Related Articles
ராக்கம்மா கையத் தட்டு உலகின் நெ.1 பாடலா?
இன்று 8 திரையரங்குகளில் பாபா 100வது நாள்!
பாபாவா? அம்மாவா? தெரு ஓவியத்‌ தேர்தல்‌...
ஒரே நாளில் அரசியல் ஹீரோ ஆக்கப்பட்ட ரஜினி - காவிரி தண்ணீருக்காக அமைதி போராட்டம்
பாபா திரையிட்டவர்களுக்கு ரஜினி பல கோடி திருப்பி தந்தார் - ரஜினிக்கு தியேட்டர் அதிபர்கள் பாராட
பாபா திரைப்படம் சுவாரஸ்யமான கட்டுரைகள் மற்றும் செய்திகள்
பாபா தியேட்டர் முன் பரபரப்பு : பா . ம . க . ஆர்ப்பாட்டம் - ரஜினி - ராமதாஸ் மோதல் வலுக்கிறது
சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக குரு சச்சிதானந்தா சென்னையில் காலமானார் ... ரஜினி அமெரிக்கா விரைந்தார்
பாபா படம் பார்க்க ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத கூட்டம்
Fans of Rajnikanth have threatened action against Pattali Makkal Katchi founder S Ramadoss

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கோவையில் சுவாமி சச்சிதானற்தா 88-வது பிறந்த நாள்‌ விழா
(Monday, 23rd December 2002)

 

23 Dec 2002

கோவை. டிச23- நதிகள்‌ இணைப்ப, திட்டத்தை சட்டமாக்க
வேண்டும்‌ என்று ரஜினி கூறினார்‌. அதற்கு பகிரத யோஜனா
என்று பெயர்‌ வைக்கலாம்‌ என்றார்‌. இந்த திட்டத்தை தனியாரிடம்‌
ஒப்படைத்தால்‌ நிறைவேறும்‌ என்றும்‌ ஆட்சி மாறினாலும்‌ திட்டம்‌
தொடரும்‌ என்றும்‌ சொன்னார்‌.

கோவை அவினாசி ரோட்டிலுள்ள கொடீசியா வர்த்தக கண்காட்சி
வளாகத்தில்‌ சுவாமி சச்சிதானற்தா 88-வது பிறந்த நாள்‌ விழா
நேற்று மாலை நடந்தது. இதில்‌ கப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ கலந்து
கொண்டு பேசியதாவது:-

என்னை வாழ வைக்கும்‌ தமிழக மக்களுக்கு என்‌ நன்றியை
தெரிவித்துக்‌ கொள்‌ கிறேன்‌. இது ரொம்ப வித்தியாசமான மேடை.
நல்ல ஆத்மாக்கள்‌ கூட அமர்ந்திருக்‌ கிறேன்‌. பெரும்‌ பாக்கியம்‌.
நான்‌ இன்னும்‌ ஆனமீகத்தில்‌ குழந்தை. பக்குவம்‌ அடைய
வில்லை. எனவே குருநாதர்‌ விழாவில்‌ ஆனமீகத்தைப்‌ பற்றி பேச
முடியமா? என்று இருந்தேன்‌.

 

சச்சிதானந்தாவை நேரடிகுருவாக ஏற்றுக்கொண்டேன்‌. ராமகிருஷ்ண பரமஹம்சர்‌ எழுதிய ப
,தீதகத்திலிருந்து பாபாவுக்கு கதை எடுத்து அமெரிக்காவிலுள்ள குருதேவிடம்‌
படம்‌ எடுக்கலாமா என்று கேட்டேன்‌. படம்‌ எடுத்தால்‌ எப்படி இருக்‌ கும்‌.
அதற்கு அவர்‌ உனக்கு பணம்‌ தேவையா. புகழ்‌ தேவையா என்று கேட்டார்‌.
அதற்கு நான்‌ பணம்‌ தேவை யில்லை. புகழ்தான்‌ தேவை என்றேன்‌. அதற்கு
குருதேவ்‌ இந்த படத்தை எடுத்தால்‌ உனக்கு புகழ்‌ சேர்க்கும்‌. அதன்‌ படி பாபா
எடுக்கப்பட்டது. ஆனால்‌ வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால்தான்‌ புகழ்‌
வரும்‌ என எதிர்பார்க்க வில்லை. ஆற்றில்‌ எடுத்ததை ஆற்றிலே
போட்டுவிட்டேன்‌.

