நம் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. மருத்துவர்களையும் கலெக்டர்களையும் எப்போதும் ஒரு உயர்ந்த நிலையில் வைத்து பேசுவார்கள்.
இவரு பெரிய கலக்டரு !!! இவரு சொன்னா நம்ப கேட்கணுமா ? - இந்த மாதிரி வார்த்தைகள் சண்டை போடும் போது சொல்வது சகஜம்...
குழந்தைகள் சாமி கும்பிடும் போது, நல்லா படிச்சி டாக்டர் ஆகணும்ன்னு வேண்டிக்கோ என பெரியவர்கள் சொல்வார்கள்.
அதனால் இவர்கள் சொல்வது எல்லாம் என்ன? டாக்டர் ஆகாவிட்டால் நீ படித்த படிப்பு எல்லாம் வீணாகி விடும் என அர்த்தமாகி விடுமா?
மருத்துவர்களின் / அந்த துறையின் மீதுள்ள மரியாதையின் வெளிப்பாடு. அவ்வளவே !!!
இரண்டு நாட்கள் முன்னர், துக்ளக் விழாவில் ரஜினி பேசிய போது ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுத்தார்.
"பானி கா பானி , தூத் கா தூத்" என்பது போல, பாலையும் தண்ணீரையும் ஒன்றாகாதீர்கள். உண்மையுடன் பொய்யை இணைத்து செய்தி ஆக்காதீர்கள். குறிப்பாக நடுநிலை என கூறிக்கொள்ளும் பத்திரிக்கைகள் செய்தியை திரித்து வெளியிட வேண்டாம் என கூறினார்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு, "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்" என்பது போல, மீண்டும் அதே காரியத்தை செய்கிறார்கள் சில நடுநிலைஊடகங்கள் (நடுநிலை என யாரு சொன்ன? - நாங்களே சொல்லிகிட்டோம் )
பொதுவாகவே அரசியல் நிறைய பேசுபவனை "விஷயம் தெரிஞ்சவன்" என கூறுவார்கள். அதே வார்த்தையை தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. பொத்தாம் பொதுவாக அறிவாளி என்று கூறலாம். அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என விதாண்டா வாதத்திற்கு முட்டு கொடுத்தால் அரசியல் பேசவே லாயக்கற்றவர்கள் என அர்த்தம்.
முரசொலியும் அரசியல் பேசும் பத்திரிகை தான். துக்ளக்கும் அரசியல் பத்திரிக்கை தான். ஆனால் முரசொலியானது முழுக்க முழுக்க திமுக ஆதரவு பத்திரிக்கை என்ற அளவிலேயே சுருங்கி விட்டது.
ஆனால் துக்ளக் அப்படி செயல்படவில்லை என்பதே உண்மை. மதசார்பின்மை என கூறிக்கொண்டு ஹிந்து எதிர்ப்பை திமுக கையாண்டால் அதையும் கண்டிக்கும். ஹிந்து நாடு என்ற குறிக்கோளோடு பாபர் மசூதியை இடித்த பாஜகவையும் அது கண்டிக்கும்.
இதுவே துக்ளக்கை மற்ற பத்திரிக்கையில் இருந்து வேறு படுத்தியும் காட்டியது.
சரி, இது துக்ளக்கை பெருமை படுத்தும் தளம் அல்ல. ரஜினி சொன்னதில் என்ன தவறு என்பதை மட்டுமே கேட்கும் தளம்.
முரசொலி படித்தால் திமுக என்று தானே சொன்னார்? திருடன் என்றா சொன்னார்? எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல நாங்கள் முட்டாள் இல்லை, முட்டாள் இல்லை என எதற்கு இவர்கள் கதறிக்கொண்டு இருக்கிறார்கள்?
நல்லா படிச்சி டாக்டர் ஆகணும்னு சொன்னால், நீ டாக்டர் ஆகா விட்டால் நீ படித்தது எல்லாம் வீணாகி விடும் என அர்த்தமா?
ரஜினி பேசியதற்கு இந்த முரசொலி படிக்கிற திமுகவினர் (முட்டாள் என சொல்லவில்லை) எதிர்வினை ஆற்றுவதே வித்தியாசமாக உள்ள நிலையில், முரசொலி மூல பத்திரத்தை காட்ட வேண்டியவரே பொங்கிக்கொண்டு இருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் !!!
பதவி வேண்டும் எனும் சமயத்தில் வராத சுயமரியாதை, படிப்பவன் திமுக என்று சொன்னால் வருகிறதென்றால் ...?
சரி, அது ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு முன்னாள் என்று வைத்துக்கொள்வோம். சமூகவிரோதிகள் ஊடுருவினார்கள் என ரஜினி கூறிய போது அதை நக்கல் செய்த முரசொலி M.D அவர்கள், அடுத்த ஆறே மாதத்தில் அவரது பட உரிமையை அடித்து பிடித்து வாங்கிய போது உங்கள் சுயமரியாதை எங்கே போனது?
கேவலம் பணத்திற்காக உங்கள் அரசியல் கொள்கையை தியாகம் செய்ய துணிந்து விட்டீர்களா?
1971 இல் பெரியாரை மையப்படுத்தி நடந்த சம்பவம் ஒன்று சோ அவர்களுக்கு வெளிச்சத்தை கொடுத்தது என நடந்த fact ஐ கூறியதற்கு, ஏதோ பெரியாரையே ரஜினி குறை கூறி விட்டதை போல குதிக்கும் முரசொலி வாசகர்கள் (மீண்டும் முட்டாள் என கூறவில்லை), அதே முரசொலியில் பெரியாரை இகழ்ந்து நினைவில்லாமல் போனது ஆச்சர்யம் தான் !!!
ஒன்னு வரலாறை முழுசா தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க, இல்லன்னா கொஞ்சம் அமைதியா எங்க வேலைய பாக்க விடுங்க. இந்த அரை குறையா வரலாறை உங்க இஷ்டத்துக்கு மாத்தி விடுறது, போட்டோஷாப் பண்ண புகைப்படத்தை ட்வீட் பண்ணிட்டு, தெரியாம பண்ணிட்டேன், நான் தன பண்ணேன் என்னோட அட்மின் இல்லைன்னு பெருமையா சமாளிக்கிறது எல்லாம் வேணாம்.
உங்களை அறிவாளியாக நடந்து கொள்ள சொல்லவில்லை, கொஞ்சம் Common Sense உடன் நடந்து கொள்ள சொல்கிறோம்.
உங்களை முதிர்ச்சியோடு நடந்துகொள்ள சொல்லவில்லை, முரசொலித்தனமாக நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். (மன்னிக்கவும் - முட்டாள்தனமாக - எழுத்து பிழை)
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. முரசொலி படிச்சா திமுகக்காரன் என்று சாதாரணமாக சொன்னதற்கே ஓவர் டைம் எடுத்து கதறுகிறீர்களே !!! இன்னும் என் தலைவன் பேச ஆரம்பித்தால் என்ன ஆவீர்கள் என நினைத்து பார்த்தல் பரிதாபமாக இருக்கிறது....
பார்க்க தானே போறீங்க எங்க தலைவர் ஓட ஆட்டத்தை !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|