Related Articles
சங்கத் தமிழ் பேரவையின் முதல்வர் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி
சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் நிச்சயதார்த்தம்! அசத்தல் படங்கள் !!
கலையுலக விழா நேரடி ரிப்போர்ட்
ரஜினி கலந்துகொண்ட... ஒய்.ஜி.மகேந்திராவின் பிறந்த நாள் ... கோவா ... ஆயிரத்தில் ஒருவன் சிறப்பு காட்சி
ஜக்குபாய் பிரஸ் மீட் ... திரைத்துறையினர் மனு ... ஜக்குபாய் பிரீமியர் ... சூப்பர் ஸ்டார் ரஜினி
புனேவிலும் சூப்பர் ஸ்டாரை காண அலைமோதும் கூட்டம் - எந்திரன் ஷூட்டிங்
சூப்பர் ஸ்டார் திறந்து வைத்த ஓட்டல்; வெளியே நிலவிய பரபரப்பான சூழ்நிலை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது
சிறந்த நடிகருக்கான விருது சிவாஜி – தி பாஸ் படத்துக்காக தலைவர் ரஜினிக்கு விருது
ஆந்திர வெள்ள நிவாரண நட்சத்திர விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் ... தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!
(Wednesday, 24th February 2010)

இந்தியன் எக்ஸ்பிரஸ் ... இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

வட இந்தியாவில் மிகப் பெரிய மீடியா சக்தியான இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஆண்டுதோறும் ‘Most Powerful Indians of the Year”‘ என்று 100 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுவருகிறது. (இங்கு வெளியாவது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’. இரண்டும் வேறு வேறு.)

2010 ஆம் ஆண்டுக்கான ‘Most Powerful Indians of the Year’ பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. நாமெல்லாம் பெருமைகொள்ளும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இந்தப் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது.

அகில இந்தியா அளவில் பிரபலமாக உள்ள - அரசியலின் அதிகார மையப்புள்ளிகள், மத்திய மாநில அமைச்சர்கள, பிராந்திய அரசியலில் மிகப்பெரும் சக்தியாக விளங்குபவர்கள், பெரும் தொழிலதிபர்கள், மீடியா முதலாளிகள், பத்திரிகை அதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள், ஆன்மீக தலைவர்கள், குருக்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டாருக்கும் இடம் கிடைத்திருக்கிறதென்றால் சும்மாவா?

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் எந்த காரணத்துக்காக இடம்பெற்றிருக்கிறார்கள் மற்றும் அவர்களின் அடுத்த நிலை என்ன ஆகியவற்றையெல்லாம் அலசி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் காணும் இந்த 100 பேர் பட்டியல், இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் தனி தனி முகவரியில் கிடைத்தது. அவற்றையெல்லாம் ஒவ்வொரு URL க்கும் சென்று தனித் தனியாக இந்த பட்டியலை பெற்றோம். பிறகு அதை ஒரே படத்தில் கொண்டுவந்தோம்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர்: அம்பானி சகோதரர்கள், இன்போசிஸ் நந்தன் நீல்கேணி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக் கான், நேர்ந்திர மோடி, விஜய் மல்லையா… போன்ற பல பிரபலங்கள்.  தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, மாறன் சகோதரர்கள், ஹிந்து என்.ராம் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

“வானம் உனக்கு; பூமியும் உனக்கு; வரப்புகளோடு சண்டைகள் எதற்கு?” என்று தலைவர் முத்து படத்துல பாடியதுபோல, நம்மே ரேன்ஜ் எங்கேயோ போய்கிட்டுருக்கு. நம்ம கூட மோதக்கூட தகுதி வேண்டும். அதுகூட இல்லாத சில ஜென்மங்களை பற்றி இங்கே பேசி என்ன பிரயோஜனம். என்ன… நான் சொல்றது சரி தானுங்களே..?

தற்போது அரசியலிலிருந்து சூப்பர் ஸ்டார் முழுக்க விலகியிருக்கும் சூழ்நிலையில் அவர் நடிகர் என்ற அளவில் தான் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அரசியல் சக்தியாக அவர் மாறும் பட்சத்தில் பட்டியலில் நல்லதொரு இடத்தை பிடிப்பார் என்பது உறுதி.

சரி, சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது பற்றி எக்ஸ்பிரஸ் கூறுவது :

ஏன்?
சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது ஏனென்றால், அவரது சமீபத்திய படமான குசேலனின் சுமாரான performance மற்றும் அதன் மீதான விமர்சனம் அவரது ரசிகர் பலத்தை செல்வாக்கை சிறிது கூட அசைக்கவில்லை. வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரையுலகில், கேமிராவுக்கு பின்னே மேக்கப் போட மறுக்கும் ஒரே நடிகர் அவர் தான். பொது விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த வித மேக்கப் இல்லாமல் வருகிஆர் ரஜினி.

Power பன்ச்
தனது செல்வாக்கை அரசியல்  லாபத்துக்காக அவர் பயன்படுத்தியதில்லை. ஆனால் அதே சமயம் வீடியோ பைரசியிளிருந்து நடிகையர் மீடியாவில் தவறாக சித்தரிக்கப்பட்டது வரை அவர் கலந்துகொள்ளும் போராட்டங்களுக்கு உடனடி பலன் கிடைத்துவிடுகிறது. அந்த பிரச்னையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்து என்ன?
இந்தியா திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் எந்திர மனிதனாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய் இதில் இவருக்கு ஜோடி. இவ்வாண்டின் அதிக எதிர்பார்க்கப்படும் படம் இது.