அரசியலில்‌ குதிப்பா?

நான்‌ பெங்களூரில்‌ இருந்தபோது குருதேவ்‌ சென்னை வந்தார்‌. அப்போது
நிருபர்கள்‌ ரஜினி அரசியலில்‌ குதிப்பாரா? என்று கேள்வி கேட்டனர்‌. அதற்கு
குருதேவ்‌ எல்லா அரசி யல்‌ கட்சிகளும்‌ அவரை கூப்பிட்டால்‌ நானே அழைத்து
வரு கிறேன்‌ என்று கூறினார்‌. மறுநாள்‌ பெங்களுரில்‌ இருந்து சென்னையில்‌
இருந்த குரு தேவிடம்‌ கேட்டதற்கு அவர்‌ அரசியலில்‌ குதிக்கிறாயா? என்று
கேட்டார்‌. அதற்கு நான்‌. நீங்கள்‌ கிணற்றில்‌ குதிக்க சொன்னாலும்‌ நான்‌ குதிக்க
தயார்‌ என்றேன்‌. உன்னை கிணற்றில்‌ குதிக்க சொல்ல மாட்டேன்‌ எனறார்‌.
அரசியல்‌ என்பது கபடி விளையாட்டு போன்றது. ஒருவரை எல்லோரும்‌ சேர்ந்து
அமுக்கி பிடிப்பர்‌. ஆனால்‌ அரசியல்‌ என்பது கால்பற்து போன்று இருக்க
வேண்டும்‌. ஒருவர்‌ கோல்‌ அடித்தால்‌ விளையாட்டில்‌ பங்குபெற்ற
அனைவருக்கும்‌ பகழை சேர்க்கும்‌.

மக்கள்‌ இயக்கம்‌

நான்‌ ரோட்டில்‌ வந்த போது மக்கள்‌ இயக்கம்‌ சுவரொட்டி ஒட்டப்பட்டி ருந்ததை
பார்த்தேன்‌. இங்கு இதைப்பற்றி குறிப்பிடுகிறேன்‌. நதிகள்‌ இணைப்ப, விழிப்ப
டனார்வ, ஏற்படுத்த இந்த இயக்கம்‌ ஆரம்பிக்கப்பட்டது. நதிகள்‌ இணைப்ப

ட குறித்து சுப்ரீம்‌ கோர்ட்‌ வலியறுத்தியள்ளது. பிரதமரும்‌ நதிகள்‌ இணைப்ப
டதிட்டம்‌ குறித்து அறிவித்‌ துள்ளார்‌. 20 ஆண்டுகளில்‌ இந்த திட்டம்‌
நிறைவேற்றப்படும்‌ என்று குறிப்பிட்டுள்ளார்‌. சி.எம்‌. இந்த திட்டம்‌ குறித்து
வலியறுத்தியள்ளார்‌. எனவே மக்கள்‌ இயக்கம்‌ தற்போது அவசியமில்லை.
நதிகள்‌ இணைப்ப, திட்டத்தை சட்டமாக்க வேண்டும்‌. பகிரதயோஜனா என்று
அதற்கு பெயர்‌ வைக்கலாம்‌. நதிகள்‌ இணைப்ப, திட்டத்திற்கு அரசு போதிய நிதி
ஒதுக்கீடு செய்யவேண்டும்‌. இத்திட்டத்தை நிறைவேற்ற தனியாரிடம்‌
ஒப்படைத்தால்‌ குறிப்பிட்ட காலத்திற்குள்‌ நிறைவேறும்‌. ஆட்சிகள்‌ மாறினாலும்‌
திட்டம்‌ தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு அவர்‌ பேசினார்‌.

