தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் முழு மருத்துவ செலவையும் ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்…!!!
(Thursday, 9th March 2023)
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். தமிழில் பல படங்களை தயாரித்த வி.ஏ.துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மனைவி, மகளை பிரிந்துள்ள வாழும் அவர், தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். இருப்பினும் அவரது காலில் காயங்கள் இன்னும் ஆரவில்லை. அத்துடன் உடல் மெலிந்தும் அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். அவருக்கு நடிகர் சூர்யா ரூ.2 லட்சமும், கருணாஸ் ரூ.50 ஆயிரமும் கொடுத்து உதவியுள்ளனர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத சூழலில் இருக்கும் தனக்கு உதவுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு வி.ஏ.துரை கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் உதவி செய்வதாக கூறிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே நேரடியாக தொலை பேசியின் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் எந்த விஷியத்தை பற்றியும் கவலை படவேண்டாம் என்றும் எல்லாவற்றையும் இனி தான் பார்த்துக்கொளவதாகவும் கூறியுள்ளார். அதோடு “ஜெயிலர்” படப்பிடிப்புக்கு பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளார். இதனால் தற்போது தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த அப்போது கொடுத்த 51 லட்சம் : அதோடு பேட்டியில் பேசிய வி.ஏ.துரை தான் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கும் போது அதற்காக 51 லட்சம் ரஜினிகாந்த் கொடுத்ததாகவும் ஆனால் அந்த பணத்தை சரியாக பயன்படுத்தி கொல்லாமல் சினிமா மோகம் கொண்டு மொத்த பணத்தையும் இழந்து தற்போது இந்த நிலைமையில் இருக்கும் எனக்கு மீண்டும் ரஜினிகாந்த் உதவி செய்கிறார் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் இயக்குனர் வி.ஏ.துரை.