Related Articles
சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் நிச்சயதார்த்தம்! அசத்தல் படங்கள் !!
கலையுலக விழா நேரடி ரிப்போர்ட்
ரஜினி கலந்துகொண்ட... ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் ... கோவா ... ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு காட்சி
ஜக்குபாய் பிரஸ் மீட் ... திரைத்துறையினர் மனு ... ஜக்குபாய் பிரீமியர் ... சூப்பர் ஸ்டார் ரஜினி
புனேவிலும் சூப்பர் ஸ்டாரை காண அலைமோதும் கூட்டம் - எந்திரன் ஷூட்டிங்
சூப்பர் ஸ்டார் திறந்து வைத்த ஓட்டல்; வெளியே நிலவிய பரபரப்பான சூழ்நிலை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது
சிறந்த நடிகருக்கான விருது சிவாஜி – தி பாஸ் படத்துக்காக தலைவர் ரஜினிக்கு விருது
ஆந்திர வெள்ள நிவாரண நட்சத்திர விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
திரு.சுகி.சிவம் பட்டிமன்ற நிகழ்ச்சியில் ரஜினி பார்வையாளராக கலந்துகொண்டார்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
(Monday, 15th February 2010)

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்ன இவன் தலைவர் கலந்துக்குற பங்க்ஷன் ஒன்னை கூட விடுறதில்லை…. எப்படியோ போயிடுறான்….  என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும். அது அப்படியில்லைங்க. தலைவரோட விழாக்கல்ல தவறாம கலந்துக்குற மாதிரி சில சமயம் சூழ்நிலைகள் தானா பொருந்திவரும். அவ்வளவுதான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அழைப்பிதழ் இல்லாம நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்லை. தலைவர் கலந்துக்குற நிகழ்ச்சிகளோட அழைப்பிதழ் சில சமயம் நமக்கு கிடைக்கும். சில சமயம்,  நண்பர்களுக்கு கிடைச்சு அவங்க என்னை கூட்டிகிட்டு போவாங்க. வேற  சில சமயம் அவங்களுக்கு கிடைக்குற இன்விடேஷனை என்கிட்டே கொடுத்து, “நாங்க போயி என்ன ஆவபோகுது? நீங்க போனா, எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணி, சைட்ல போடுவீங்க. எல்லாரும் படிச்சு சந்தோஷப்படுவாங்க. நீங்க போறது தான் பெட்டர்”னு சொல்லி என்னை கேட்டுக்குவாங்க. (மிரட்டுவாங்க!). அவங்க அன்புக்கு கட்டுப்பட்டு நானும் இது போன்ற விழாக்களுக்கு - எனக்கு அப்போதைக்கிருக்கும் சூழ்நிலைகளை பொறுத்து - போறதுண்டு. ஓ.கே.?

சரி… சமீபத்துல வள்ளுவர் கோட்டத்துல நடந்த முதல்வர் பாராட்டு விழாவுக்கு போகலாமா?

சங்கத்தமிழ் பேரவை சார்பா ஞாயிற்றுகிழமை நடந்த இந்த முதல்வர் பாராட்டு விழாவை பொறுத்த வரை, நான் ஆபீஸ் போற வழியில, வள்ளுவர் கோட்டம் பக்கத்துல, நிகழ்ச்சி குறித்த டிஜிட்டல் பேனர் வெச்சிருந்தாங்க. அதுல, “அனைவரும் வருக” அப்படின்னு போட்டிருந்துச்சு. அப்போதான் அந்த பங்க்ஷனுக்கு போகலாம்னு முடிவு பண்ணினேன். ஞாயிற்று கிழமை ஈவ்னிங் என்பதால இன்னும் சௌகரியாமா போயிடுச்சு.

