நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து அறிவித்திருப்பது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார்.
நடிகர் தனுஷ், கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களின் திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் பிரிந்து வாழ் முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இருவருமே இதுகுறித்து தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். தனுஷ் ஷேர் செய்துள்ள பதிவில், 18 ஆண்டு காலமாக நல்ல நண்பர்களாக , கணவன் மனைவியாக, பெற்றோராக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால் இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்துகொண்டு இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களுடைய தனிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதே பதிவை தான் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன், உங்களின் அன்பும் புரிதலும்தான் தேவை என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஷேர் செய்துள்ள போஸ்டில் இருவரின் பெயர்களும் பை லைனும் மட்டுமே மாறியுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் இருவரின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யாவும் விவகாரத்து அறிவித்துள்ளது தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் அவர் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய சகோதரி சௌந்தர்யா
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இளைய சகோதரி சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சுட்டுரைப் பக்கத்தில் சிறிய வயதில் ஐஸ்வர்யா மற்றும் தனது அப்பா ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா புதிய தகவலை தெரிவித்துள்ளார்
|