எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்தும் நண்பகல் 12.00 மணியளவில் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்...
எம்.எஸ்.வி., ஓர் அபூர்வமான மனிதர். சினிமா துறையில் மட்டுமல்லாது எல்லா துறையிலும் நன்கு பழக்கூடிய கள்ளம் கபடம் இல்லாதவர். ஒரு துறவி போல வாழ்ந்தார் எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் பாராட்டிய மனிதர் எம்.எஸ்.வி., அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். எம்.எஸ்.வி.யின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
|