புதன்கிழமையன்று மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இறுதி மரியாதை அவரது இருப்பிடத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
அன்னாரது பூத உடலுக்கு முதல்வர் கலைஞர் மலர் வளையம் வைத்தார். அதைத் தொடர்ந்து கமல் உள்ளிட்ட திரையுலகினரும் பத்திரிக்கையுலகினரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
சரியாக பத்து ஐம்பது மணிக்கு கருப்புநிற காரில் வந்திறங்கிய ரஜினி, சுஜாதாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது துணைவியாருக்கும் குடும்பத்தினருக்கும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
இரண்டு நிமிஷங்களில் தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு திரும்பிய ரஜினியிடம் சுஜாதா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு நிருபர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதை மறுத்தவாறே சுஜாதாவின் மரணம் தன்னை பெரிய அளவில் பாதித்திருப்பதாக சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.
சுஜாதாவின் மரணத்தை ஒட்டி சென்னையில் மாபெரும் இரங்கல் கூட்டம் ஒன்று நாளை (ஞாயிறு) மாலை 4.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது, ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் நடைபெறும் இரங்கல் கூட்டத்திற்கு சினிமாவுலகினரும் பத்திரிக்கையுலகினரும் கலந்து கொண்டு சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
|