சென்னையைக் கலக்கும் திருச்சி ரசிகர் மன்ற போஸ்டர்கள்!
(Sunday, 15th November 2009)
சென்னையின் முக்கிய இடங்களில் கண்ணில் படும் ஒரு போஸ்டர் சட்டென பார்வையாளர்களை ஈர்க்கிறது...
அது திருச்சி நகர ஸ்ரீ ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் அச்சடித்துள்ள அழகான போஸ்டர்கள்... அதில் வழக்கம்போல ரஜினியை தமிழத்தின் முதல்வரே என்றெல்லாம் விளிக்காமல், அடக்கமாக 'மாயனே நேயனே மாசில்லா தூயனே...' என வாசகங்களை அமைத்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் (எக்ஸ்பிரஸ் அவென்யூ இப்போது) முழுக்க, அத்தனை சுலபத்தில் யாரும் கிழிக்க முடியாத உயரத்தில் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
தலைவர் வசிக்கும் போயஸ் கார்டன் மற்றும் ராதா கிருஷ்ணன் சாலை பகுதியிலும் இந்த போஸ்டர்கள் கலக்குகின்றன.
குறிப்பாக போஸ்டர்களின் தலைப்பு பகுதியில் 'தன்னிறைவான தமிழகம்... தன்னிகரில்லா பாரதம்' என்ற, பலரையும் இழுத்துப் பிடித்து நிறுத்திப் பார்க்க வைக்கிறது. தலைவர் ரசிகர்களின் வழி எப்போதும் தனிவழிதான் என்பதை நிரூபிக்கும் போஸ்டர் இது.
கலக்குங்க நண்பர்களே!
தலைவரின் இந்த 60 வது பிறந்த தினத்தை ஒரு திருவிழாவாகவே கொண்டாட திருச்சி மன்றம் முடிவு செய்துள்ளது.. இது குறித்த செய்திகள் அவ்வப்போது இங்கு பிரசுரிக்கப்படும்.
-ஷங்கர்
நன்றி: ரஞ்சித், திருச்சி நகர தலைமை மன்றம்.
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech