ஆந்திர வெள்ள நிவாரண நிதி திரட்ட தெலுங்கு திரையுலகம் நேற்று இரவு (நவம்பர் 7, சனி கிழமை) நடத்திய நட்சத்திரக் கலைவிழாவில் தலைவர் பங்கேற்றார்.
கருப்பு ஜீன், பளீர் வெள்ளை சட்டையில், பலத்த கரவொலிகளுக்கிடையே தலைவர் அரங்குக்குள் நுழைந்த உடன், நிகழ்ச்சி கலை கட்ட துவங்கியது..
முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்த தலைவர் ஆந்திர மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு தனது பங்களிப்பாக ஒரு தொகையை நிகழ்ச்சி துவங்கும் முன்னரே வழங்கி தனது தனித்துவத்தை மீண்டும் நிலை நாட்டினர் தலைவர்.
தலைவர் உரை :
பலத்த கரகோசத்துடன் மேடையேறிய தலைவர் "அனைவருக்கும் வணக்கம்..மெட்ராஸ்-இல் இருந்த என்னிடம் தாசரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு.. ஆந்திராவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது.. தெலுங்கு மக்கள் மீது தனி பாசம் உங்களுக்கு உண்டு என்பது எனக்கு தெரியும்..நீங்கள் கண்டிப்பாக இந்த கலை நிகழ்ச்சிக்கு வந்து ஒரு 10 நிமிடமாவது இருக்க வேண்டும்.. என்று சொல்லி விட்டு.. எனது பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் தொலைபேசியை துண்டித்து விட்டார்..
நான் இதோ வந்து விட்டேன். ஆந்திர மக்களாகிய உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன்.. என்றும் உறுதுணையாக் இருப்பேன்” என்றார் தலைவர்.
தலைவர் பேச்சு வீடியோ
புகை பட ஆல்பம்
- ஷங்கர் & விஷ்வா
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech