Related Articles
சினிமா லைட்‌ மேன்‌ சங்க விழாவில்‌ ரஜினிகாந்த்‌
கோவையில் சுவாமி சச்சிதானற்தா 88-வது பிறந்த நாள்‌ விழா
ராக்கம்மா கையத் தட்டு உலகின் நெ.1 பாடலா?
இன்று 8 திரையரங்குகளில் பாபா 100வது நாள்!
பாபாவா? அம்மாவா? தெரு ஓவியத்‌ தேர்தல்‌...
ஒரே நாளில் அரசியல் ஹீரோ ஆக்கப்பட்ட ரஜினி - காவிரி தண்ணீருக்காக அமைதி போராட்டம்
பாபா திரையிட்டவர்களுக்கு ரஜினி பல கோடி திருப்பி தந்தார் - ரஜினிக்கு தியேட்டர் அதிபர்கள் பாராட
பாபா திரைப்படம் சுவாரஸ்யமான கட்டுரைகள் மற்றும் செய்திகள்
பாபா தியேட்டர் முன் பரபரப்பு : பா . ம . க . ஆர்ப்பாட்டம் - ரஜினி - ராமதாஸ் மோதல் வலுக்கிறது
சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக குரு சச்சிதானந்தா சென்னையில் காலமானார் ... ரஜினி அமெரிக்கா விரைந்தார்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பட அதிபர்‌ ஜீ.வி. இரங்கல்‌ கூட்டம்‌
(Wednesday, 7th May 2003)

7 May 2003

மறைந்த பட அதிபர்‌ ஜீ.வி.க்கு, தமிழ்‌ திரைப்பட தயாரிப்பா எர்கள்சங்கப்சார்பில்‌, சென்னையில்‌ நேற்று மாலை
இரங்கல்‌ கூட்டம்‌ நடந்தது

கூட்டத்தில்‌ ரஜினிகாந்த்‌ கலந்துகொண்டு பேசினார்‌. அவர்‌ பேசியதாவது-

“வாழுப்போது ஒருவரை பற்றி பேசுவதை விட, இறந்துபோன பிறகும்‌ துவரைபற்றி பேசவேண்டும்‌. அதற்கு பெயர்தான்‌ சரித்திரம்‌, நண்பர்‌ ஜீவி, ஒரு சரித்திரப்‌.

இன்னும்‌ 40 வருடங்கள்‌ துல்லது 50 வருடங்கள்‌ ஆனாலும்‌, ஜீ.வியை மறக்க முடியாது, பி.ப, சின்னப்பா அந்த காலத்தில்‌ நடிகர்‌ பி], சின்னப்பா வைரத்தை தின்று தற்கொலை செய்ததாக சொல்வார்கள்‌, கொன்னப்ப பாகவதர்‌, ரெயில்வே ஸ்டேஷனில்‌ பிச்சை எடுத்தாராம்‌. அவர்கள்‌ எல்லாம்‌ யாருக்கும்‌ எதுவும்‌ செய்ய வில்லையா? அவர்களால்‌ பலன்‌ அடைந்தவர்களுக்கு நெஞ்சமே கிடையாதா?

ரஜினி, ஜீ.வி.க்கு நெருங்கிய நண்பராக இருந்தும்‌ துவரை காப்பாற்ற முடியவில்லையா? என்று கேட்கும்‌ போது வெட்கமாக இருக்கிறது, அவமானமாக இருக்கிறது. ஜூவி, யாரிடமும்‌ தனது கஷ்டத்தை சொல்ல மாட்டார்‌, எப்படி இருக்கிங்க? என்று கேட்டால்‌, ஆங்கிலத்தில்‌ “பென்டாஸ்டிக்‌” என்று சொல்வார்‌,

அவர்‌ இறந்துவிட்டார்‌ என்று சொன்னதும்‌, ஒடிப்போய்‌ பார்த்தேன்‌. அதை நான்‌ பாத்திருக்க கூடாது. அவர்‌ தூக்கு மாட்டிய மின்‌ விசிறி, என்‌ கண்களுக்கு சினிமா ரீல்‌ மாதிரி தெரிந்தது, தூக்குப்‌ போட்ட அங்கவஸ்திரம்‌ சினிமா பிலிம்‌ மாதிரி தெரிந்தது, அவர்‌ மண்டியிட்டிருந்த நிலையை பார்க்குப்போது இந்த நிலைமை யாருக்கும்‌ வரக்கூடாது என்பது போல்‌ இருந்தது.

ஒரு மாதத்துக்கு முன்பு அவருடைய உறவினர்‌ சுரேசிடம்‌ ஜீவி, எப்படி இருக்கிறார்‌? என்று விசாரித்‌தேன்‌. கொடைக்கானல்‌ பங்களா பற்றும்‌ நிலங்களை விற்க முயற்சி நடப்பதாக சொன்னார்‌,

ஜீ.வி, அவருடைய மகன்‌ திருமண பத்திரிகையை கொண்டு வந்தபோது கூட கேட்டேன்‌. தனது கஷ்டங்கள்‌ பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. என்‌ மகன்‌ கல்யாணத்துக்கு நீங்க வரணும்னு மட்டும்‌ சொன்னார்‌.

