எந்திரனுக்காக சூப்பர் ஸ்டார் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் (லோனாவாலா) முகாமிட்டிருப்பது உங்கள் அனைவருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும்.
அவர் கடந்த 10 நாட்களாக அங்கு தான் இருக்கிறார்
என்பது தெரியுமா? (இடையே ஓரிரு முறை கிங்க்பிஷர் ஏர்வேஸில் சென்னை வந்து சென்றதாக தெரிகிறது).
கடந்த 21 ஆம் தேதி மும்பை - புனே ஹைவேயில் வாகனங்களில் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. HARRIS BRIDGE ரெயில் பாலத்தின் அருகே எந்திரன் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஆக்க்ஷன் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார்.
சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங்கை நீங்கள் செல்லும் வழியில் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? உடனே வண்டியை ஓரங்கட்டிவிடமாட்டீர்களா? பூனே மக்கள் மட்டும் என்ன இந்த காந்தத்திடமிருந்து தப்பிவிடுவார்களா என்ன? வண்டியில் சென்ற அனைவரும் அப்படி அப்படியே தங்கள் வண்டிகளை ஓரங்கட்டிவிட்டு வேடிக்கை பார்க்க துவங்க, இங்கேயும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதில் விஷேஷம் என்னவென்றால்,ஷூட்டிங் காலை 8 மணிக்கு தான் துவங்குவதாக இருந்தது. ஆனால் 7 மணியிலிருந்தே மக்கள் ஆர்வமுடன் குவியத் துவங்கிவிட்டனர். (இது மராட்டியி மாநிலம் புனே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்).
நேரம் செல்ல செல்ல போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட, போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீசாரை உடனடியாக அனுப்பினர். அவர்கள் விரைந்து வந்து, போக்குவரத்தை சரி செய்து, மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர். (ஷங்கர் சார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மட்டுமில்லை நீங்க நம்ம ALL OVER INDIA வுல, ஏன் இந்த உலகத்துல, எந்த மூளைக்கு தலைவரை வெச்சு ஷூட்டிங் எடுக்க போனாலும், அங்கே இது மாதிரி நடக்கும்… அது தான் ரஜினி!!)
மதியி உணவு இடைவேளையில், ஷூட்டிங்கை காண வந்த கூட்டத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் கையசைத்தபோது குழுமியிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். மாலை 4 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்து குழுவினர் புறப்பட்டு சென்றனர்.
கீழே போட்டோவை பாருங்க. நம்ம ஊர் மாதிரி அங்கே கூடியிருக்குற கூட்டத்தை பாருங்க… சும்மா அதிருதில்ல…
சரி.. படபிடிப்பை பார்த்தவர்கள் கூறும் கமெண்ட் என்ன? “தலைவர் மிகவும் ரிஸ்க் எடுத்து, நடிக்கிறார். அவரது தொழில் பக்தியும் அர்ப்பணிப்பு உணர்வும் பிரமிக்க வைக்கிறது.” (அதனால தானேங்க அவர் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்குறார்!!)
சரி, இப்படி வெளிப்புறப் படபிடிப்பில் அவரை வைத்து படமெடுப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சங்கடங்களை பற்றி தலைவர் என்ன நினைக்கிறார்?
(கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றிலிருந்து சில பதில்களை தருகிறேன். உங்கள் சந்தேகத்திற்கு இது ஓரளவு விடையளிக்கும் என் நம்பலாம்.)
தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் நீங்க… அதனாலயே உங்களுக்கு பிரைவஸி கிடையாது. நினைச்ச மாதிரி வெளியே நடமாட முடியாது. இது உங்களுக்குக் கஷ்டமா இருக்குமா?
“கஷ்டம்தான். அதுவும் என்னை மாதிரி ஒருத்தனுக்கு ரொம்பக் கஷ்டம்.இந்த உலகத்தில் எதுவும் ஃப்ரீ கிடையாது கண்ணா. ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்கு!அதைக் குடுத்தே ஆகணும். எனக்கு பயம், பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை. இது அன்புக்குக் கொடுக்கிற விலை!”
ரஜினி சார், நீங்க ரொம்ப அபூர்வமான பொருளா ஆகிட்டீங்க… அதுவும் மீடியா முன் ரஜினி வர்றது அபூர்வத்திலும் அபூர்வமா ஆகிடுச்சு..என்றதுமே சிரிக்கிறார்.
“”இது எப்படி ஆகிப் போச்சுன்னா… முதல்ல ஷட்டிங் நடத்த வெளியே போகலாம்னா, இல்ல சார்… கூட்டம் தாக்குப் பிடிக்க முடியாது. ஸ்டுடியோவிலேயே செட் போட்டு எடுத்திரலாம்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம் மைசூர், பெங்களூர்னு ஷ¨ட்டிங் போக வேண்டியதாச்சு. இது கொஞ்சங்கொஞ்சமா வளர்ந்து, ஒரு கட்டத்தில் சும்மா நான் வெளியே வர்றதே முடியாதுன்னு ஆகிப்போச்சு. ஆனா, எப்பவும் நான் அதே ஆளுதான்!”
புனேவில் எந்திரன் படப்பிடிப்பு பற்றி செய்தி வெளியிட்டுள்ள Punemirror என்ற என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
Rajini shoots, traffic stops
When I will arrive, or how I will arrive, nobody will know, but I will arrive when I ought to,” declared Rajinikanth in Muthu. The Pune public obviously didn’t figure in the his mind at that point.
It was peak hour on Monday morning and traffic near Harris Bridge was bad. Well, peak hour usually means bad traffic, but this was worse. It wasn’t ordinary traffic either. But then, to most people causing the traffic, it wasn’t an ordinary day.
Hundreds of bystanders had gathered to get a glimpse of Rajinikanth. The superstar of Tamil movies was in town for a shooting that was supposed to begin on the subway at Harris Bridge around 8 am, but a large number of onlookers had gathered at the bridge since 7 am.
The traffic situation worsened with motorists halting on the bridge and joining the crowd to have a glimpse of the film stars, spilling on to the Mumbai-Pune highway.
After receiving a tip off about the problem, traffic police sent reinforcements to the spot to streamline the traffic flow. The policemen finally managed to make way for vehicles and the traffic that had come to a standstill for over an hour began moving at a snail’s pace.
The crowd cheered as Rajinikanth waved his hands at the crowd during the lunch break around 2 pm. Thankfully, there was no problem during peak evening hours as the shooting was over by 4 pm.
Source: Punemirror
|