ஞாயிற்று கிழமை ஈவ்னிங், தி.நகர்ல ஒரு வேலை இருந்தது. அதை முடிச்சிட்டு நேரே வள்ளுவர் கோட்டம் போனேன். மிகப் பிரமாண்டமா சிறப்பா விழாவை ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த ஏரியாவே மின் விளக்குகளால் ஜொலித்துகொண்டிருந்தது. (ஜெனரேட்டர் மூலமா).  வள்ளுவர் கொட்டத்தை முழுமையா அலங்காரம் செஞ்சி, தோரணம், சீரியல் லைட்டுன்னு தூள் கிளப்பியிருந்தாங்க. எங்கே பார்த்தாலும் தி.மு.க. கரை வேட்டிகள் தான். தொண்டர்கள் வர்றதும் போறதுமா இருந்தாங்க. அந்த ஏரியாவே நல்லா ஜே.ஜே.ன்னு இருந்துச்சு.

மெயின் என்ட்ரன்ஸ் வழியா மெட்டல் டிடக்டர் செக்கிங்குக்கு அப்புறம் உள்ளே போனோம். உள்ளே போனா, அதாவது முதல் படிக்கட்டுக்களை ஏறிப் போனா, அங்கே இருக்குற OPEN SPACE ல கட்சிக்காரங்க நிறைய பேர் உட்கார்ந்திருந்தாங்க. ரெண்டு பக்கமும், பெரிய ஸ்பீக்கர்ஸ் மற்றும் டி.வி.ஸ்க்ரீன் வெச்சிருந்தாங்க. இதை தவிர நல்ல எல்.சி.டி. டி.வி. ஒன்னும் பெரிசா வெச்சிருந்தாங்க. ஏற்பாடு சூப்பரா இருந்ததாலே, அந்த ஏரியாவுல இருக்குற நம்ம நண்பர்கள் (நம்ம SITE விசிட்டர்ஸ்) ரெண்டு பேருக்கு விஷயத்தை சொல்லி அவங்களை உடனே வரச் சொன்னேன். அவங்களும் அடுத்த பத்து நிமிஷத்துலே அங்கே ஆஜர். அங்கே, புல் வெளியில தி.மு.க காரங்க கூட உட்கார்ந்து கொஞ்ச நேரம் நிகழ்ச்சியை ரசிச்சோம். விழாவில், பேசியவர்கள் அனைவரையும் அட்ரஸ் செய்யும்பொழுது சூப்பர் ஸ்டார் பேரை சொன்னவுடனே கைத்தட்டி, ஆரவாரம் செய்தோம். பல தி.மு.க காரங்க கூட கைதட்டினாங்க தெரியுமா ?

நாம் சென்ற போழுது அவ்வை நடராசன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கவியரங்கம் நிறைவுபெற்று, சிறப்பு விருந்தினர்கள் மேடையில் அமரவைக்கப்பட்டனர். இந்த தருணத்தில் நாம் ஆடிட்டோரியத்தின் உள்ளே சென்றுவிட்டோம். அங்கு தலைவரை நன்கு பார்க்ககூடிய ஒரு நல்ல இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்க ஆரம்பித்தோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மத்திய அமைச்சரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா, பரூக் அப்துல்லா, கலைஞானி கமல் ஹாசன், மம்மூட்டி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்தனர்.

விழா துளிகள்

*கீழே முதல் வரிசையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுடன் முதல்வர் அமர்ந்து கவியரங்கத்தை ரசித்துக்கொண்டிருக்க, சூப்பர் ஸ்டார் துணை முதல்வருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

*மேடை ஏறியதும் பார்வையாளர்களை பார்த்து கைகூப்பி தனது ஸ்டைலில் தலைவர் வணக்கம் சொல்ல, உற்சாக ஆரவாரத்தில் அதிர்ந்தது தி.மு.க.வினர் நிரம்பியிருந்த அந்த வளாகம்.

*முன்னதாக விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைகளை போர்த்தினார். சூப்பர் ஸ்டாருக்கு அவர் பொன்னாடை போர்த்தும் அந்த புகைப்படத்தை பாருங்க… கண்கொள்ளா காட்சி அது…!

*மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும் பொழுது தலைவரை “Country Superstar” என்று அழைத்தார்.

