22 Nov 2002
ரஜினி தயாரித்து நடித்த 'பாபா' இன்றோடு (22-11-2002) தனது 100வது நாளை எட்டியது. தமிழகம் முழுக்க 8 சிறிய திரையரங்குகளில் 'பாபா' தனது 100வது நாளை எட்டியுள்ளது.
ஆகஸ்ட்-15ம் தேதி ரஜினியின் 'பாபா' வெளியானது. இன்று நவம்பர் 22ம் தேதியோடு 'பாபா' படம் தனது 100வது நாளை அடைகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே பாபா 100 நாட்களுக்கு முன்பு வெளியானாலும் ஆன்மீக சாயலில் கதையமைப்பு இருந்ததால் ரசிகர்களின் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானது. இதனால் பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட 'பாபா' இறுதியில் நஷ்ட கணக்கை காட்டியதால் ரஜினி அனைத்து திரையரங்கு அதிபர்களையும் அழைத்து நஷ்டத்திற்கு உண்டான பணத்தை திருப்பி தந்தார்.
"மஹா அவதார பாபாஜியின் ஆசியால்.." என்ற தலைப்போடு தான் தற்பொழுது பாபாவின் நூறாவது நாள் போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு பக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக கருதப்படும் பாபாஜியும் மறுபக்கம் ரஜினி 'ம்ருக்தி' முத்திரையோடும் காட்சியளிக்கின்றனர்.
பாபா 100 நாள் ஓடிய திரையரங்குகள் -
சென்னை
பேபி அல்பர்ட்
பால அபிராமி
சந்திரன்
கோவை
அனுபல்லவி
அம்பாள் காம்ப்ளக்ஸ்
சேலம்
சாந்தம்
திருச்சி
ராமகிருஷ்ணா
|