17 January 2003
சினிமா லைட் மேன் சங்க விழாவில் ரஜினிகாந்த். கமல்ஹாசன். விஜயகாந்த். சரத்குமார். சிம்ரன். ஜோதிகா கலற்துகொண்டனர். பல்வ கப்பு
சினிமா லைட் மேன் சங்க உறுப்பினர்களின் நல நிதிக்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பிரமாண்ட நட்சத்திர கலை விழா நடந்தது. டைரக்டர் கே.யாலசந்தர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் ரஜினிகாந்த்.கமல்ஹாசன். விஜயகாந்த். சரத்குமார். விஜய். விகீரம். பிரபு. நெப்போலியன். சத்ய ராஜ். சிவகுமார். ராதாரவி. எஸ்.எஸ்.சற்திரன். வினுசக்ர வர்த்தி. பாண்டியராஜன். கவுண்டமணி, செந்தில். வடிவேலு. நடிகைகள் சிம்ரன், ஜோதிகா. விந்தியா. தேவ யானி, ஷாமிலி, ஷர்மிலி, மும்தாஜ், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ். உதய் கிரண். தருண்குமார். மலையாளம் மம்முட்டி. மோகன்லால். கலாபவன்மணரி. இந்தி நடிகர் அனில்கபூர்.
பட அதிபர்கள் ஏவி.எம். சரவணன். கே.ஆர்.ஜி. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.முரளிதரன். செயலாளர் சித்ரா லட்சுமணன். அ.செ.இபராகிம் ராவுத்தர். சிந்தாமணி எஸ். முருகேசன் என எராளமான திரையுலக நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள்
கலற்து கொண்டனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்து. நான் சமீபகாலமா எந்த பங்ஷனி லேயம் கலற்துகிறதில்லே. இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோதும் வெளியூர் செல்வதாக நான் கூறி இருந்தேன். பிறகு வந்தேன். இங்கு வந்தபிறகுதான் இது எவ்வளவ, பெரிய விழா என்பதை தெரிற்துக்கொண் டேன். இப்ப நான் என்ன செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியம். நான் வேலை செய்யறது கம்மி ஊர் சுற்றுகிறது ஜாஸ்தி. திரையூலகில் எல்லோரும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு பிரிவினர் ஒன்று லைட்மேன் மற்றொன்று ஸ்கிரிப்ட் ரைட்டர் கதாசிரியர்... இவர்களுக்கு ஊதியமும் மதிப்பும்
வேலைக்கு குறைவ. இப்போது இந்த விழா மூலமாக மிகப்பெரிய தொகை கிடைப்பதாக கேள் விப்பட்டேன். அதை எப்படி காப்பாற்றுவது. அதை எப்படி இரண்டு மடங்காக “குவது என்று பார்த்துக் கொள்ளுங்கள். எங்க பணம் அதிகமாக வருதோ அங்க ஜனங்க அதிகமா வருவாங்க.. ஜனங்க வந்தா அரசியல் வரும். அரசியல் வற்தால் கருத்துவேறுபாடு வரும். இந்த பணத்தை
காப்பாற்றி சங்க உறுப்பினர்களுக்கு உபயோகப்படும் வகையில் பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நடிகை சிம்ரன் 18 நிமிடம் தொடர்ற்து நடித்து. நடனம் ஆடிய நிகழ்ச்சி இடம்பெற்றது. நடிகர் சிம்பு பாபா படத்தில் ரஜினி ஆடிய டிப்பு , டிப்பு பாடலுக்கு ரஜினி அணிந்திருந்தது போலவே காஸ்டியம் அனிிற்து ஆடினார்.
இந்த நிகழ்ச்சி ஜெயா டி.வியில் சில தினங்களில் ஒளிபரப்பாகிறது.
|