10 Nov 2004
நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தீபாவளி இனாமும் அவர் வழங்கி வந்தார்.
இனாம் வாங்க வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதால் இந்த வருடம் முதல் தீபாவளி இனாம் பணமாக கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மாறாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 52 ஆதர வற்ற இல்லங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டன.
அந்த இல்லங்களில் உள்ள 4000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது.
மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள், சிறுவர் இல்லம், ஆழ்வார் பேட்டை `தி ஆஸ்ரம்', கபாலீஸ்வரர் கோவில் தேவஸ்தானம், கருணை இல்லம், தக்கர்பாபு, திருவான்மிïர் காக்கும் கரங்கள், பாலபவன் ஆஸ்ரமம், அன்பு இல்லம், நல்மணம், பாலவிகார், கில்டு ஆப் சர்வீஸ், டான்பாஸ்கோ அன்பு இல்லம், வள்ளுவர் குருகுலம், ஆனந்த் ஆசிரமம், சேவாமந்திர் உள்பட 52 ஆதரவற்ற இல்ல குழந்தைகளும், ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து இருந்தனர்.
அவர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பொட்டலம் பொட்டலமாக மண்டபத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ரஜினிகாந்த் சார்பில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா இந்த பரிசு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.
தீபாவளி பட்டாசுகள், இனிப்பு, காரவகைகள், உடை கள் போன்றவைகள் வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங் கப்பட்டது.
மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடர்பாளர் நிகில், ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
|