ஜெயிலர் காவாலா பாடல் – VIBE அலையிலிருந்து வெளிவராத ரசிகர்கள்!
(Monday, 17th July 2023)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமாகும். இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகிறது. தற்பொழுது இப்படத்தின் ‘காவாலா’ லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘ஜெயிலர்’ படம் பான் இந்தியா வெளியீடாக தயாராகி உள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பேட்ட, தர்பார் என சூப்பர் ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது எனப் படக் குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது. வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பல மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் ஸ்பாட்டிஃபையில் (spotify) இந்தப் பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது. அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல் ரசிகர்களுக்கு புதுமையை அளித்துள்ளது.
தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என மொத்தமாக சேர்ந்து இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ட்ரண்டிங் ரீல்ஸ் முழுவதும் காவாலா பாடலாகத்தான் உள்ளது. தமன்னாவின் நளினமான நடனம் மற்றும் அனிருத்தின் டிரேட் மார்க் இசை உள்ளிட்டவை பாடலை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமிழிலும் தெலுங்கும் கலந்து எழுதப்பட்ட இதன் பாடல் வரிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். நிச்சயம் இப்பாடல் திரையரங்குகளில் கொண்டாட்டத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Please note that your comment WILL NOT be published if:
It is not related to the above article.
It has marketing/promotion content.
It has personal attacks/verbal abuse/indecent words.
It has content that may hurt the feelings of anyone.
Thank you in advance for being decent when you express your comments.
Remember me?:
* Name:
* Email:
(Will not be published)
Country/City:
Word verification:
* Comment:
Language:English Tamil
Use F12 to toggle English & Tamil. Tamil typing powered by Thagadoor
Show Keymap Online Keymap Help
Fields marked with * are compulsary. Your Email id is just for our reference. It will not be displayed here or shared with anyone.