*சூப்பர் ஸ்டாரின் பெயர் மேடையில் உச்சரிக்கப்பட்டபோதேல்லாம் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

*பேசியவர்களில் பலர் அழகிரியையும் ஸ்டாலினையும் அட்ரஸ் செய்ய தவறியபோது சூப்பர் ஸ்டார் தவறாது அவர்கள் இருவரையும் அட்ரெஸ் செய்தார். “என் நண்பன் ஸ்டாலின்” என்று துணை முதல்வர் ஸ்டாலினையும், “அஞ்சா நெஞ்சன் அழகிரி” என்று அழகிரியையும் அட்ரெஸ் செய்தார். அழகிரி பெயரை உச்சரித்தபோது நல்ல ஆரவாரம்.

*துரைமுருகனை “நீங்கள் என்ன லேபில்?” என்று தான் கேட்டதாக தலைவர் சொல்ல, அதை கேட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. ஸ்டாலின் விழுந்து விழுந்து சிரித்தார்.

*மேடையில் அமர்ந்திருந்தபோது எஸ்.எம்.கிருஷ்ணாவும், சூப்பர் ஸ்டாரும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தனர்.

*முதல்வருக்கு அருகில், எஸ்.எம்.கிருஷ்ணாவும் பரூக் அப்துல்லாவும் அமர்ந்திருந்தனர். எஸ்.எம்.கிருஷ்ணா பேசி முடித்ததும் முதல்வரிடம் விடைபெற்று கிளம்பிவிட்டார். இதனால் முதல்வருக்கு அருகில் இருந்த இருக்கை காலியாக, துரைமுருகன் சூப்பர் ஸ்டாரை முதல்வருக்கு பக்கத்தில் உள்ள அந்த இருக்கையில் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் ரஜினி.

*முதல்வரிடம் விடைபெற்ற எஸ்.எம்.கிருஷ்ணா ரஜினியிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி விடைபெற தவறவில்லை.

*முதல்வர் பேசும்பொழுது வேறு எவர் பெயரை சொல்லியபொழுதைவிட தலைவரின் பெயரை உச்சரித்தபோது ரெஸ்பான்ஸ் சற்று அதிகம் இருந்தது.

*சூப்பர் ஸ்டார் பேசியபொழுது, அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் சிலர் ஸ்பீக்கர் முன் சென்று அவரது பேச்சை ரெக்கார்ட் செய்தனர்.

* தென்னிந்தியா அரசியலின் மூத்த தலைவர் என்று முதல்வரை மேடைகளில் அழைத்து வந்த சூப்பர் ஸ்டார், சென்ற விழாவில் பேசிய வைரமுத்தூ, “ஜோதிபாசு மறைவுக்கு பின்பு கலைஞர் இந்திய அரசியலின் மூத்த தலைவர் ஆகிவிட்டார். இதை ரஜினி அவர்கள் குறித்துக்கொள்ளவேண்டும்” என்றார். அதே விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், முதல்வரை இந்திய அரசியலின் மூத்த தலைவர் என்று தான் அழைத்தார். இந்த விழாவிலும் மறக்காது அப்படியே குறிப்பிட்டார்.

*முதல்வரின் குடும்பத்தினர், மத்திய  மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த விழாவில் பங்கேற்ற சில முக்கியஸ்தர்கள் வருமாறு: தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, ஐயா ஆர்.எம்.வீரப்பன், திருமதி.ஒய்.ஜி.பி., மதுவந்தி அருண், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, கவியரசு வைரமுத்து மற்றும் பலர்.

*சூப்பர் ஸ்டார் பேசியபொழுது, கோர்வையாக அனைத்து விஷயங்களையும் பேசி முடித்தார். விழா ஏற்பாட்டாளர்களான ஜெகத ரட்சகன், துரைமுருகன் ஆகியோரை பற்றி பேசி, அடுத்து சர்வக்ஞர் பேசினார். பிறகு, முதல்வர் பற்றி பேசியவர் இறுதியாக தனது மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பை ஏன் முதல்வருக்கு நேரில் சென்று கொடுக்கவில்லை என்பது குறித்தும் அருமையான விளக்கம் ஒன்றை அளித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, முதல்வர் விழாவில் அடிக்கடி சூப்பர் ஸ்டார் பங்கேற்பது குறித்து, நண்பர் ஒருவர் கேள்வி கேட்டபோது, அவருக்கு நாம் அளித்திருந்த பதிலை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நாம் பதிலில் குறிப்பிட்டது இதை தான். நாம் தனி பதிவாக சொல்ல நினைத்ததை சூப்பர் ஸ்டார் இங்கே சொல்லிவிட்டார்.

