சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் பகிர்ந்து வரும் சூழலில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, திரை உலகில் கால் பதித்து தற்போது 40 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.
இந்த நிலையில், 40 ஆண்டுகள் சினிமா உலகில் நடிகை மீனா நிறைவு செய்ததையொட்டி Behindwoods சார்பில் Meena 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார். இவர் இந்த விழாவிற்குள் உள் நுழையும் போதே பலத்த கரகோஷங்கள், ஆரவாரங்கள் என அரங்கமே அதிர்ந்திருந்தது.
அதுமட்டுமல்லாது ரஜினிகாந்த் வந்ததுமே மற்றப் பிரபலங்கள் எல்லோருமே வச்ச கண் வாங்காமல் அவரையே பார்த்திட்டு இருந்தார்கள். ஒரு காட்டிற்குள் சிங்கம் நடந்து வந்ததை போல் ரஜினி நடந்து வந்தார். ரஜினியைக் கண்டதும் கலா மாஸ்டர் ஆச்சிரத்தில் ரொம்பவே நெகிழ்ந்து போனார்.
அதன் பின்னர் சரத்குமார் அவரைப் பார்த்தும் சற்றுப் பம்மிக்கொண்டு "வாங்க தலைவா" அப்பிடி என்று தட்டிக் கொடுத்து விட்டு நின்றார். அடுத்ததாக ரஜினி போனி கபூர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டார். போனி கபூரும் ரஜினியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார். இவ்வாறாக 'மீனா 40' நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
மீனா தனது கணவர் குறித்து பேசி எமோஷ்னல் ஆனதை பார்த்த நடிகர் ரஜினிகாந்தும் எமோஷ்னல் ஆகி கண் கலங்கினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் யார் கண்ணு பட்டுச்சோ தெரியல என்று மீனாவின் கணவர் இறந்தது பற்றி கூறி வருத்தப்பட்டார்.
ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என ஆரம்பித்து மேடையில் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்டு ரஜினிகாந்திடம் நெற்றியில் முத்தம் வாங்கிக் கொண்ட மீனாவின் மகள் நைனிகாவின் குறும்புத்தனத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த பொண்ணா இப்படி வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.