ரஜினிகாந்த்.. இந்தப் பெயரை எழுதாமல் தமிழக வரலாறை எழுதிடவே முடியாது..
லிங்கா வந்த போது இது தான் ரஜினி எனும் புத்தகத்தின் கடைசிப்பக்கம் என எழுதாத மீடியாக்கள் இல்லை.. பேசாத எதிரிகள் இல்லை.. அடுத்த இரண்டே வருடத்தில் கபாலியாய் ரீ எண்டரி கொடுத்துத் திரை உலகின் ஒரே சக்கரவர்த்தித் தாம் தான் என்பதை நிரூபித்துக்காட்டினார்.
பின் ஜெயலலிதா மரணம்... அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பு, அரசியல் சார்பு நிலைப்பாடுகள் ஆகியவை ரஜினி ஹேட்டர்ஸ்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தியது..
அரசியல் நுழைவுக்குப் பின்பு எம்.ஜி.ஆரால் பெரிதாகச் சோபித்துவிட முடியவில்லை. அவரேனும் திமுக என்ற ஒரு கட்சியைத் தான் பகைத்தார்.. இவர் இரு பெரும் கட்சிகளையும் பகைத்துவிட்டார்.. இனி சினிமா கஸ்டம் தான் என்று தான் வெகுமக்களே கணித்தனர்.
அதை நிரூபிக்கும் வகையில் காலா படம் வழக்கமான ரஜினி படங்களின் ஓப்பனிங்கை பெறத் தவறியும் இருந்தது. இதற்குத் தூத்துக்குடியில் ரஜினி சொன்னதை மாற்றி, ஊடகங்கள் மக்களின் மனதில் கருத்துத் திணிப்பை செய்தது மிக முக்கியக் காரணம்.
அரசியல் அறிவிப்பால் ஒரு நடிகர் தன் ஒரு பகுதி சினிமா ரசிகர்களை இழப்பது சகஜம் தான் என்றாலும் ரஜினியை விரும்பாதவர்கள் அதையே பெரிதாக்கி பெரிதாக்கி ரஜினி இனி அவ்வளவு தானெனச் சொல்லத் தொடங்கினர்.
2.0 படம் வழக்கமான தீபாவளி ஓய்ந்த ஒரு சாதாரண வியாழக்கிழமை ரிலீசாகி தமிழ்சினிமாவில் கபாலியின் வசூல் சாதனைகளைத் திருத்தி எழுதினாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது.
இனி வழக்கமான ரஜினியிசப் படமெல்லாம் நடிக்க இயலாது. வயதுக்கு ஏற்றப் பாத்திரம் எனக் காலா போலக் கதையை நம்பி தான் ரஜினி நடிக்க முடியும் என மீடியாக்களில் செய்திகள் கசியவிடப்பட்டன.
2019 பொங்கலுக்கு இன்றைய கால நாயகனான அஜீத் விஸ்வாசம் படத்துடன் ரஜினி பேட்ட வேலனாய் மோதலானார்.. ரஜினி அவ்ளோ தான் கோஸ்டிக்கு வெகுசந்தோசம்.. இதில் மட்டும் ரஜினி விழுந்துவிட்டால் இனி எழவே முடியாது எனப் பெரும் ஆவலாய் காத்திருந்தனர்...
வசூல் கணக்குகள் வெளிப்படையாகக் கணிக்கக்கூடிய சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உலகளாவிய இறுதி வசூலிலும் பேட்ட படம் விஸ்வாசம் படத்தை முந்தி ரஜினி தான் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக்காட்டியது.
கதையை நம்பி ரஜினி என்பதைத் திருத்தி வழக்கமான ரஜினியிசப் படமாகவே #பேட்ட வெளியாகிப் பட்டையைக் கிளப்பியது..
கபாலியில் ரீ எண்டரி ஆகி பேட்டயில் மறு பிறப்பாகி இதோ இன்று தர்பாராய் மீண்டும் தன் ஆஸ்தான சிம்மாசனத்தில் அமர்ந்து ஹாயாகப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
ஹேட்டர்ஸ்கள் வயிறும் வாயும் கப கப வென எறிந்து கதறுவதைப் பார்த்து ரசிகர்களான நாங்களும் புன்னகைக்கிறோம்... காலாவில் புக்கிங் ஆகவில்லை என்று கதறிய வாய்கள் #தர்பார் நிகழ்த்தும் முன்பதிவு மேஜிக்கை பார்த்து விக்கித்து நிற்கின்றன!
எங்கே மீண்டும் ஒரு கபாலியாகத் தர்பார் சரித்திரம் படைத்துவிடுமோ என்று அச்சத்தில் உறைந்து நிற்கின்றனர்.
ரஜினிக்கு எதிராகக் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை செய்தி திரிபுகள், போலியான எதிர்ப்புச் செய்திகள், வேண்டும் என்றே உருவாக்கப்படும் சர்ச்சைகள்!
அத்தனையும் தாண்டி அவர் நம்பும் கடவுளின் அருளால் இன்று தர்பாரிலும் அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருக்கிறார். எப்படி இவ்வளவு பேர் ரஜினி படத்தைப் பார்க்க வருகின்றனர்!! என்று ஹேட்டர்ஸ் குழம்பி தவிக்கின்றனர்.
ஆம்! அரசியலுக்குள் நுழைந்த பின்பும் சூப்பர்ஸ்டாராய் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாய் திரை உலகின் உச்ச நட்சத்திரமாய்த் திகழ வேறு யாரால் முடியும்...?
ரஜினியால் மட்டுமே முடியும்... 😎â¤ðŸ˜˜ðŸ¤˜ðŸ’¥ðŸ¤˜
- ஜெயசீலன்
|