96. RAJNIKANTH, 60
Actor

Why
The superstar of Tamil film industry stays put in our list because his fan following hasn’t shrunk even the tiniest bit even after the rather average box office performance of his last film Kuselan. In an industry obsessed with appearances, he is the only actor who refuses to use make-up when not facing the camera.

Power punch
He hasn’t cashed in on his political quotient. But whenever he takes up an issue, from video piracy to portrayal of film stars in the media, the authorities take notice and act promptly. He is a recluse who no one wants to rub the wrong way.

What next
Enthiran,the most expensive Indian film with him as an android and Aishwarya Rai as his love interest, is an eagerly awaited Tamil film.

http://www.indianexpress.com/news/the-most-powerful-indians-in-2010-no.-91100/575671/0

 

இந்தியா டுடே சக்திமிக்க பிரபலங்கள் 50 பட்டியல் - தொடரும் சூப்பர் ஸ்டாரின் சாதனை!

இந்தியா டுடே இதழ் வருடந்தோறும் இந்தியா அளவில் சக்திமிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பெரும் தொழிலதிபர்களும், வர்த்தக ஜாம்பவான்களும், செல்வாக்கு படைத்த நட்சத்திரங்களும் இடம் பெரும் இந்த பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்று சாதனை படைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இடையில் ஏற்பட்ட சில கசப்பான சூழ்நிலைகளை அடுத்து அவரது செல்வாக்கு சரிந்தது என்று கூறிய ஆரூடத்தை எல்லாம் ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிவிட்டு இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

Category 1

சிகரத்தில் குடியிருக்கும் ஜாம்பவான்கள் -  50 (இது தனி பட்டியல்)

சென்றமுறை பிடித்த அதே 28 ஆம் இடத்தை இம்முறையும் பிடித்திருக்கிறார் நம் தலைவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை தவிர இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஏ.ஆர். ரஹ்மான்,

அடுத்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள திரை நட்சத்திரங்களில் விளம்பரங்களில் நடிக்காதாவர் நமது தலைவர் மட்டுமே.

அடுத்து இன்னொரு முக்கிய விஷயம்: சென்னை நகரை விட்டு பொது  விஷயங்களுக்கு தலைவர் மிக மிக அரிதாகாவே வெளியே வந்திருக்கிறார். இது வரை தனது படங்களை புரோமோட் செய்ய சுற்றுப்பயனமோ அல்லது ரசிகர்களில் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ தலைவர் ரஜினி வந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன், ஊடகங்கள் மிகப் பெரிய சக்தியாகிவிட்ட இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட தலை காட்டாத ஒரே நடிகர் ரஜினி அவர்கள் மட்டும் தான்.

பட்டியலில் இடம் பிடித்துள்ள அனைத்து பிரபலங்களை பற்றிய விபரங்கள்: (கீழ் கண்ட முழு பட்டியல் இடம்பெற்றுள்ள பக்கத்தில் அவர்கள் கொடுத்துள்ள SUB-TITLE ஐ கவனியுங்கள்.)

Category 2

அரசியல் அதிகாரம் மிக்க 10 பேர் (இது தனி பட்டியல்).

அரசியலை பொறுத்தவரை அகில இந்தியா அளவில் இடம்பெற்றுள்ளவர்கள்: (1) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (2) காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி (3) பிரதமர் மன்மோகன் சிங் (4) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி (5) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் (6) மத்திய அமைச்சர் சரத் பவார்  (7) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (8) அரசியல் ஆலோசகர் அஹமது பட்டேல் (9) உ.பி. முதல்வர் மாயாவதி (10) பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்

Category 3

தமிழக பலவான்கள் - 10 பேர்  (இது தனி பட்டியல்)

(1) டி.வி.எஸ். அதிபர் வேணு சீனிவாசன் (2) இந்தியா சிமென்ட்ஸின் அதிபர் மற்றும் பி.சி.சி.ஐ. தலைவர் என்.ஸ்ரீனிவாசன் (3) ஏ.சக்திவேல் (4) அப்பல்லோ ப்ரீத்தா ரெட்டி (5) உதயநிதி ஸ்டாலின் & துரை தயாநிதி அழகிரி (6) கலைஞானி கமல் ஹாசன் (7) அடையார் ஆனந்த பவன் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா (8) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (9) நக்கீரன் கோபால் (10) எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்

நடிக்க மட்டும் இல்லீங்க... அரசியல் முடிச்சுக்களையும் அவிழ்க்க தெரியும் எனக்கு!

Category 4

தமிழகத்தில் அதிகாரமுள்ள ஐவர் - 5  (இது தனி பட்டியல்)

1) முதல்வர் மு.கருணாநிதி 2) துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3) எதிர்கட்சி தலைவர் செல்வி.ஜெயலலிதா 4) திருமாவளவன் 5) காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

முக்கிய குறிப்புகள் :

*2011 இல் தாம் தான் தமிழக முதல்வர் என்று கனவுடன் அரசியல் கட்சி துவக்கி இன்று டெப்பாசிட் பெற்றாலே போதும் என்ற நிலையில் இருக்கும், நடிகர் கம் அரசியல் தலைவர் பட்டியலில் எங்கும் இல்லை.

*தமிழக அரசியலில் ஆளுங்கட்சியை தீர்மானிப்பவர் என்ற மாயையில் இதுவரை உலா வந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

இந்தியா டுடே இதழை வாங்கி படியுங்கள். முழு பட்டியல்களையும் தெரிந்துகொள்ளுங்கள. சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை.






 
0 Comment(s)Views: 854

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information