 


ரஜினி ரசிகர்கள்‌ மீது போலீஸ்‌ தடியடி

கோவை கொடீசியா தொழிற்காட்சி அரங்கில்‌ சுவாமி சச்சிதானந்தாவின்‌ 88-வது
பிறந்தநாள்‌ விழா நடந்தது. இதில்‌ சுவாமி சச்சி தானந்தாவின்‌ சீடரான நடிகர்‌
ரஜினிகாந்த்‌ சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார்‌. இதனால்‌ அவரை
பார்பீபதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள்‌ பல ஊர்களில்‌ இருந்தும்‌ வேன்‌.
டெம்போ மற்றும்‌ பஸ்களில்‌ வற்‌ திருந்தனர்‌. விழா மாலையில்‌ நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டு இருந்தாலும்‌. மதியம்‌ முதலே ரசிகர்கள்‌ குவிந்த வண்ணம்‌
இருந்தனர்‌. இதனால்‌ விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கம்‌ முழுவதும்‌ மக்கள்‌
வெள்ளமாக காட்சி அளித்தது. நடிகர்‌ ரஜினிகாந்தை பார்பீபதற்காக ஆண்கள்‌
பெண்கள்‌ என்று பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள்‌ குவிற்திருந்தனர்‌.

பாதுகாப்ப ஏற்பாடு

விழாவில்‌ முக்கிய விருந்தினர்கள்‌. சிறப்ப, அழைப்பாளர்கள்‌. அழைப்பாளர்கள்‌
மற்‌ றும்‌ ரஜினி ரசிகர்கள்‌. பொதுமக்கள்‌ என்று பிரிக்கப்பட்டு. இரும்ப

ட குழாய்களால்‌ தடுப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பாதுகாப்ப பணியில்‌
மாநகர போலீஸ்‌ துணை கமிஷனர்‌ பால சுப்பிரமணியம்‌. உதவி கமிஷனர்‌
நிஜாமுதீன்‌. 4 இன்ஸ்பெக்டர்கள்‌. 20 சப்‌-இன்ஸ்பெக்டர்கள்‌. மற்றும்‌ போலீசார்‌

போலீஸ்‌ தடியடி

நடிகர்‌ ரஜினிகாந்த்‌ மேடை ஏறியது முதல்‌ ரசிகர்கள்‌ மகிழ்ச்சியால்‌ ஆர்ப்பரித்து
கொண்டிருந்தனர்‌. இற்றிலையில்‌ விழா தொடங்கிய சிறிது நேரத்தில்‌ இரும்ப

ட தடுப்புகளுக்கு பின்னால்‌ இருந்த ரசிகர்கள்‌ மடை திறந்த வெள்ளம்‌ போல்‌
அழைப்பாளர்கள்‌ இருந்த பகுதிக்குள்‌ நுழைந்தனர்‌. இதனால்‌ பாதுகாப்புக்கு
நின்றிருந்த போலீசார்‌ ரஜினி ரசிகர்கள்‌ மீது பாய்ந்தனர்‌. இரும்ப தடுப்புகளை
தாண்டி வந்த ரசிகர்கள்‌ மீது தடியடி நடத்த தொடங்கினர்‌. இதனால்‌ நடிகர்‌
ரஜினிகாந்தை அருகில்‌ காணலாம்‌ என்ற ஆர்வத்தில்‌ வற்த ரசிகர்கள்‌
போலீசாரின்‌ கண்‌ மூடித்தனமான தடியடி தாக்குதலில்‌ நிலை குலைந்து சிதறி
ஓடினர்‌. ஆனாலும்‌ போலீசார்‌ தொடர்ந்து தடியடி நடத்தி ரசிகர்களை இரும்ப

ட தடுப்புகளுக்கு பின்னால்‌ துரத்தி அடித்தனர்‌.

பரபரப்பு,

தடியடி நடைபெற்ற இடம்‌ கலவர இடம்‌ போல்‌ காட்சி அளித்தது. இதனால்‌
அழைப்பாளர்களுக்கு போடப்பட்டிருந்த சேர்கள்‌ தூக்கி வீசப்பட்டன.
ரசிகர்களின்‌ செருப்புகள்‌ பல இடங்களில்‌ சிதறி கிடந்தன. போலீசாரின்‌ தடியடி
தாக்குதலால்‌ அந்த பகுதியில்‌ பெரும்‌ பரபரப்ப, ஏற்பட்டது.

