இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் ஒன்றை மும்பையில் தொடங்கியுள்ளார். இந்தியாவில் தோன்றிய நூற்றுக்கணக்கான பாரம்பரிய கலைகளை உலக அரங்கில் எடுத்துச்செல்லும் விதமாக இந்த முயற்சியை நீடா அம்பானி எடுத்துள்ளார்.
இதன் மூலம், இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் கலைஞர்களை அங்கீகரிக்கப்பது உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கோலாகலமாக நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், இசை மற்றும் ஆடை அலங்கார கண்காட்சி மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த், ஆமிர் கான் உட்பட திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 4 அடுக்குகள் கொண்ட நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில், இரண்டாயிரம் இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புது லுக் மற்றும் ஸ்டைலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் கருப்பு டி ஷர்ட் மற்றும் கருப்பு பேன்ட் காஸ்டியூமில் இளைய மகள் சௌந்தர்யாவுடன் விழாவில் பங்கேற்றார்.
இந்த புகைப்படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "அன்பான அப்பாவுடன் மும்பயில் இருக்கிறேன். அத்தை நீடா அம்பானியின் கலாசார விழா தொடங்கவிழாவில் பங்கேற்க.. புது லுக் செம்ம தலைவா" என தனது பதிவில் சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.
கிளீன் ஷேவில் மீசையுடன் ரஜினியின் நியூ லுக் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. லால் சலாம் அல்லது தலைவர் 171 படத்தின் ரஜினியின் லுக்காக இது இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
|