பைரவி, இந்த வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
அப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் முதலில் பார்த்த படம் பாதாள பைரவி
என்னுடைய அறிமுக படம் அபூர்வ ராகங்களில் நான் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இது தானா? "
கலைஞானம் சார் என்னை ஹீரோவா வைச்சு எடுக்குறேன்னு சொன்ன படம் டைட்டில் பைரவி..
அந்த வார்த்தை கேட்டு ஒண்ணு புரிஞ்சுது சோ, எதோ ஒண்ணு இருக்கு, நமக்கு மேல ஒரு சக்தி..
மேடையில் ஏறி வழக்கத்தை விட சற்று அதிகமான கெம்பிரமான குரலில் தலைவர் கலைஞானம் ஐயாவோடு தன்னுடைய கலையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.
பாரதிராஜா தன் வாழ்த்துரையில் நம் தலைவரைப் பற்றி குறிப்பிடும் போது "அப்ப அப்ப அவரை நான் சின்னதா சீண்டி விடுவேன்..
ஆனா அவரு அத பெருசா எடுத்துக்க மாட்டார்.. நான் கேட்டா கூட விடுங்க விடுங்க பாரதி ன்னு சொல்லிடுவார்.. He is a great soul.. என்று பேசியிருந்தார்.
ரஜினி ரசிப்பது எல்லாம் கிளாஸ் விஷயங்கள் ஆனால் செய்வது எல்லாம் மாஸ் விஷயங்கள், மக்களை தராசு பிடித்து அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதில் வித்தகர் என்றார்.
அரசியல் களம் காணும் முன் மதுரை மண்ணில் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எடுத்தது போல் ஒரு விழா சூப்பர் ஸ்டார்க்கும் எடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் வைத்தார், தலைவர் அதை மறுத்து வருவதாகவும் சொன்னார்.
நம் தலைவர் உரையில் பாரதிராஜாவுக்கும் தனக்குமான நட்பின் அன்பினை தனக்கே உரிய ஸ்டைலில் செல்லமாய் குறிப்பிட்டார்.
பாரதிராஜா என்னை தலைவரே ன்னு தான் கூப்படுவாரு.. ஆனா நீங்க கூப்படுற தலைவர் இல்ல.. வேற மாரி கூப்டுவாரு..
பாட்டி வடை சுட்ட கதை நீ பண்ணாக் கூட அது ஓடுதேய்யா என்று பாரதி ராஜா சொல்லுவதை சொன்னார்
எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும், அந்த கருத்து வேற்றுமை நட்புக்கு குறுக்கே வரக்கூடாது என்றும், தன் நட்பில் ஒரு போதும் வராது என்றும் தலைவர் குறிப்பிட்டார். பழைய நட்புக்களையும் நண்பர்களையும் போற்றும் அவசியத்தை எடுத்து சொன்னார்.
ஒரு படத்தில் கதையின் அவசியத்தையும் கதையாசிரியர்களை மதிக்க வேண்டிய காரணத்தையும் விளக்கி பேசினார் தலைவர்.
பைரவி படத்த்தில் முதலில் தான் நடிக்க தயங்கியதையும் பின் அதிக சம்பளம் கேட்டு அதன் மூலம் கதாநாயகன் வாய்ப்பை தவிர்க்க நினைத்தையும் ஒளிவு மறைவின்றி மேடையில் சொன்னார் ரஜினி.
பைரவி ஒரு மாபெரும் வெற்றி படமானதையும், அதில் தாணு தனக்கு Greatest சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டியதையும் சங்கோஜத்தோடு நினைவு கூர்ந்தார்.
