4 Feb 2004
www.rajinifans.com என்றவுடன் ரஜினியின் புகழ்பாடுவது மட்டும்தான் வேலைன்னு நினைச்சு எட்டி கூட பார்க்காமல் நிறைய பேர் ஓடிப்போயிடற மாதிரிதான்னு எனக்கு தெரியுது. இங்கே ரஜினி தொடர்பான அரசியல், ஆன்மீகம்னு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கிறோம்னு தன்னடக்கத்துடன் தெரிவிச்சுக்கிறோமுங்கோ! இது ஆரம்பிச்ச கதையை சொல்லணும்னா நிறைய சொல்லியாகணும்.
விழப்புரத்தில் அங்கீகாரம் பெற்று தான் ஆரம்பித்த 'நாட்டுக்கொரு நல்லவன்' ரஜினிகாந் நற்பணி மன்றத்தை சென்னைக்கு வந்து பின்னரும் உயிர்ப்பிக்க நினைத்த நட்டு என்கிற நடராஜீம், ஏற்கனவே ரஜினிக்கென்று தனியாக யாகூ குழுமத்தை ஆரம்பிச்சு கலக்கிட்டு இருந்த சிங்கப்பூர் Shajahan ஓன்றாக சேர நடுவே ததிமுக - தமாக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்த ரஜினி மாதிரி நானும் என்னுடைய கையை கொடுக்க, இன்னும் சில அன்பர்களின் சிந்தனையாலும் பொருளாதார உதவியாலும் பாபா வெளியான நேரத்தில் வலைத்தளத்தை இணையத்தில் ஏற்ற முடிந்தது. ரஜினியின் அபூர்வமான புகைப்படங்கள், ரஜினி படங்கள் குறித்த விமர்சனங்கள், விவாதங்கள், ரஜினி பட பாடல்கள், ரஜினியின் உரைகள், லேட்டஸ்ட் செய்திகள் என எங்களால் முடிந்ததை கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் 900 உறுப்பினர்களையும் 40 தீவிர உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் யாகூ குழுமத்தை பிண்ணணியில் கொண்டு இயங்கினாலும் ரஜினி பற்றி அதீத புகழ்ச்சியுரைகளையோ காழ்ப்புணர்ச்சியுடனான தனி மனித தாக்குதல்களோ இல்லாமல் குழுமத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவது சாதனைதான். ரஜினி பற்றிய அனைத்து சங்கதிகளும் எளிதாகவும் முழுமையாகவும் கிடைக்குமாறு செய்வதுதான் எங்களின் முதல் நோக்கமாக இருந்து வருகிறது. www.rajinifans.com வலைத்தளத்தை ஒரு தடவை பார்வையிட்டு நிறை குறைகளை தெரியப்படுத்தினால் எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
- ஜெ. ரஜினி ராம்கி
|