அவர்‌ தயாரித்த சொக்கத்தங்கம்‌, தமிழன்‌ இரண்டுப்‌ கெட்ட படங்களா? நல்ல படங்கள்‌தானே... பிற்கு ஏன்‌ “தூள்‌” மாதிரி ஓடலை? திருட்டு வி.சி.டி. ஒருகாரணம்‌.

கே.ராஜன்‌ சாருக்கு ஹாட்ஸ்‌ ஆப்‌, நீங்க பர்மா பஜாரில்‌ திருட்டு வி.சி.டி.யை பிடித்து கொடுத்தீர்கள்‌. பஸ்களில்‌ வி.சி.டி.யை பிடித்துக்‌ கொடுத்தீர்கள்‌.

இப்போதெல்லாம்‌ திருட்டு வி.சி.டியை பையில்‌ கொண்டு வந்து விற்கிறார்கள்‌. திருட்டு வி.சி.டிக்கு எதிராக கடுமையான சட்டப்‌ கொண்டு வரவேண்டும்‌. வி.சிடிக்கு உரிமை கொடுத்தால்‌ தான்‌, அரசாங்கப்‌ ததை கட்டுப்படுத்த முடியும்‌.

நிறைய தயாரிப்பாளர்களை காணவில்லை, நிறைய பேர்‌ படம்‌ எடுப்பதை நிறுத்தி விட்டார்கள்‌. இதோ முன்‌ வரிசையில்‌ அமர்ந்திருக்கும்‌ தயாரிப்பாளர்‌ பாபுவிடம்‌, “காளி” படத்துக்காக கைநீட்டி பணப்‌ வாங்கி இருக்கிறேன்‌.

பஞ்சு சார்‌ எப்படி இருந்தார்‌, நான்‌ என்னால்‌ முடிந்த உதவியை செய்தேன்‌. அதற்கு மேல்‌ என்னால்‌ முடியவில்லை.

இப்போது ஒரு தயாரிப்பாளராக பேசுகிறேன்‌. நான்‌ “பாபா” படப்‌ பண்ணினேன்‌. ஆகஸ்டு மாதம்‌ ரிலீஸ்‌ பண்ண முடிவு செய்யப்பட்டது, சில காரணங்களால்‌ ரிலீஸ்‌ தேதி தள்ளிப்போகும்‌ சூழ்நிலை ஏற்பட்டது,

அப்படி தள்ளிப்போனால்‌ நான்கு அல்லது ஆறு கோடி ரூபாய்‌ அதிகம்‌ செலவாகும்‌. அப்படி அதிக செலவாகி இருந்தால்‌, வினியோகஸ்தர்களின்‌ பணத்தை திருப்பிக்‌ கொடுத்திருக்க முடியாது,

சொன்னபடி ஆகஸ்டில்‌ படத்தை ரிலீஸ்‌ செய்தேன்‌. வினியோகஸ்தர்கள்‌ கொடுத்த பணத்தை அவர்களுக்கே திருப்பிக்‌ கொடுத்தேன்‌. அதோடு கணக்கை முடித்தேன்‌.

இறைவா, நண்பர்களிடம்‌ இருந்து என்னை காப்பாற்று... பகைவர்களை நான்‌ பாரீத்துக்‌ கொள்கிறேன்‌.

புதுசாக படப்‌ தயாரிக்க வருகிற தயாரிப்பாளர்களுக்கு நான்‌ சொல்வது படம்‌ தயாரிக்கும்போது அந்த பணத்தில்‌ ஒரு பத்து சதவீதத்தை உங்கள்‌ மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள்‌. ஒரு கிரவுண்டு வாங்கிப்‌ போடுங்க...

சினிமா நம்மை காப்பாற்றும்‌ என்று நம்பாதீர்கள்‌, மறுபடியும்‌ ஜீ.வி. சார்‌ நிலைமை யாருக்குப்‌ வரக்கூடாது.

நாலைந்து பேர்‌ உட்கார்ந்து பேசி, கடன்‌ கொடுத்தவர்களை சமாதானப்படுத்தி, சில பேரீ உயிரை காப்பாற்றுங்கள்‌, என்னால்‌ முடிந்த உதவியை செய்கிறேன்‌.

ஜீ.வி, சார்‌ ஆத்மா சாந்தி துடையணுப்‌, அவர்‌ குடுப்பத்தினருக்கு ஆண்டவன்‌ ஆறுதல்‌ சொல்லணுப்‌” இவ்வாறு ரஜினிகாந்த்‌ பேசினார்‌.

 


 
0 Comment(s)Views: 672

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information