கலைஞானம் அய்யா பற்றி குறிப்பிடுகையில், தமிழருக்கே உரித்தான ஆஜானுபாகுவான கருத்த தேகம் இல்லாது ஒரு வட நாட்டுகாரர் கணக்கா சிரித்த முகத்துடன் இருப்பவர் என்றதோடு அல்லாமல்
"TAKE YOUR LIFE EASILY but DO YOUR DUTIES SERIOUSLY" என்ற ஒரு கொள்கையோடு வாழ்பவர் அய்யா என்றார், அதனால் தான் 90 வயதிலும் அவரால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது, இயங்க முடிகிறது, இதை செய்தியாய் மட்டும் இன்றி வந்தவர்கள் கேட்டவர்கள் பாடமாய் எடுத்து கொள்ளும் படி அழுத்தமாய் உரைத்தார் சூப்பர் ஸ்டார்.
குட்டிக்கதை இல்லாத தலைவரின் மேடையா, சொன்னாரே ஒரு சிறப்பான கதை
வாழ்க்கைன்னா என்ன? சாமியார் ஒருவரிடம் கேட்டானாம் ஒருத்தன். அதுவா அங்கே ஒரு மாட்டுக்கொட்டகை இருக்கு, அங்கே போ, அங்கே இருக்க மாடுகளை எல்லாம் தூங்க வச்சிட்டு வா, சொல்லுறேன்ன்னு சொன்னாராம் சாமியார்.
போனவன் காலையில் கண்ணு சிவந்து வந்து நின்னானாம், என்னாச்சுன்னு சாமியார் கேக்க,
எங்கே சாமி, ஒரு மாட்டை கஷ்ட்டப்பட்டு தூங்க வச்சா, அடுத்த மாடு எழும்புது, அதை தூங்க வச்சு இன்னொண்ணு எழும்புது, இப்படியே மாத்தி மாத்தி ஏதாவது ஒரு மாடு எழும்பி கத்தி கத்தி என் தூக்கமே போச்சு..
அப்படியான்னு சிரிச்சார் சாமியார்
ஏன் சாமி சிரிக்குறீங்க? கேட்டான்.
அடேய் அது தாண்டா வாழ்க்கை, ஏதாவது ஒரு மாடு எப்பவும் கத்திட்டே தான் இருக்கும், அப்படி கத்துற மாடை எல்லாம் அப்படியே உட்டுட்டணும், அப்போத் தான் வாழ்க்கை நல்லாயிருக்கும்
தன் வசிய சிரிப்போடு கதையை முடித்தார் தலைவர்.
கலைஞானம் அய்யா தன்னோடு இன்னும் சில படங்கள் பண்ணியிருக்கணும், என்னைக் கேட்டு இருக்கணும்னு ஆதங்கப்பட்டார்.
ஒரு தாயே பசிக்கு குழந்தை அழுதால் தான் பால் கொடுக்கிறாள் என்றார்
சிவக்குமார் சார் மேடையில் கலைஞானம் அய்யா வாடகை வீட்டில் இருப்பதாக சொன்னார், அரசாங்கம் உதவணும் என்று கோரிக்கை வச்சு இருக்காங்க, பட் அரசாங்கம் உதவ நான் வாய்ப்பு கொடுக்க மாட்டேன், நான் அவருக்கு வீடு வாங்கி கொடுப்பேன், என் வீட்டில் தான் அவர் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று உரக்க மேடையில் சொல்லி தன் உரையை முடிக்கும் போது எழுந்த கரவொலி அடங்க நேரமாயிற்று.
கலைஞானம் தன் ஏற்பரையில்தலைவர் சாண்டோ சின்னப்ப தேவர்n குடும்பத்திற்கு செய்த உதவிகளை பற்றி சொன்னார் அத்தோடு தன் கலையுலக பயணத்தை பற்றி சுருக்கமாய் சொல்லி நன்றி தெரிவித்தார்.
அமைச்சர் ராஜு "தலைவர் தான் எப்போவும் சூப்பர் ஸ்டார் தான் " என்றதும்
சிவக்குமார் "ரஜினியின் கொடி இமயமலையில் பறக்கிறது " என்றதும் நிகழ்ச்சியின் வேறு சில மின்னல் தோரணங்கள்.
மொத்தத்தில் ஒரு முத்தான விழா அதில் வழக்கம் போல் பொன்னாக மின்னினார் நம் அன்புத் தலைவர்.
நன்றி
தேவ்
|