ரஜினியிடம்‌ பொதுமக்கள்‌ மனு

சுவாமி சச்சிதானற்தா பிறந்த நாள்‌ விழாவில்‌ கலந்து கொள்ள வந்த நடிகர்‌
ரஜினிகாந்திடம்‌ மனு கொடுப்பதற்காக ஏராளமான ஆண்களும்‌. பெண்களும்‌
திரண்டு வந்திருந்தனர்‌. ஆனால்‌ போலீசார்‌ அவர்களை மேடை அருகே
அனுமதிக்கவில்லை. இது பற்றி கேள்விப்பட்டதும்‌ ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ மன்ற
தலைவர்‌ சத்யநாராயணா அவர்களை அழைத்து பேசினார்‌. பின்னர்‌ அவர்கள்‌
கொண்டு வற்த மனுக்களை பெற்றுக்‌ கொண்டு. உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறி அனுப்பி வைத்தார்‌. அவர்களை போலீசார்‌ சுற்றி வளைத்து விழா
நடைபெறும்‌ இடத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டனர்‌.

4 ராட்சத திரையில்‌ ரஜினி பேச்சு ஒளிபரப்ப,

கோவை. பீளமேடு கொடீசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில்‌ நடந்த சுவாமி
சச்சிதானற்தாவின்‌ 88-வது பிறந்தநாள்‌ விழாவில்‌. தமப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌
பேச்சை கேட்க பல்லாயிரக்‌ கணக்கானோர்‌ திரண்டு இருந்தனர்‌. கொடீசியா
வளாகம்‌ முழு வதும்‌ ஒரே மக்கள்‌ வெள்ளமாக காட்சி அளித்தது. விழா
மேடைக்கு மேலே உள்ள கட்டிடத்தில்‌ இருபுறமும்‌ 2 ராட்சத திரைகளும்‌,
மைதான வளாகத்தில்‌ 2 ராட்சத திரைகளும்‌ வைக்கப்பட்டிருந்தன. இதில்‌
ரஜினியின்‌ பேச்சு ஒளிபரப்ப, ஒளிபரப்பானது. ரஜினிகாந்த்‌ பேச தொடங்கியதும்‌
ரசிகர்களின்‌ கோஷம்‌ விண்ணை முட்டியது.

குரு வாழ்க்கை வரலாறு வீடியோ: ரஜினி ரசித்து பார்த்தார்‌

சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாற்த்‌ பங்கேற்ற விழாவில்‌ சுவாமி சச்சிதானற்தாவின்‌
வாழ்க்கை வரலாறு. அவர்‌ ஆற்றிய தொண்டு. அவரை சந்தித்த சினிமா
கலைஞர்கள்‌ பற்றி 4 பிரம்மாண்ட திரை மூலம்‌ ஒளிபரப்ப செய்யப்பட்டது.

விழா மேடை முன்ப, வைத்திருந்த டி.வி. பெட்டியிலும்‌ இந்த நிகழ்ச்சி
ஒளிபரப்ப செய்யப்பட்டது. மேடையில்‌ இருந்த சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌
அவற்றினை உண்ணிப்பாக கவனித்தார்‌. க.40 மணிக்கு தொடங்கிய வீடியோ
ஒளிக்காட்சி 7.10 மணி வரை ஒளிபரப்ப, செய்யப்பட்டது. 30 நிமிடம்‌
ரஜினிகாந்த்‌ அதை பார்த்து ரசித்தார்‌. விழாவில்‌ பார்வையாளர்‌ வரிசையில்‌
அமர்ந்திருந்த லதா ரஜினிகாந்த்தும்‌ பிரம்மாண்ட திரையில்‌ நிகழ்ச்சியை
பார்த்தார்‌.






 
0 Comment(s)Views: 890

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information