முதல்வர் கலந்துகொள்வதால் விழாவை தவிர்க்க நினைத்த ரஜினி…

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்துக்கு 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு ம்யூசிக் அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது. (இதை ஏற்பாடு செய்தது தமிழக அரசு அல்ல. வேறு ஏதோ திரையுலகம் / இசையுலகம் சார்ந்த ஒரு அமைப்பு.) அப்போது முதல்வராக இருந்த கலைஞர் தான் தலைமை தாங்கினார். அவ்விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், “விழா அமைப்பாளர்கள் முதலில் என்னிடம் ஒரு தேதியை குறிப்பிட்டு கலந்துகொள்ள வர முடியுமா என்று கேட்டார்கள். அந்த தேதியில் எனக்கு வேறொரு வேலை இருக்கிறது என்று கூறி தப்பித்துவிட்டேன். சில நாட்கள் கழித்து, தேதி மாறிவிட்டது. இப்போது நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். நான் வசமாக மாட்டிக்கொண்டேன். தட்ட முடியவில்லை. வேறு ஒன்றுமில்லை…. முதல்வர் கலந்துகொள்வதால் இவ்விழாவை தவிர்க்க நினைத்தேன். ஏனெனில் அரசனுடன் மிக அதிகம் நெருக்கம் காட்டக்கூடாது. அதே சமயம் விலகியும் இருக்கக்கூடாது. நெருப்பில் குளிர் காய்வது போல அவர்களுடன் அளவாக பழகவேண்டும்.முதல்வர் கலைஞர் அவர்களுடன் நான் அது போல ஒரு தூரத்தை வைத்துக்கொள்ள நினைக்கிறேன்” என்றார்.

உங்கள்ல சிலருக்கோ பலருக்கோ தோன்றலாம்… “எங்கேயிருந்து தலைவர் இது போல கருத்துக்களை பிடிக்கிறார்னு….?” ……. கரெக்டா? நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன் - சூப்பர் ஸ்டார் திருக்குறளின் தீவிர விசிறி என்று.

திருக்குறளில் ‘மன்னரை சேர்ந்தொழுகல்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருப்பது:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (குறள் :691)

பொருள் : மன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருக்கவேண்டும்.

இதை தான் சூப்பர் ஸ்டார் கடைபிடிக்கிறார். போதுமா?

Back to the article:

சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசியதன் சுருக்கம்: (முழு ஆடியோ  கடைசியில் தரப்பட்டுள்ளது.)

dsc_0324“கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.

திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள்.

“மாயாபஜார்’, ​ “ஜெகன்மோகனி’ போன்ற படங்களில் வரும் “செட்’களை விட பிரமாண்டமான “செட்’ அமைத்து இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.

அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார்.

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி மறுப்பு,​​ ஆண்}பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதை அறியலாம்.

சில இடங்களில் பெரியார் சொல்வதைப் போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.

இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​ குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​ அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.

திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​ அந்தக் குதிரை போல பயம் அறியாமல் ‘எங்கள் விழா’ என்ற உரிமையுடன் பாராட்டியிருக்கிறோம்.

ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில் முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது.

ஜெகத்ரட்சகன் பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(செந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.

அப்போது என் குடும்பத்தாரிடம் “நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்’ என்றேன்.​ “நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?’ என வீட்டில் கேட்டனர்.​ தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை கொடுக்கும்போது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என் வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் “அரசன் என்பவன் நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும் கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும் இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.

இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!

இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 
0 Comment(s)Views: 600

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information