8 November 2004
வீரப்பனை அழித்ததன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா , ' என நடிகர் ரஜினிகாந்த பாராட்டினார் .
சமைக்கத் தெரிந்தவரிடம் பெண்டாட்டியாக போகக் கூடாது . வேலை தெரிந் தவரிடம் வேலை கேட்டு செல்லக் கூடாது . பேசத் தெரிந்தவர்கள் மத்தியில் அதிகமாக பேசக் கூடாது என்று சொல்வார்கள் . இருந்தாலும் , இந்த மேடையில் நான் கொஞ்சம் பேச வேண்டும் . 20 , 25 நாட்களுக்கு முன்னால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்னிடம் வந்து முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் . அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை அழைத்தார் . ஆனால் , அதற்கு நான் வரமுடியாது என்றும் , முதல்வரைப் பாராட்டி நான் ஏற்கனவே மீடியா மூலம் நன்றி தெரிவித்து விட்டேன் என்றும் , நான் வராவிட்டால் முதல்வர் அதை தவறாக நினைக்க மாட்டார்கள் என்றும் கூறி அவரை அனுப்பி விட்டேன் .
ஆனால் , இரவு நான் யோசித்துப் பார்த்தேன் . சினிமா உலகிற்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் நம் முதல்வர் . அவர் முன்னால் நின்று பாராட்டி பேசவில்லை என்றால் நான் சி னிமாக்காரளே அல்ல . என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் . சரி என்றால் சரி , தப்புள்ளா தப்பு தான் . திரைப்பட உலகத்தினர் ' விசிடி ' யை எதிர்த்து ஊர்வலம் போக வேண்டும் என்றும் , அதில் என்ளை கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டனர் . ஆனால் , அதற்கு நாள் ஊர்வலம் நடத்தினால் என்ன பிரயோஜனம் என்று வாய்கூசாமல் கேட்டேன் . இதுவரை ஊர்வலம் சென்றவர்களெல்லாம் என்ன சாதித்து விட்டார்கள் ? என்றும் கேட்டேன் . ஊர்வலம் நடத்த திட்டமிட்ட அன்று நாள் வெளி மாநிலத்தில் இருந்தேன் . அதனால் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது . ஊர்வலம் நடந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து நாள் பேப்பரில் பார்த்தேன் . திரையுலகத்தினர் என்னென்ள கோரிக்கைகளை வைத்தார்களோ அவற்றையெல்லாம் , கேட்டதை எல்லாம் முதல்வர் செய்து கொடுத்துள்ளார் . அதற்காக அவருக்கு முதல்வரை பார்த்து ) ஹேட்ஸ் ஆப் ' என்றார் .
இது உண்மையான பாராட்டு விழா , எத்தளையோ மேடைக்கு சென்றிருக்கிறேன் . இது சும்மா ஷோ ' இல்ல , ' எக்ஸலன்ட் ' ரொம்ப சந்தோஷமா இருக்கு . ஜெ . க்கு என் மனமார்ந்த நன்றி . இந்த எல்லாத்தையும் விட வீரப்பளை பற்றி எனக்கு நல்லா தெரியும் . வீரப்பளை அழித்தது சாதாரண விஷயமல்ல . அது ஒரு சரித்திரம் . போகப் போகத்தாள் சரித்திரத்தின் அருமை தெரியும் , அந்த வன தேவதைக்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளார் நம் முதல்வர் . இந்தியாவில் தமிழர் பெருமையை அவர் காப்பாற்றி இருக்கீங்க , உலக அளவிலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் . நான் அவரை முதன்முதலாக சந்தித்ததை நினைவு கூற விரும்புகிறேன் . 1973ம் ஆண்டு , நாள் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருந்த நேரம் , அப்போது , அந்த பில்டிங்கில் மாடியில் ரிக்கார்டிங் தியேட்டர் இருந்தது , அந்த தியேட்டருக்கு அவங்க காரில் வந்தாங்க . காரிலிருந்து இறங்கியதும் நேரா மாடிக்கு போயிட்டாங்க . அவங்க அள்ளைக்கு ப்ளாக் கலர்ல சாரியும் , ப்ளு கலர் பார்டரும் , ப்ளூ கலர் ஜாக்கெட்டும் போட்டிருந்தாங்க . அன்னைக்கு பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை விட பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் நூறு சதவீதம் கெட்ட பசங்க . எப்ப அவங்க கீழே வருவா ங்கன்னு நாங்க காத்திட்டிருந்தோம் . மாலை நாலரை மணிக்கு அலங்க கீழே வந்தாங்க . அப்ப எங்க கூட இருந்த ரவீந்திரநாத் ரெட்டி என்பவரைப் பார்த்து அவங்க ' ஹலோ ' சொல்லிட்டு காரில் ஏறி போயிட்டாங்க . எங்ககிட்ட எல்லாம் பேசவே இல்ல . அதற்கப்புறம் இரண்டு வருசத்துக்கு ரவீந்திரநாத் ரெட்டி அவங்க ' ஹலோ ' சொள்ளதையே சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுகிட்டு இருந்தாள் . அவங்க வந்து நடந்து போனது , ' ஹலோ ' சொள்ளதையெல்லாம் நாள் இமிடேட் பண்ணி காட்டிகிட்டு இருந்தேன் , சி னிமாவிலே சேர்ந்த பிறகு ஒருநாள் இயக்குளர் பாலச்சந்தர்கிட்ட அதேபோல் இமிடேட் செய்து காண்பித்தேன் . அதைப் பார்த்து அவர் மற்றொருவரைப் போல் இமிடேட் செய்வது சரியல்ல என்று கூறினார் . அன்றிலிருந்து நாள் மற்றொருவரைப் போல் இமிடேட் செய்வதை நிறுத்தி விட்டேன் .
முதல்வரிடம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி , காந்த சக்தி உள்ளது . அன்றிலிருந்து இன்று வரை அந்த சக்தி அப்படியே அவங்ககிட்ட இருக்கு. கொஞ்சம் கூட மாறல .
அஷ்டலட்சுமி பற்றி ஒரு கதை சொல்றேன் அஷ்டலட்சுமியை நினைத்து ஒரு பக்தர் தவமிருந்தார் . அவரது தலத்தை பார்த்து அஷ்டலட்சுமி அவர் முன் தோன்றி எங்களில் யார் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார் . அதற்கு அந்த பக்தர் குழப்பமடைந்தார். நேராக தனது குருவிடம் சென்று அஷ்டலட்சுமி இவ்வாறு கேட்கிறாரே நாள் எந்த லட்சுமியை கேட்க வேண்டும் என்று தன் குழப்பத்தை தெரிவித்தார் . அதற்கு அவரது குரு நீ தைரியலட்சுமியை கேள் என்று கூறினார் . இதனால் தெளிவடைந்த அந்த பக்தர் நேராக அஷ்டலட்சுமியிடம் சென்று தைரியலட்சுமி எனக்கு தேவை என்றார் . தைரியலட்சுமியை பக்தரிடம் விட்டுவிட்டு மற்ற லட்சுமிகள் அங்கிருந்து சென்றனர் . ஆனால் , சிறிது நேரத்தில் வீரலட்சுமி திரும்பி வந்து தைரிய லட்சுமி இல்லாமல் நாள் எப்படி தனியே இருப்பது என்று கேட்டு பக்தரிடம் இருந்து விட்டாள் . இதையடுத்து து விட்டனர் . அதேபோல் உங்களிடம் அனைத்து லட்சுமிகளும் இப்போது உள்ளனர் . நீங்கள் இப்போது தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டாங்க . உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இவ்வாறு ரஜினி பேசினார் .
இறுதியில் பேசிய ஜெயலலிதா, ''என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறீர்கள். திரையுலகம் என் தாய் வீடு. நீங்களெல்லாம் என் உறவினர்கள். இந்த பிரமாண்ட விழா எடுத்த உங்களை நான் மறக்க மாட்டேன்'' என்றார்.
|