சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, வேல ராமமூர்த்தி, ஜெகபதிபாபு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தங்கைக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்னே நிற்கும் அண்ணனாக சூரக்கோட்டை ஊராட்சி தலைவர் காளையனாக அதிரடி காட்டி உள்ளார் ரஜினி. சூரக்கோட்டை முதல் கோல்கட்டா வரை கதை பயணிக்கும்படி அமைந்துள்ளது.
கிராமத்து கதைக்களம், அண்ணன் - தங்கை பாசம் என பக்கா கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகி உள்ளதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலர் வெளியான உடனே ரசிகர்கள் அதிகம் கொண்டாடினர். டுவிட்டரில் டாப் லெவலில் டிரெண்ட் ஆனது. அதேசமயம் விஸ்வாசம் படத்தின் பல காட்சிகள் இந்த படத்தில் பிரதிபலிப்பதாக விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு நிச்சயம் ரசிகர்களும் சரவெடி, அதிரடி தான்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இப்படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இப்படம் அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த டிரைலரில் உள்ள சில வசனங்களை தற்போது பார்ப்போம்:
’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’
’கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க’
’வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை’
’நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும்’
’கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன், எஙக ஊரு மதுர வீரன் சாமிக்கு உன்னை நேர்ந்து விட்டுட்டேன்’
|