Related Articles
பாராட்டிய சூப்பர் ஸ்டார் ... வாழ்த்திய சூப்பர் ஸ்டார்
பாலகுமாரன் வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி - திரு. பாலகுமாரனுடன் நமது சந்திப்பு
லாபத்தை பங்கிடுவதில் முதலாளி எப்படி இருக்கவேண்டும்? - FEFSI மாநாட்டில் ரஜினியின் பன்ச்
நடிகர் நடிகை சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினி
கமல் 50 பிரமாண்ட பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி
என் குருநாதர் பாரதிராஜாவைவிட ரஜினிக்கு என் குடும்ப உறவுகள் மேல் அதிக அட்டாச்மென்ட் - மணிவண்ணன
Director Shankar interview on Enthiran movie and new movie stills
Superstar Rajinikanth at South Indian Cinema artists 80s theme party
மக்களுக்கு பயன் தரக் கூடிய பல சமூகப் பணிகளில் ரஜினி ரசிகர்கள்
மணிவண்ணன் மகள் திருமணத்தை சூப்பர் ஸ்டார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
திரு.சுகி.சிவம் பட்டிமன்ற நிகழ்ச்சியில் ரஜினி பார்வையாளராக கலந்துகொண்டார்
(Saturday, 31st October 2009)

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கம்பன் கழகம் சார்பாக கம்பன் விழா நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று திரு.சுகி.சிவம் அவர்கள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட கம்பராமாயணத்தை பற்றி பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கம்ப ராமயானத்தால் பெரிதும் பயன்பெற்றது இலக்கியமா, ஆன்மீகமா, சமுதாயமா என்ற தலைமையில் இப்பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென்று நமது தலைவர் தோன்றி பார்வையாளராக கலந்துகொண்டார்.

பெரியவர் அய்யா ஆர்.எம்.வீ, மற்றும் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் ஹண்டே, கவிஞர் காசி முத்து மாணிக்கம், சிலம்பொலி செல்லப்பன்  ஆகியோருடன் அமர்ந்து பட்டிமன்றத்தை முழுக்க இருந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார். ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். (அடுத்த நாள், தினத்தந்தியில் மட்டும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. வேறு எதிலும் நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியாகவில்லை.)

நமது தளத்தில் மட்டும்…

சற்று தாமதமானால் என்ன…. தலைவரைப் பற்றிய செய்தி - அதுவும் படங்களுடன் அளிக்கப்படும் செய்தி - சுவை குறைந்துவிடுமா என்ன? எனவே வெளிவந்திராத இவ்விழாவின் புகைப்படங்களை நம் ரசிகர்களுக்கு  விருந்தாக அளிக்கலாம் என்று - நெடிய முயற்சி செய்து - இந்த விழாவின் பிற படங்களை நமது தளத்திற்காக பிரத்யேகமாக பெற்றோம்.

பத்திரிக்கைகளிலோ, பிற தளங்களிலோ வேறு எதிலும் இப்புகைப்படங்கள் வெளியாகவில்லை. பெற்றுத் தர உதவியவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அளிக்கும் விருந்தை முழுமையாக அளிக்க வேண்டும் அல்லவா?

புகைப்படங்களை பெற்றுவிட்டோம். வெறும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டால் எப்படி? அளிக்கும் விருந்தை முழுமையாக அளிக்க வேண்டும் அல்லவா? எனவே மேற்படி பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக அங்கம் வகித்த திரு.சுகி சிவத்தை தொடர்பு கொண்டு, சூப்பர் ஸ்டார் பற்றி சில கருத்துக்களை கேட்டு அதை வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்றெண்ணி அவரை தொடர்புகொண்டோம். ஓரிரு நாள் கழித்து அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

மிக மிக இயல்பான் ஒரு மனிதர் திரு. சுகி சிவம்.  நறுக்கு தெறித்தார்ப் போல அதே சமயம் கேட்பதற்கு இனிமையாக பேசுவது ஒரு கலை. அதை இவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

நம்மையும் நமது தளத்தையும் அறிமுகம் செய்துகொண்டோம். அதற்க்கு பிறகு பேசத் துவங்கினார் திரு.சுகி சிவம்.  நாம் பேசியதை தொகுத்து தருகிறேன்.

“அகங்காரமும், மன இறுக்கமும் உடையவர்கள் சிரிக்கமாட்டார்கள்” - சுகி சிவம்

“ரஜினி அவர்களுடன் அதிகம் பழக்கமில்லை. ரஜினி அவர்களிடம் நான் இரண்டு அல்லது மூன்று முறை பேசியிருக்கிறேன். நான் பங்கு பெற்று பேசும் நிகழ்ச்சிகளில்/ விழாக்களில் எதிலாவது அவர் கலந்துகொண்டால், நிகழ்ச்சி முடிந்த   பின்னர் எனக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவிப்பார்.

கம்பன் விழாவின் பட்டி மன்றத்திற்கு அவர் வருவது எனக்கு முன்கூட்டியே தெரியாது. சர்ப்ரைசாகத் தான் அவர் அந்த விழாவிற்கு வந்தார்.

மிகவும் எளிமையாக நடந்துகொண்டார். பட்டி மன்றம் நடை பெற்ற நான்கரை மணி நேரமும் (4.5 hrs) முழுக்க அமர்ந்து ரசித்தார். பேச்சாளர்களின் வாதங்களை ஆர்வமுடன் ரசித்து கேட்டார். அவர் இருக்கும் உயரத்திற்கு அவரின் எளிமை மிகப் பெரிய விஷயம். அகங்காரமும், மன இறுக்கமும் உடையவர்கள் சிரிக்கமாட்டார்கள். ரஜினி அகமும் முகமும் மலர்ந்து சிரித்தபடியே அவர் அந்த நிகழ்ச்சியை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு நம் நிகழ்ச்சிக்கு வந்த இத்துணை  பெரிய மனிதரை கௌரவிப்பது என் கடமையல்லவா? ஆகையால் தான் பட்டிமன்றத்தில்   “நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இங்கு வந்து ரசிப்பது பெருமையாக இருக்கிறது” என்று கூறினேன்.

தனது ஆத்மாவை தேடி அவர் மேற்க்கொள்ளும் பயணம் தான் அவரது இமயமலை மற்றும் பாபாஜி குகையை நோக்கிய அவரது பயணங்கள்.

திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் ரஜினி போன்றவர்களிடம் இருக்கும் இந்த ஆன்மீக, இலக்கிய ஈடுபாடு என்பது மிகவும் பாராட்டத்தக்க போற்றத்தக்க விஷயம்.” என்று முடித்துக்கொண்டார் திரு.சுகி சிவம்.

ரஜினியை பற்றி உயர்த்தி பேசவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லாத திரு.சுகி சிவம் போன்றவர்களின் கருத்து இது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

 

 






 
0 Comment(s)Views: 925

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information