தன்னோட அடையாளம் எது, தன்னோட பாதை எது, தன்னோட தலைவன் யாரு, தான் பின்பற்றும் சித்தாந்தம் என்ன, எல்லாத்தையும் வெளிப்படையா twitterலசொல்லிட்டு பதிவுகள் போடுறது ரஜினி ஆதரவாளர்கள் மட்டும் தான். எங்களுக்குள்ள ஆயிரம் சண்டைகள், பிரிவினை, மத, சாதி பாகுபாடுகள்கண்டிப்பா இருக்கு திராவிடத்தை ஆதரிப்பவனும், ஆரியத்தை அரவணைப்பவனும், பெரியாரை போற்றுபவனும், பசும்பொன் ஐயாவை தொழுபவனும் இங்கஇருக்கான்..
ராமனை ஆதரிப்பவனும் இருக்கான் எதிர்ப்பவனும் இருக்கான். அல்லாஹ்வைநேசிப்பவனும், இருக்கான் எதிர்ப்பவனும் இருக்கான். இயேசுவை ஆதரிப்பவனும்எதிர்ப்பவனும் இங்க நிச்சயம் இருக்கான்.
மதமாற்றம் தப்புன்னு ஒருத்தன் சொன்னா அதை தப்புன்னு சொல்ல நீ யாருடான்னுகேக்குறவனும் இங்க இருக்கான்.
ராமர் கோவில் கட்டுனா தப்பில்லைன்னு சொல்லுற இஸ்லாமியனும் இங்கஇருக்கான்.. பாபர் மசூதியை இடிச்சிருக்க தேவையில்லைன்னு வக்காலத்துவாங்குற ஹிந்துவும் இங்க இருக்கான். கடவுள் மறுப்பு பேசுறவனும் இருக்கான்மும்மத இறைகளையும் மூன்று வேலை மும்முரமாக வேண்டுபவனும் இருக்கான். தன் மதம் தான் உயர்ந்தது என்ற கர்வம் உள்ளவனும் இருக்கான். தன் மதத்தைவிட மற்ற மதங்கள் எல்லாம் தாழ்ந்தது என்று அஹங்காரம் கொண்டவனும்இருக்கான். ரஜினியையும் வேறு நடிகர்களையும் சேர்ந்து நேசிப்பவன், ரஜினியை மட்டுமே இறுதிவரை நேசிக்கும் எண்ணம் கொண்டவன், பிற நடிகர்களைஎதிர்ப்பதற்காக ரஜினியை ஆதரித்து கூட்டணி சேர்ந்து கொண்டவனும் இந்தஅட்டவணையில் இருக்கான். இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் நாடககாதலை எதிர்ப்பவன் ஆதரிப்பவன், ஆணவப் படுகொலைகளை ஆதரிப்பவன்எதிர்ப்பவன் என்று எல்லாரும் இங்கே இருக்கான். இப்படி ஒட்டு மொத்தமுரண்பாடா இருக்குற இவங்க எல்லாரும் ஒரு புள்ளியில் மட்டும் தான்இணையுறானுங்க. வேற வார்த்தைகளில் சொல்லனுமுன்னா ஒரு புள்ளிதான்இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்குது. அந்த புள்ளி ரஜினி
வெறுப்பாளர்களும், கொள்கை ரீதியா அரசியல் ரீதியா எதிர்க்கும் அனைவரும்ஏமாற போகும் அந்த ஒரு புள்ளியும் அதே ரஜினி தான்.
சுருக்கமா சொல்லணுமுன்னா நாங்க எல்லாரும் ஒரு மினி இந்தியா. miniature of india
இவ்ளோ முரண்பாடு இருக்கே இவனுங்களை அனாயசமாக பிரித்து விடலாம், வீழ்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டால் ஏமாற போவது நீங்கள் தான்.
எங்களுக்குள்ள அடிச்சிக்குவோம் புடிச்சிக்குவோம் முட்டிக்குவோம்முனகிக்குவோம் தட்டிக்குவோம் தடவிக்குவோம் ஆனா வெளிய இருந்து ஒருத்தன்வந்து எதிர்த்து நின்னா மொத்த ரஜினி ஆதரவாளரின் கைகள் ஒரு சேர ஓங்கும்எதிர்த்தவன் தாடைகள் ஒரு சேர வீங்கும்.. எங்க பலவீனம் தான் எங்க பலமே.
Haters உள்ள வருவதில் வெல்லலாம்.
குட்டையை குழப்புவதில் வெல்லலாம்.
பிரிவினை தூண்டுவதில் வெல்லலாம்.
ஆனா ஒன்னு மட்டும் நடக்கவே நடக்காது...
அது ரஜினியையும் அவரோட ஆதரவாளர்களையும் பிரிப்பது.. ஏன் ரஜினியைஅவரின் ஆதரவாளருக்கு பிடிக்காமல் போக செய்ய முடியாதுன்னு தெரியுமா?
ரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக செய்ய ஒரு காரணம்வேண்டும்
அந்த காரணம் தெரியணுமுன்னா ரஜினியை ஏன் அவங்களுக்கு பிடிச்சிருக்குன்னுதெரியணும் எங்களுக்கே அவரை ஏன் பிடிச்சிருக்குன்னு தெரியாது.
உங்களுக்கு தெரிய விட்டுடுவோமா?
இதெல்லாம் தெரியாம நடுநிலை ids என்று கம்பு சுத்திகிட்டு அதுவும் கம்பை ஒரேஇடத்தில் நிறுத்தி வெச்சி,, அதை சுத்திகிட்டு உங்க அடையாளம், சித்தாந்தம், நீங்க ஆதரிக்கும் கட்சி, கட்சியின் தலைவனை கூட உங்களால் வெளிப்படையாகசொல்ல முடியலைன்னா உங்க பேருக்கு முன்னாடி initial போட்டுக்கறதைநிப்பாட்டுங்கடா.. பின்னாடி initial போட்டுக்கலாமான்னு நக்கல் பேசுனா அதுக்குஎன்னோட பதில் சீட்டு குலுக்கி போட்டுக்கங்க.
நன்றி : யுவராஜா
|