. செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் ரஜினிகாந்த் கொடுத்தார்.
ரஜினி, வாஜ்பாய் சந்திப்பின்போது, ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயண ராவ், மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இருந்தனர். வாஜ்பாயை சந்தித்து விட்டு வெளியே வந்த ரஜினி நிருபர்களிடம்பேசுகையில்,
நான் வாஜ்பாயைச் சந்தித்தபோது தற்போதைய பிரதமருக்கும் வருங்கால பிரதமருக்கும் முதலில் அட்வான்ஸ்வாழ்த்துக்களை தெரிவித்தேன். பின்பு நதிநீர் இணைப்பு குறித்த எனது தாழ்மையான வேண்டுகோளை வாஜ்பாய்முன்வைத்தேன்.
வாஜ்பாய் 6 மாதத்துக்கு முன் பஞ்சாபில் பேசும்போது நதிநீர் இணைப்புக்கு பகீரத முயற்சிகள் வேண்டும் என்றுபேசினார். எனவே நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு பகீரத யோஜனா திட்டம் என்ற பெயர் வைக்கலாம் என்று அவரிடம் கூறினேன்.
இந்த திட்டத்துக்கு நீங்களும் கூட இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாமெல்லாம் சேர்ந்து திட்டத்தைசெய்ய வேண்டும் என்றார். அதற்கு நான் இந்த திட்டத்தில் உறுதியாக இருப்பேன் என்று கூறினேன் என்றார்.
பின்பு நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கட்டாயம் ரூ.1 கோடிதருவேன். வாஜ்பாயிடம் தேர்தல் குறித்து பேசவில்லை. நான் பிரசாரத்துக்கும் போகவில்லை என்றார்.
உங்களது ஆதரவை அதிமுக ஏற்கவில்லையே என்ற கேள்விக்கு, இது தமிழகத்தை ஆளப்போகிறவர் யார்என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் அல்ல. இந்தியாவை யார் ஆள்வது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். வாஜ்பாய்திறமை வாய்ந்தவர். நாட்டை ஆளத் தகுதி உடையவர்.
இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என்று அவர் கூறியிருக்கிறார். நதிநீர் இணைப்புக்கு வாக்குறுதி கொடுத்துஇருக்கிறார். மக்கள் யோசனை செய்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ரஜினி.
|