நெகட்டிவ் விமர்சனத்தை அடித்து நொறுக்கிய ‘அண்ணாத்த’ திரைப்படம் இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளிலும் அந்த படம் ரூபாய் 20 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டே நாட்களில் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரூபாய் 55 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘அண்ணாத்த’ திரைப்படம் முதல் காட்சி முடிந்த உடனே நெகடிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. ‘அண்ணாத்த’ படத்தை ஓட விடக்கூடாது என்பதற்காகவே ரஜினிக்கு பிடிக்காதவர்கள் பணம் வாங்கிக்கொண்டு யூட்யூப் இணைய தளங்களிலும் ட்விட்டரிலும் ‘அண்ணாத்த’ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை அளித்தனர்.
ஆனால் விமர்சனங்களையும் தாண்டி ‘அண்ணாத்த’ திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 35 கோடியும், இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சென்டிமெண்ட் மற்றும் அண்ணன் தங்கை பாசம் குறித்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்த படம் பார்த்தவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். வேண்டும் என்றே ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் அளித்தவர்களுக்கு இரண்டு நாள் வசூல் கரியை பூசி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|