சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.
இந்நிலையில் படம் பற்றி ஹூட் ஆப்பில் பேசியிருக்கிறார் ரஜினி. அவர் கூறியதாவது,
பேட்ட படம் முடிந்திருந்தது. படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதற்கு முன்பு காலா, கபாலி என்று வயசான கேரக்டர் பண்ணினேன். பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் வந்து என்னை ரொம்ப ஸ்டைலிஷா, அழகா காண்பிச்சிருந்தாங்க.
பேட்ட ரிலீஸ் அன்றே சிவா டைரக்ட் பண்ண, அஜித் ஆக்ட் பண்ண விஸ்வாசம் படமும் ரிலீஸ். இரண்டு படமும் சூப்பர் ஹிட். விஸ்வாசம் இவ்வளவு பெரிய ஹிட்டாகியிருக்கே அதை பார்க்கணும்னு அந்த தயாரிப்பாளரிடம் சொல்லி படம் பார்த்தேன். படம் நல்லா இருந்தது.
இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டாவதற்கு இந்த படத்தில் என்ன இருக்குனு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தபோது படம் போகப் போக, கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி, கிளைமாக்ஸ் அருமையாக இருந்தது. சூப்பர் படம். எனக்கு தெரியாமலேயே கை தட்டினேன். சிவாவை மீட் பண்ணனும்னு சொன்னேன்.
சிவா சார் என் வீட்டிற்கு வந்தாங்க. அவ்வளவு பெரிய உடம்பை வச்சுக்கிட்டு ஒரு குழந்தை மாதிரி பேசுவார். சார், எனக்கு ஏதாச்சும் கதை வச்சிருக்கீங்களா, படம் பண்ணலாமா சார்னு கேட்டேன். உங்களுக்கு ஹிட் கொடுப்பது ஈஸி சார்னு சிவா சொன்னார். அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் போன்று யாருமே என்னிடம் சொன்னது இல்லை.
உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரொம்ப ஈஸினு எப்படி சார் நம்பிக்கையாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அது இரண்டு விஷயம் சார். நல்ல கதைல நீங்க இருக்கணும் சார். இரண்டாவது, நீங்க வில்லேஜ் கேரக்டர் பண்ணி ரொம்ப நாளாச்சு சார்னு சிவா சொன்னார்.
வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை. இந்த இரண்டும் இருந்தால் மட்டும் போதும் சார் என்றார். அவர் சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல கதை கொண்டாங்கனு சொன்னேன். 12 நாட்களில் வந்து கதை சொன்னார். அவர் கதையை சொல்ல சொல்ல கிளைமாக்ஸ் வரும்போது என் கண்ணில் தண்ணி வந்துடுச்சு. அவர் கையை பிடிச்சு இதே மாதிரி படம் எடுக்கணும் சார்னு சொன்னேன்.
இந்த படம் உங்க ரசிகர்களுக்கு மட்டும் இல்லை பப்ளிக், லேடீஸ், எல்லோரும் கூட்டம், கூட்டமா வந்து இந்த படத்தை பார்ப்பாங்க. அந்த மாதிரி இந்த படம் எடுப்பேன் சார்னு சொன்னாங்க. அதே மாதிரி சொல்லி அடிச்சிருக்கார். மாபெரும் வெற்றி. சிவா அன்ட் டீமுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். அண்ணாத்த என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றார்.
|